நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
செவ்வாய்க்கிழமை
உடல் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த செவ்வாய் அன்று வைத்தீஸ்வரன் கோயிலில் தரிசனம்..
வெளித் திருச்சுற்றில் எடுக்கப்பட்ட படங்கள் இவை..
பேரா யிரம்பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கு என்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத் திண் சிலை கைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 6/54/8
-: திருநாவுக்கரசர் :-
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
ஆலய தரிசனம் நன்று. உங்கள் பதிவு வழி நாங்களும் தரிசனம் கண்டோம். நன்றி.
பதிலளிநீக்குநல்லதே நடக்கட்டும்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நீக்குநன்றி வெங்கட்
வைத்தீஸ்வரன் கோவில் சென்றதில்லை. உடல் நலனை கருத்தில் கொண்டு என்று எழுதி இருக்கிறீர்கள். நேற்று மாலை முதல் ஜுரம், சளி, இருமல். இப்போதுதான் நாளை பதிவை தயார் செய்ய வேண்டுமே என்று எழுந்து வந்தேன்.
பதிலளிநீக்குவைத்தீஸ்வரன் கோயிலுக்கு அவசியம் வாருங்கள்
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்
"தீராநோய் தீர்த்தருள வல்லான்...."
பதிலளிநீக்குஅனைவர் நலனுக்கும் வேண்டி அவன் பாதம் சரண்அடைவோம்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நீக்குநன்றியம்மா
உங்கள் உடல் நலனை வைத்திய நாதன் காக்கட்டும்.
பதிலளிநீக்குதேவாரத்தை பாடி வைத்திய நாதனை வேண்டிக்கொண்டேன்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நீக்குநன்றியம்மா