இன்று மங்களகரமான ஆடிப்பூரம்..
ஆடிப் பூரம் - சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாளின் இம்மண்ணில் தோன்றிய நாள்..
ஸ்ரீ வில்லிபுத்தூரில் கோலாகலமாக விழா நடந்து கொண்டிருக்கின்றது....
அம்பிகை - பொங்கும் மங்கலத்தில் பூத்து நின்ற நாள் - பூரம்!..
ஊழிகளின் தொடக்கத்தில் - புவனம் முழுதையும் பூத்து அருள்வதற்காக - ஜகத் ஜனனியாகிய அம்பிகை - புஷ்பவதியாக பூத்து நின்றருளினள்.
அந்த மங்கலம் அனுசரிக்கப்படும் நாளே - ஆடிப் பூரம்!..
அம்மன் சந்நிதிகள் கோலாகலமாக விளங்கும் நாள்..
பற்பல திருக்கோயில்களிலும் ஆடிப்பூர வைபவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன...
சிவனடியார் திருக்கூட்டம் மற்றும்
நண்பர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற படங்கள் இன்றைய பதிவில்..
நண்பர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற படங்கள் இன்றைய பதிவில்..
நிகழ்வுகளை வலையேற்றிய நன்னெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி...
ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி - திருஐயாறு |
ஆடி அமாவாசையன்று திருவையாற்றில் நிகழ்ந்த
அப்பர் பெருமான் கயிலாய தரிசனக் காட்சியும் ஆடிப்பூர தரிசனமும்...
கடந்த வெள்ளியன்று
தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மனுக்கு பூச்சொரியல் வைபவம்..
நெல்லையில் நிகழும் ஆடிப்பூர திருநாள் விழாவில்
ஸ்ரீ காந்திமதியம்மனின் திருக்கோல தரிசனம்...
ஸ்ரீ காந்திமதியம்மை - நெல்லை |
ஸ்ரீ வில்லிபுத்தூரில் கோலாகலமாக விழா நடந்து கொண்டிருக்கின்றது....
எத்தனை எத்தனையோ மங்கலங்களுக்கு இருப்பிடம் ஆடி மாதம்!..
ஆடித் தள்ளுபடி!.. அது.. இது!.. - என அலைவோர் மத்தியில் -
தெய்வ தரிசனம் கண்டு உய்வடைவோர் ஆயிரம்.. ஆயிரம்..
இந்த நாட்களில் - ஒருவருக்கொருவர் முகமன் கூறி - அன்பினைப் பரிமாறிக் கொள்ளுவதே சிறந்த நலன்களுக்கு அடிப்படை என்கின்றனர் ஆன்றோர்.
ஆடி மாதத்தில், அம்மன் கோயில்களில் - ஆடம்பரமின்றி -
ஏழை எளியவர்க்கு கூழ் வார்த்து வேண்டுதல் செய்வது அன்பின் வெளிப்பாடு..
மஞ்சள், குங்குமம், சந்தனம், வளையல் இவற்றுடன் தாம்பூலம் வைத்து அக்கம்பக்கம் அண்டை அயலாருடன் நட்பைப் பேணுதல் சிறப்பு..
அதிலும் முக்கியமாக -
ஏழைப் பெண் குழந்தைகளுக்கு இயன்றவரை புத்தாடை வளையல்களை வழங்கி மகிழ்வித்தால் - அம்பிகையை மகிழ்வித்ததாக ஆகின்றது..
அம்பிகை மனம் மகிழ்ந்தால் - நிலையான செல்வம் நமது வீட்டில் குடி கொள்ளும் என்பது திருக்குறிப்பு..
ஆயுளும் ஆரோக்யமும் ஐஸ்வர்யமும் பெருகி - இல்லத்தில்
மகிழ்ச்சி நிலையாக குடிகொள்வதில் அனைவருக்கும் விருப்பம்!..
அவ்வண்ணம் நிகழ்வதற்கு அம்பிகையை வேண்டுவோம்!..
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து..
ஓம் சக்தி ஓம்..
* * *
குட்மார்னிங்.
பதிலளிநீக்குஇன்று நாக சதுர்த்தி இல்லையோ....
