நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, அக்டோபர் 29, 2023

திகட்டா அமுது


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 12
ஞாயிற்றுக்கிழமை

நேரம் அமையும் போதெல்லாம் புன்னை நல்லூருக்குப் புறப்பட்டு விடுவோம்..

அதிகாலை ஐந்து மணியில் இருந்து இரவு பத்து மணி வரைக்கும் கோயில் திறந்திருக்கும்.. 

ஞாயிறு செவ்வாய் வெள்ளி தவிர்த்த மற்ற நாட்களின் மதியப் பொழுதுகள் நெரிசல் இல்லாமல் இருக்கும்..

அன்னையைத் தரிசித்த பிறகு 
அங்கும் இங்குமாகப் படம் எடுப்பதே வேலை..

இதனால் பதிவில் திரும்பத் திரும்ப கோயில் படங்கள் வருவதை தவிர்க்க இயலவில்லை..
 
முன் மண்டபத்தில் ஸ்ரீ காளியம்மன் - ஐயனார்..


மன்னர் துளஜா

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்









 நிழற்கூரை 





மராட்டியர் காலத்து மண்டபத்துத் 
தூண்களில் இது மாதிரி சிதைவுகள் 
காணப்படுகின்றன..






இங்கே உடைபடும் தேங்காய்களின் நீரை மக்களுக்கு வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட  உபகரணங்கள் 
ஒரு ஓரமாக இருக்கின்றன.. 






மூன்றாம் திருச்சுற்றில்
புன்னையும் வேம்பும் 
நாக பிரதிஷ்டைகளும்
உள்ளன..



விளக்கு நாச்சியார்

புண்ணியமே பூத்ததம்மா
புன்னை எனும் பூவனத்தில்
பொங்குநலம் எல்லாமும்
பூத்துவரும் இவ்விடத்தில்..

மண்ணளந்த நாயகியும்
மடியளக்கும் பூவனத்தில்
மங்கலங்கள் தான்தருவாள் 
மனங்கொண்ட பேரிடத்தில்..

திகட்டா அமுதெனத் திகழ்கின்ற தாயே..
திருமுகங் காட்டித் திரு அருள்வாயே..
திக்கெல்லாம் ஆள்கின்ற திருவுடையாளே
தீவினை தீர்த்து துணை வருவாயே..

எல்லாம் அறிந்தவள் உன்னிடத்தில்
ஏதெனச் சொல்வேன் என் குறையை..
எல்லாம் அறிந்தவள் நீயே நீயே முன்னின்று 
காத்திடு காத்திடு காத்திடுவாயே..
**
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
 
ஓம் சிவாய  திருச்சிற்றம்பலம்
***

15 கருத்துகள்:

  1. படங்கள் யாவும் சிறப்பு. துதிப்பாடல் அருமை. புன்னைநல்லூர் அன்னையை நானும் வணங்கிக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புன்னைநல்லூர் அன்னையை நானும் வணங்கிக் கொள்கிறேன்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. இளநீர் சேகரிப்பு நல்ல செயல், முயற்சி. மராத்தியர் கால தூண்கள் சிதிலமடைந்திருப்பது வருத்தம் தருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த இயந்திரம் இப்போது பயன்பாட்டில் இல்லை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. புன்னை நல்லூர் மாரியம்மன் தரிசனம் இன்றும் கிடைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

    தாங்கள் அம்மனை குறித்து பாடிய பாமாலை மிக நன்றாக உள்ளது. அன்னை சரஸ்வதி உங்கள் சிந்தையில் திகட்டாத அமுதமாக என்றுமிருந்து அருள் பாலிக்கிறாள். 🙏. தங்களின் அற்புதமான புலமைக்கும் தலை வணங்குகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மனை குறித்து பாடிய பாமாலை மிக நன்றாக உள்ளது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  4. படங்கள் அனைத்தும் அருமை ஐயா...

    ஓம் சக்தி ஓம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி தனபாலன்..

      நீக்கு
  5. அம்மன் பாடல் பாடி மகிழ்ந்தோம். அழகிய பாடல்.
    அன்னையவள் பாதம் பணிகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. படங்கள் எல்லாமே மிகச் சிறப்பு. நீங்கள் எழுதியிருக்கும் பாமாலையும் அருமை. அட! தேங்காய் உடைத்த நீரை இப்படிச் சேகரித்து வழங்குவது நல்ல விஷயம்.

    இப்போது அந்த முற்றம் சுற்றி நிழற் கூரை போட்டிருக்காங்க என்று தெரிகிறது முன்பு பார்த்த நினைவில்லை. தூண்களைப் பார்க்கும் போது மனசு வேதனை. பரமாரிக்க முடியாதா? கோயிலுக்கு வருமானம் இருக்கும் என்று தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேங்காய் நீரை இப்படிச் சேகரித்து வழங்குவது..

      அந்த இயந்திரம் இப்போது பயன் பாட்டில் இல்லை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
  7. நீங்கள் எழுதிய அன்னையின் பாமலையை பாடி புன்னை நல்லூர் அம்மனை வேண்டி கொண்டேன்.
    மீண்டும் தரிசனம் கிடைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
    குரங்கார் விளக்கு ஏற்றி வேண்டி கொள்வது போல இருக்கிறது. தேங்காய் உடைத்த நீரை சேகரிக்கும் இயந்திரத்தை பார்த்த நினைவு இல்லை. இப்போதுதான் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. // தேங்காய் உடைத்த நீரை சேகரிக்கும் இயந்திரத்தை.. //

    அந்த இயந்திரம் இப்போது ஓரமாக உள்ளது..

    தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

    பதிலளிநீக்கு
  9. தேங்காய் உடைத்த நீரைச் சேமித்து வைத்து விநியோகிக்கும் வழக்கம் புதிது. புன்னை நல்லூர் சென்றபோது பார்த்த ஞாபகம் இல்லை. உங்கள் பாமாலை சிறப்பு, எளிமை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..