நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி
ஞாயிற்றுக்கிழமை
இன்று துலா மாதப் பிறப்பு... (18/10)
காவிரியாள் தனது மக்களுக்கு எல்லா வளங்களையும் வாரி வழங்கிச் செல்லும் சீர்மிகு நகர்களுள் மயிலாடுதுறையும் ஒன்று... இதன் பெயர்களுள் ஒன்று மாயூரம்.
ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா?..'' - எனும் சொல் வழக்கு தஞ்சை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தமானது.
என்ன காரணம்?...
உமா மகேஸ்வரியாகிய
அம்பிகை மயிலாகத் தோன்றி சிவபூஜை செய்து இறைவனின் மயூர தாண்டவத்தை இங்கு தான் காணப் பெற்றாள்...
இங்கு தான் காவிரியுடன் கலந்து கங்கையும் புனிதம் கொண்டாள்..
அந்நாள் ஐப்பசியின் முதல் நாள்...
அன்று தொட்டு கார்த்திகை முதல் நாள் வரை இறைவனின் ஆணைப்படி கங்கா தேவி மயிலாடுதுறை துலா கட்டத்தில் காவிரியுடன் உறைகின்றாள் என்பது ஐதீகம்...
இந்நேரத்தில் சோழ தேசத்தின் நீர்நிலைகளில் எல்லாம் கங்காதேவி வியாபிக்கின்றாள் என்பர் ஆன்றோர்..
அந்த வகையில் நமது வீட்டிற்குள்ளும் கங்காதேவி வந்திருக்கின்றாள்...
இந்நாட்களில் மயிலாடுதுறை துலா கட்டத்தில் நீராடி - முன்வினை எல்லாம் நீங்கப் பெற்று அம்மையப்பனின் அருள் பெறுவோம்....
கங்கையாள் போற்றி
காவிரியாள் போற்றி..
***


முக்கிய விருந்தினர் வருகை. வருடத்துக்கொரு முறை நிகழும் வரவு. மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. மயூரத்தின் சிறப்பை அறிந்து கொண்டேன். துலா முழுக்கு காலங்காலமாய் பிரசித்தி பெற்றது. காவிரி, கங்கை அன்னைகள் அனைவருக்கும் தங்களது நல்லருளை தரும்படி வேண்டிக் கொள்கிறேன். அம்மையப்பன் அனைவருக்கும் எந்நாளும் துணையாக நின்றபடி அனைவரையும் காத்தருளவும் பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் வருகையும் பிரார்த்தனையும் கருத்தும்
நீக்குமகிழ்ச்சி..
நன்றியம்மா
துலா மாதப் பிறப்பு - நல்லதையே அனைவருக்கும் அருளட்டும்.
பதிலளிநீக்குஇன்றையிலிருந்து துலா ஸ்னானம் - காவிரி ஆற்றில் ஸ்னானம் செய்ய இங்கே நிறைய மனிதர்கள் வந்த வண்ணம் இருப்பதை இன்று காண முடிந்தது.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி வெங்கட்
துலா மாதத்தில் மயிலாடு துறையில் கங்காதேவியின் வருகை அறிந்தோம்.
பதிலளிநீக்குவணங்கி நிற்கிறோம் அவள் பாதம்.
அம்மை அப்பா சரணம்.
அன்பின் வருகையும் கருத்தும்
நீக்குமகிழ்ச்சி..
நன்றியம்மா