நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூலை 07, 2024

கசப்பு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 23
ஞாயிற்றுக்கிழமை



கசப்பு :

இது பொதுவாக எவராலும் விரும்பப்படாத சுவையாகும். இருப்பினும், உடலுக்கு ஏராளமான நன்மைகளைத் தருகின்றது என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை..

கசப்புச் சுவை நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றது.. குடலில் கிருமிகளை நீக்குகின்றது... 

இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கின்றது..


பாகற்காய் வறுவல் .. 

தேவையானவை :

பாகற்காய்  1⁄2  kg 
பெரிய வெங்காயம் ஒன்று
தக்காளி  ஒன்று
மஞ்சள் தூள் 1⁄2   tsp 
மிளகாய்த்தூள் 1 Tbsp
புளி சிறிதளவு 
வெல்லம் 50 gr
கல் உப்பு தேவைக்கேற்ப

தாளிப்பதற்கு :
கடலெண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - 1⁄2   tsp 
சீரகம் - 1⁄2   tsp 
உளுத்தம் பருப்பு  1⁄2   tsp 
கறிவேப்பிலை ஒரு இணுக்கு 


செய்முறை :

முதலில் பாகற்காய், வெங்காயம் தக்காளி இவைகளை - சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். 

புளியை சிறிதளவு வெதுவெதுப்பான நீரில்  ஊற வைத்துக் கரைக்கவும்.. . 


வாணலி ஒன்றில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு சீரகம் உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

அடுத்து, பாகற்காயை போட்டு நன்கு வதக்கவும். எண்ணெயில் நன்கு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். அடுத்து தக்காளியைச் சேர்க்கவும்.

இதனுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து, நன்கு வதக்கவும். 

எதற்காகவும் தண்ணீர் விட வேண்டாம்..

எல்லாமும் சேர்ந்து நன்றாக  வெந்து சிவந்ததும், கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீரையும்  வெல்லத்தையும்  சேர்க்கவும்.  

மசாலா இறுகி சுருண்டு, வேண்டிய பதத்திற்கு வந்ததும் இறக்கி விடவும்..


இது சுருளச் சுருள இருக்கும்..  
தளதளப்பாக வேண்டும் என்றால் அது வேறு விதம்..

பாகற்காய் கூட்டு..

வாரம் ஒரு முறையாவது
உணவில் கசப்பு சேர்த்துக் கொள்வது நல்லது.. மிக மிக நல்லது.. முயற்சிக்கவும்..

(ஒளிப்படங்கள் : நன்றி இணையம்)

(இங்கே, உணவின் படங்களுக்கும் பக்குவத்திற்கும் சம்பந்தம் இல்லை..  ஆனாலும் நன்றி..)
இந்த அளவில் 
உணவுத் திருவிழா பதிவுகள் 
நிறைவடைகின்றன..
தொடர் பதிவுகளுக்கு நல்லாதரவு நல்கிய நன்னெஞ்சங்களுக்கு அன்பின் நன்றி..

நமது நலம்
நமது கையில்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. கசப்பு எனக்கு பிடிக்கும். காபியை கசப்பாகத்தான் குடிப்பேன். பாகற்காய் எனக்குப் பிடித்த காய்கறிகளில் ஒன்று. மிகவும் பிடித்த!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுக்கு எதுக்கு காபி குடிக்கணும்? ஒழுங்கா தர்ற காபியின் கசப்பே எனக்கு சகிக்கலை.

      நீக்கு
    2. அதுதானே...

      இங்கே காஃபி என்று அதன் பெயரைக் கெடுத்து விட்டார்கள்

      நீக்கு
    3. பாகற்காய் பிடித்த காய்கறிகளில் ஒன்று. மிகவும் பிடித்தது!..

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. //கசப்பு :
    இது பொதுவாக எவராலும் விரும்பப்படாத சுவையாகும்//

    பாகற்காய் எனக்கு மிகவும் பிடித்தமானது ஜி

    பதிலளிநீக்கு
  3. எனக்குக் கசப்பும் பிடிக்கும் பாகலும் ரொம்பப் பிடிக்கும்.

    பாகற்காய் வறுவல் செய்முறை நல்லாருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. மிதில் பாவை என்று சொல்லபடும் , குட்டி பாகற்காய் தான் மிகவும் பிடிக்கும். பெரிய பாகற்காயும் செய்வேன்.
    பாகற்காய் கூட்டு பக்குவம் அருமை.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய பகிர்வில் கசப்புச் சுவை உடலுக்கு நல்ல அருமருந்து. நீங்கள் குறிப்பிட்டுள்ள பாகற்காய் எனக்கு மிகவும் பிடிக்கும். அதை எங்கள் வீட்டில் பல விதங்களில் சமையல் செய்து சாப்பிடுவோம். (கறி, கூட்டு, பிட்லை, உசிலி போன்றவை.) நீங்கள் பகிர்ந்துள்ள முறையும் அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. கசப்புச் சுவை - நல்லது. பாவக்காய் பலருக்கும் பிடிக்காது என்றாலும் நல்லதே.

    பதிலளிநீக்கு
  7. கசப்பு அருமை.

    பாகற்காய் எங்கள் வீட்டில் பிடிக்கும் பால்கறி, குழம்பு, இதேபோல் பொரியல் ,சம்பல் செய்வோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..