நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், அக்டோபர் 10, 2023

மருந்து 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 23
செவ்வாய்க்கிழமை


தொகுப்பிற்குத் துணை :- 
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..

என்னென்னவோ பிரச்னைகள் - எல்லாருக்கும்..

உடலுக்கும் மனதிற்குமாக!..

எப்படி விடுவது..
எப்படி விடுபட்டு வருவது?..

கேள்விகள் பற்பல.. 
ஆனால், 
அவற்றுக்கான விடை நம்மிடம் கிடையாது..

அப்படியானால் இதற்கு
என்ன தான் தீர்வு?..

அவனைச் சரணடைதல் ஒன்றே வழி 

- ஞான வழிகாட்டி ஆகிய  தேவாரம் புகல்வது இதைத்தான்..

உள்ளத்திற்கும் உடலுக்குமான  - மருந்து - இறைவனே!. அவனது திரு அருளே!..

அபூர்வமாக ஒரு சில இடங்கள் தவிர்த்து -
பிறவியையும் அதன் வழி நாம் அடையும் துன்ப வினைகளையும்  பிணி/நோய் என்றே குறிக்கின்றனர்..

இத்தகைய நோய்க்கு அவனே - அவனது திருவடிகளே - அரு மருந்து என்று அடையாளம் காட்டுகின்றனர்..

இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழு தெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே..

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக் கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.. 3/4/1

- என்று, 
நேரிடையாக வேண்டிக் கொள்வதையும் சிந்திக்க வேண்டும்.. 

அந்த வகையில் ஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்துள்ள திருப் பதிகங்களில் இருந்து ஒரு சில பாடல்கள் - இன்றைய பதிவில்!..

சான்றோர் தொகுத்துள்ள நூற்பயன்களின் வழிச் சென்று இந்தப் பதிவு தங்கள் முன்பாக..

கண்டு மகிழ்வோம். இறைவனைக் கொண்டு மகிழ்வோம்..

ஸ்ரீ மகாலிங்க ஸ்வாமி திரு இடைமருதூர்

திரு இடைமருதூர்

ஸ்ரீ மகாலிங்க ஸ்வாமி
ஸ்ரீ பிரஹத் சுந்தர குஜாம்பிகை

மருந்தவன் வானவர் தானவர்க்கும்
பெருந்தகை பிறவினொடு இறவுமானான்
அருந்தவ முனிவரொடு ஆல்நிழற்கீழ்
இருந்தவன் வளநகர் இடைமருதே.. 1/110

திருமழபாடி

ஸ்ரீ வைத்யநாதர்
ஸ்ரீ சுந்தராம்பிகை

பள்ளமார் சடையில் புடையே அடையப் புனல்
வெள்ளம் ஆதரித்தான் விடை யேறிய வேதியன்
வள்ளல் மா மழபாடியுள் மேய மருந்தினை
உள்ளம் ஆதரி மின் வினையாயின ஓயவே.. 2/9/4

திருவலஞ்சுழி

ஸ்ரீ கபர்தீஸ்வரர்
ஸ்ரீ பிரஹந்நாயகி

திருந்த லார்புரம் தீயெழச் செறுவன விறலின்கண் அடியாரைப்
பரிந்து காப்பன பத்தியில் வருவன மத்தமாம் பிணிநோய்க்கு
மருந்தும் ஆவன மந்திரம் ஆவன வலஞ்சுழி இடமாக
இருந்த நாயகன இமையவர் ஏத்திய இணையடித் தலம் தானே.. 2/106/3

திருந்துதேவன்குடி

ஸ்ரீ கற்கடகேஸ்வரர

ஸ்ரீ அருமருந்து நாயகி

ஸ்ரீ கற்கடேஸ்வரர்
ஸ்ரீ அருமருந்து நாயகி

நண்டு வழிபட்ட தலம்
17/9/2023 அன்று
திருக்குட முழுக்கு நடைபெற்றுள்ளது..

 மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை
திருந்து தேவன்குடித் தேவர் தேவெய்திய
அருந் தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே.. 3/25/1

திருநெல்வேலி

ஸ்ரீ நெல்லையப்பர்
ஸ்ரீ காந்திமதியம்மை

மருந்தவை மந்திர மறுமை நன் நெறியவை மற்றும் எல்லாம்
அருந்துயர் கெடும் அவர் நாமமே சிந்தை செய் நன்னெஞ்சமே
பொருந்து தண் புறவினிற் கொன்றை பொன் சொரிதரத் துன்று பைம்பூம்
செருந்தி செம் பொன்மலர் திரு நெல்வேலியுறை செல்வர்தாமே.. 3/92/1
*
 

திருஞானசம்பந்தர்
திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  2. பாசுரங்கள் பாடி தொழுதோம்.
    அவன் பாதம் சரணடைவோம்.

    பதிலளிநீக்கு
  3. தேவன்குடி தவிர்த்த மற்றக் கோவில்கள் போயிருக்கோம். நல்ல தரிசனத்துக்கு நன்னி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி அக்கா..

      நீக்கு
  4. இறைதரிசனம், பாசுரங்கள் சிறப்பு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  5. தேவாரங்களை பாடி இறைவனை தரிசனம் செய்து கொண்டேன்.
    பிணிக்கு மருந்து தருவான். நல்ல மருந்து சுகம் நல்கும் மருந்து வைத்திய நாத மருந்து அருள் வடிவான மருந்து அவனையே நாடுவோம்.

    பதிலளிநீக்கு
  6. /// பிணிக்கு மருந்து தருவான். நல்ல மருந்து சுகம் நல்கும் மருந்து வைத்திய நாத மருந்து.. ///

    தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
    நன்றி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..