நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி
வெள்ளைச்க்கிழமை
திருப்புகழ்
வள்ளிமலை
தய்யதன தான தய்யதன தான
தய்யதன தானத் ... தனதான
அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு
மல்லல்பட ஆசைக் ... கடலீயும்
அள்ளவினி தாகி நள்ளிரவு போலு
முள்ளவினை யாரத் ... தனமாரும்
இல்லுமிளை யோரு மெல்ல அயலாக
வல்லெருமை மாயச் ... சமனாரும்
எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில்
உய்யவொரு நீபொற் ... கழல்தாராய்...
தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்
சொல்லுமுப தேசக் ... குருநாதா
துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண
வெள்ளிவன மீதுற் ... றுறைவோனே
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
வல்லைவடி வேலைத் ... தொடுவோனே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளிமண வாளப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
நன்றி
காணொளியில்
அடியார்கள்
பாடுவதைக் கேட்டு
அதன் வழி
கௌமாரத்தில் இருந்து பெறப்பட்ட திருப்பாடல்...
முருகா முருகா
முருகா முருகா
***

முருகனைப் பூஜிப்போம். செந்தில் முதல்வனை நேசிப்போம்.
பதிலளிநீக்குவைகாசி வெள்ளி நாளில் திருப்புகழ் பாடி வணங்கினோம்.
பதிலளிநீக்கு"இன்று வைகாசி வியாழன் ......" என வந்துள்ளது.
ஓம் முருகா முத்துக்குமாரா உன் பாதம் சரணம்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. முருகன் தம்பதி சமேதராக இருக்கும் படம் அழகாக இருக்கிறது. இனிமையான திருப்புகழ் பாடலைப் பாடி முருகனை வணங்கிக் கொண்டேன்.
இது நேற்றைய பதிவோ எனும் சந்தேகம் வந்தது. பொதுவாக நீங்கள் வெள்ளியன்றுதான் திருப்புகழ் பாடல்களை பகிர்வீர்கள். ஆரம்ப தலைப்பில் வியாழன் என தவறுதலாக வந்து விட்டது என நினைக்கிறேன்.
எப்படியாயினும் முருகனை பணிவோம். அவன் அருளால் தரணியில் உய்வோம். முருகா சரணம்..🙏.பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நேற்று வந்து கருத்திட்ட நினைவிருக்கிறதே...
பதிலளிநீக்குதிருப்புகழை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்கு