அன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு..
சதுர்த்தி திதி.. பூர நட்சத்திரம்..
ஆடிப்பூர வைபவமும், அப்பர்பெருமான் தரிசனமும்... நன்றி.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...
பூவெள்ளத்தின் பின்னே புன்னைநல்லூர் அம்மா... வணங்குகிறேன்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுடன் நானும் வணங்கிக் கொள்கிறேன்..
மகிழ்ச்சி.. நன்றி...
அம்பிகை புஷ்பவதியாக....சிறப்பாக நளினமாக உங்கள் பாணியில் கூறியதோடு பல அரிய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளீர்கள். அருமை.
பதிலளிநீக்குஅழகான பூச்சொரிதல், இதற்கு முன்னால் கண்டதில்லை. கூட்டம் காரணமாகப் போக முடியாது! எல்லா ஊர் அம்பிகைகளும் இங்கே வந்து விட்டனர். அனைவரையும் தரிசிக்க முடிந்தது. மதுரை முளைக்கொட்டு உற்சவம் நினைவில் நிழலாடுகிறது. கோலாட்டத்துக்குப் போவோம்! அதெல்லாம் ஒரு காலம்.
பதிலளிநீக்குதங்களன்பின் வருகைக்கு மிகவும் மகிழ்ச்சியக்கா...
நீக்குஏதோ நல்ல வைபவங்களின் படங்களை இயன்றவர்கள் வலையேற்றுகிறார்கள்...
அவர்களைக் கொண்டு நானும் பதிவில் தருகின்றேன்..
50/60 படங்களுக்கு மேலாக இருக்கும்.. அதில் தேர்ந்தெடுத்த படங்களை மட்டும் பதிவிடுகின்றேன்...
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...
எங்கள் ஊரிலும் பூச்சொரிதல் விழா தொடக்கமாகி விட்டது ஜி
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
புகழ்பெற்ற அம்மன்களை ஒரே இடத்தில் பார்த்து தரிசனம் செய்யும் ஒரே இடம் தஞ்சையம்பதி இருக்கும் போது கவலையே இல்லை, அங்கு போக முடியவில்லையே ! என்று.
பதிலளிநீக்குஅனைத்து அம்மன்களையும் தரிசனம் செய்து கொண்டேன்.
மதுரையில் நேற்று காலை மீனாட்சி அம்மன் கோவிலில் போனோம், முளை கொட்டு உற்சவம் காலையும், மாலையும் நடைபெறும் . என்று அதையும் பார்த்து விடலாம் என்று போனால் , மீனாட்சி என்னைப் பார்க்க தனியாக எனக்காக வா என்று சொல்லி விட்டார். மூலவரை தரிசனம் செய்தோம், உற்சவரை திரையிட்டு விட்டார்கள். இன்னொரு நாள் அழைப்பாள் என்று நினைக்கிறேன்.
தொலைக்காட்சியில் புன்னைநல்லூர் மாரியம்மன் பூச்சொரிதல் காட்டினார்கள்.
பூக்கூடைகள் பூக்களுடன் அணிவகுத்த காட்சியை காட்டினார்கள்.
உங்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி.
தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
நீக்குதிருவிழா படங்களை வலையேற்றித் தரும் அடியார் திருக்கூட்டத்துக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்...
நானும் கண்குளிர தரிசனம் செய்து கொள்கிறேனே...
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
மிக்க நன்றி ஐயா... இதைவிட வேறென்ன வார்த்தைகள் சொல்ல...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
மலர்களுக்குள் ஒரு மலர்!
பதிலளிநீக்குபடங்கள் அத்தனையும் சிறப்பு. நல்ல தரிசனம். புன்னை நல்லூர் அம்மன், அப்பர் பெருமான், நெல்லை ஆடிப்பூர அலங்காரம் என்று அத்தனையும்..
கீதா
அன்பின் கீதா..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...
ஆடிப் பூரம் நன்னாளில் பல ஊர்களில் நிகழ்ந்த வைபவங்களை படங்கள் மூலம் காணக் கொடுத்தமை சிறப்பு. நன்றி ஐயா.
பதிலளிநீக்குஅன்னையின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்...
அன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...