இன்று ஸ்ரீராம நவமி..
நல்லறமும் நட்பும்
எங்கும் சிறந்தோங்குதற்கு
வேண்டிக் கொள்வோம்..
***
ஈசன் எம்பெருமானின் திருவருளால்
நல்லறமும் நட்பும்
எங்கும் சிறந்தோங்குதற்கு
வேண்டிக் கொள்வோம்..
***
ஈசன் எம்பெருமானின் திருவருளால்
மதுரையம்பதியின் திருவிழாக்காட்சிகள்
தொடர்கின்றன..
நிகழ்வுகளை வலையேற்றிய
அன்பின் நண்பர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
நிகழ்வுகளை வலையேற்றிய
அன்பின் நண்பர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
ஐந்தாம் (12/4) திருநாள் காலை
தங்கச் சப்பரத்தில் திருவீதி எழுந்தருளல்
அந்த ணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாது செயத் திருவுள்ளமே
வெந்த நீறது அணியும் விகிர்தனே..
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.. (3/108)
-: திருஞான சம்பந்தர் :-
வழுவிலாது உன்னை வாழ்த்தி வழிபடுந் தொண்டனேனுன்
செழுமலர்ப் பாதங் காணத் தெண்திரை நஞ்சமுண்ட
குழகனே கோலவில்லீ கூத்தனே மாத்தாயுள்ள
அழகனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே..(3/62)
-: திருநாவுக்கரசர் :-
வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்
தூயானைத் தூவெள்ளை ஏற்றான் தன்னைச்
சுடர்த் திங்கள் சடையானைத் தொடர்ந்து நின்றென்
தாயானைத் தவமாய தன்மை யானைத்
தலையாய தேவாதி தேவர்க்கு என்றும்
சேயானைத் தென்கூடல் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே..(6/19)
-: திருநாவுக்கரசர் :-
ஆலவாய் அமர்ந்த அரசே போற்றி..
அங்கயற்கண் அம்பிகையே போற்றி.. போற்றி..
ஃஃஃ
இனிய காலை வணக்கம் துரை அண்ணா.
பதிலளிநீக்குபடங்கள் கண்டு தரிசனம் பெற்றோம்.
இப்போதும் திருவிழாவில் குழந்தைகள் அழகாக கோலாட்டம் அடித்து, சிறப்பான அலங்காரத்தில் வரிசையாக நின்று கொண்டு பங்குபெறுவது என்பது மிகவும் நல்ல விஷயம் இல்லையா?
கீதா
மதுரைத் திருவிழா மிகவும் புகழ் பெற்றது என்று தெரிகிறது.
பதிலளிநீக்குஊரே திரண்டு கொண்டாடுகிறது அதுவும் குழந்தியகள் உட்பட. நாட்டுப்புற கலைகள் என்று அருமை. குழந்தைகளும் ஆர்வமும் பங்கேற்பது எத்தனை சிறப்பான விஷயம்!!!
அந்தச் சின்னக் குழந்தை வெகு அழகு!
கீதா
அருமையான படங்கள்... அழகிய தரிசனம்... நன்றி ஐயா...
பதிலளிநீக்குவழக்கம் போல இன்றைய தரிசனமும் அருமை ஜி வாழ்க நலம்.
பதிலளிநீக்குமிக சிறப்பு...
பதிலளிநீக்குஇனிய தரிசனம் ...நன்றி
படங்களோடு கூடிய நல்ல பதிவு. அழகான நாவுக்கரசரின் பதிகத்திற்கு சிறப்பு நன்றி.
பதிலளிநீக்குஅபபனும், அம்மையும் தங்க குதிரை வாகனத்தில் வரும் காட்சியும் கோவிலுக்குள் நுழையும் போது எதிர் கொண்டு அழைக்கும் சுந்தர்ர்ருக்கு இழந்த பொருளை அளித்தல் நடைபெறும்.
பதிலளிநீக்குதிருமுருகன் பூண்டியில் தன்னை தரிசிக்காமல் போன சுந்தரரை தம் ஆலயத்துக்கு வரவழைக்க தன் சிவகணங்களை அனுப்பி சுந்தரரின் செல்வங்க்களை களவாட வைக்கிறார்.
சுந்தரர் வேடர்கள் பறிப்பதை பார்த்து கொண்டு ஏன் என்னை காக்காமல் விட்டீர் ? என்று கேட்க சிவபெருமான் சிவகணங்கள் மூலம் பொருளை திருப்பி ஒப்படைக்கும் காட்சியும் நடைபெறும் திருவிழா நேற்று.
படங்கள் எல்லாம் மிக அழகு.
சித்திரை திருவிழா படங்கள் தொகுப்பு சிறப்பாக இருக்கிறது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்குபடங்கள், பகிர்வுகள் அருமை. மதுரையிலேயே மனம் இருக்கிறது. ஆனால் போய்ப் பார்க்க இயலாததற்கு வருத்தமாயும் இருக்கிறது! அங்கேயே இருந்திருந்தாலும் கூட்டம் காரணமாய்ப் போயிருப்பேனா, சந்தேகமே! :(
பதிலளிநீக்குஅன்னையின் அருள் பொங்கிப் பிரவகிக்கட்டும். நாடு நல் மழை அருள் மீனாட்சித் தாயே.
பதிலளிநீக்குஅன்பு துரை மதுரைக் காட்சிகளைக் கண்டும் மனம் களிக்கிறது.
வண்ணமாக அன்னையரும் சிறுமியரும் பெண்ணாட்சியை வெளிப்படுத்துகிறார்கள்.
அந்தக் குழந்தைதான் எத்தனை வியப்போடு பார்க்கிறது.
மதுரைக்கே சென்ற மகிழ்ச்சியைத் தருகிறீர்கள். என்றும் வாழ்க வளமுடன்.
துரை அண்ணா இனிய புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும்.
பதிலளிநீக்குகீதா