நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 30, 2012

திருப்பாவை - 15


ஆண்டாள் அருளிய திருப்பாவை  
திருப்பாசுரம் - 15

thanjavur14
வல்லானையைக் கொன்ற வல்லான்
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
சில்லென்று  அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்!
வல்லை!. உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதானாயிடுக!
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து  எண்ணிக்கொள்
வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.  


எல்லே!...இளங்கிளியே
எலே... இளம் கிளியே! இன்னுமா தூங்குகின்றாய்?....(எலே - நெல்லைத் தமிழ்)

சில்-லுன்னு அழைக்காதீர்கள்!....இதோ வருகிறேன்!...வந்து விட்டேன்!.... 
ஏய்!...நீ பெரியஆளு தான்!... இதற்கு முன் சொன்னதெல்லாம் நீ அறிய மாட்டாயா?...
ஆ! நீங்களும்  என்னை  மாதிரியே ..... பெரிய....ஆளுங்கதான்! ....

ஏய்!.. நீ சீக்கிரம் எழுந்து  வர மாட்டாயா!....

உங்களுக்கென்ன...வேறு வேலை இல்லை!...  சரி... சரி... எல்லாரும் வந்து விட்டார்களா?...

எல்லாரும் வந்தனரே!... வந்து நீயே எண்ணிக் கொள்!... (அப்படியாவது நீ வெளியே வருகிறாயா... பார்க்கலாம்!....)

இளங்கிளியே! எங்கள் தோழீ.!....கம்சன் தன் மீது ஏவி விட்ட குவலயாபீடம் என்னும் மத யானையை அழித்தவன் !... 

மறுத்து நிற்கும் மாற்றாரிடம் எது மாற்றமோ  அந்த  மாற்றத்தைத் தொலைத்து ஒழிப்பவன் !....

அந்தத் தூயவனை  - மாயவனைப் பாடிப்  பரவிட  வாராய் ....எம் பாவாய்!....
நன்றி - ரதி, தேவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..