நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், அக்டோபர் 12, 2023

மருந்து 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 25
வியாழக்கிழமை


திருப்பதிகப் பாடல்கள்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..

நம்மைச் சூழ்கின்ற நோய்களுக்கு - இறைவனே அருமருந்து!.. - என்று அடையாளம் காட்டுகின்ற வகையில் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிச் செய்துள்ள திருப்பாடல்கள் சிலவற்றை இன்றைய பதிவில் காண்போம்..

திரு கற்குடி
உய்யக்கொண்டான்

ஸ்ரீ உஜ்ஜீவநாதர்
ஸ்ரீ அஞ்சனாக்ஷியம்மன்

சிலையால் முப்புரங்கள் பொடி
யாகச் சிதைத்தவனே
மலைமேல் மாமருந்தே 
மட மாதிடங் கொண்டவனே
கலைசேர் கையினனே திருக்
கற்குடி மன்னிநின்ற
அலைசேர் செஞ்சடையாய் அடி
யேனையும் அஞ்சலென்னே.. 7/27/3



திரு கச்சூர்

ஸ்ரீ விருந்திட்ட வரதர்
ஸ்ரீ அஞ்சனாக்ஷியம்மன்

மேலை விதியே விதியின் பயனே
விரவார் புரமூன் றெரிசெய்தாய்
காலை எழுந்து தொழுவார் தங்கள்
கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே
மறவேன் அடியேன் வயல்சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.. 7/41/5

திரு வாழ்கொளி புத்தூர்

ஸ்ரீ ரத்னபுரீஸ்வரர்
ஸ்ரீ வண்டார்குழலி

திருந்த நான்மறை பாடவல் லானைத்
தேவர்க்கும் தெரிதற்கு அரி யானைப்
பொருந்த மால்விடை ஏறவல் லானைப்
பூதிப் பைபுலித் தோலுடை யானை
இருந்துண் தேரரும் நின்றுணுஞ் சமணும்
ஏச நின்றவன் ஆருயிர்க் கெல்லாம்
மருந்து ஆனான்தனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே.. 7/57/10


திரு ஆவடுதுறை

ஸ்ரீ மாசிலாமணியீசர்
ஸ்ரீ அதுல்யகுஜாம்பிகை

வான நாடனே வழித்துணை மருந்தே
மாசிலா மணியே மறைப் பொருளே
ஏன மாஎயிறு ஆமையும் எலும்பும்
ஈடு தாங்கிய மார்புடை யானே
தேன் நெய் பால்தயிர் ஆட்டுகந் தானே
தேவ னேதிரு வாவடு துறையுள்
ஆனை யேஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே.. 7/70/9


திரு நனிபள்ளி

ஸ்ரீ நற்றுணையப்பர்
ஸ்ரீ பர்வதராஜபுத்ரி

திங்கட் குறுந்தெரியல் திகழ்
கண்ணியன் நுண்ணியனாய்
நங்கட் பிணிகளைவான் அரு
மாமருந்து ஏழ்பிறப்பும்
மங்கத் திருவிரலால் அடர்த்
தான்வல் அரக்கனையும்
நங்கட் கருளும்பிரான் நண்ணும்
ஊர்நனி பள்ளியதே.. 7/97/8
 

ஸ்ரீ சுந்தரர்
திருவடிகள் போற்றி..
*
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. துன்பங்களை தாங்கும் பலத்தையும், இன்பத்தில் ரொம்ப ஆடாதிருக்கவும் அந்த இறைவனை வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. // துன்பங்களை தாங்கும் பலத்தையும், இன்பத்தில் ரொம்ப ஆடாதிருக்கவும்..//


      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நம்மை சூழுகின்ற நோய்களுக்கு இறைவனே அருமருந்து. நல்லதொரு வரிகள். இறைவன் நாமமே நம் பிணிகளை போக்கும். ஸ்ரீ சுந்தரர் பெருமான் பாடியருளிய பதிகங்களை பாடி, என்னப்பன் ஈசனை பணிந்து வணங்கிக் கொண்டேன். அத்தனை கோவில் தரிசனங்களும் மனதிற்கு தெம்பளிகின்றது. நீங்கள் பகிர்ந்த அந்தந்த கோவில் இறைவன் இறைவியின் பெயர்களை உச்சரிக்கையில் மனதுக்குள் ஒரு மகிழ்வு பிறக்கின்றது. இறைவன் அனைவரையும் நோய் நொடிகளின்றி காத்தருள வேண்டுமென பிரார்த்தனை செய்து கொண்டேன். இதன் முந்தைய பதிவுகளை படித்து விட்டு பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அந்தந்த கோவில் இறைவன் இறைவியின் பெயர்களை உச்சரிக்கையில் மனதுக்குள் ஒரு மகிழ்வு பிறக்கின்றது ///

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  3. துன்பங்களை நீக்க இறைவனே அருமருந்து . பாசுரங்கள் பாடி வணங்கினோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  4. சுந்தரர் தேவாரம் படித்து இறைவனை வணங்கி கொண்டேன்.
    இறைவனே அருமருந்து ! எல்லோரையும் காக்க வேண்டும் இறைவன்.

    பதிலளிநீக்கு
  5. இறைவனே அருமருந்து ! எல்லோரையும் காக்க வேண்டும் இறைவன்..

    தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
    நன்றி ..

    பதிலளிநீக்கு
  6. சின்னக் குழந்தைகள் முக்கியமாய்ப் படுத்தல் அதிகமாய் இருக்கும் குழந்தைகள் இங்கே வந்து மந்திரித்துக் கயிறூ போடுகின்றார்கள். இந்த விஷயம் எனக்கு இங்கே வந்தப்புறமாத் தான் தெரியும். என் மாமா பேரனுக்கு இங்கே அழைத்து வந்து மந்திரித்தார்கள். அதே போல் இன்னும் சிலரின் குழந்தைகளூக்கும்.

    பதிலளிநீக்கு
  7. உய்யக்கொண்டான் திருமலை என இங்கே சொல்கிறார்கள். இந்தக் கோயில் இருப்பதே சமீபமாகத் தான் தெரியும். எங்க குட்டிக் குஞ்சுலு சாப்பிடப் படுத்தியதால் பையரையும், மருமகளயும் குஞ்சுலுவோடு போகச் சொல்லிப் போயிட்டு வந்தாங்க. நாங்க போனதே இல்லை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..