நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 16
புதன்கிழமை
வெயிலின் தாக்கத்தை அனுசரித்து சற்று முன்னதாகவே திட்டமிடப்பட்டது...
அதன்படியே வடம் பிடிக்கப் பெற்று
திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நிகழ்ந்து தேர் நிலைக்கு வந்தது...
ராஜ வீதிகள் நான்கிலும் சிறப்பான முறையில் நீர் மற்றும் மோர் சித்ரான்னங்கள் வழங்கப்பட்டன..
தஞ்சை தேரோட்டத்தின் படக்காட்சிகள்..
இவை அனைத்தும் ஸ்ரீ மணிகர்ணிகேஸ்வரர் திருக்கோயிலின் அருகில் எடுக்கப்பட்டவை..
கூட்ட நெரிசலில் தேர் இழுக்கப்பட்ட அழகைக் காண முடியவில்லை...
கோயிலின் அருகே நிறுத்தப்பட்டிருந்த அழகு தான் இவ் வருடம்..
தேர்த்திருவிழாவின் நெரிசல் இயல்பானது... அதனுள் நுழைந்து வந்ததே பெரிய விஷயம்..
இயன்றவரை காட்சிப்படுத்தியுள்ளேன்...
எல்லாம் அம்மையப்பன் அருள்...
ஓம் நம சிவாய
***





















தேர்த்திருவிழா காட்சிகள் சிறப்பு. இவ்வளவு வெயிலிலும் மக்கள் கூடி இருப்பதும் சிறப்பு.
பதிலளிநீக்குஎன்ன இருந்தாலும் கலாச்சாரம் பக்தி இவை விட்டுப் போகுமோ
நீக்குமகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்...
தேரோட்டம் - சிறப்பு. இங்கே இன்னும் சித்திரை தேர் முடியவில்லை. பூச்சாற்று வைபவம் நடந்து கொண்டிருக்கிறது. சித்திரைத் தேருக்கான காத்திருப்பில் நாங்களும்.
பதிலளிநீக்குஉங்கள் பதிவு/படங்கள் வழி, நாங்களும் தஞ்சையின் தேரோட்டக் காட்சிகளை கண்டு ரசித்தோம். நன்றி.
அன்பின் வருகையும் மேல் விவரங்களும்
நீக்குமகிழ்ச்சி..
நன்றி வெங்கட்..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பதிவு அருமை. தஞ்சை பெரிய கோவிலின் தேர்த்திருவிழா படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. தேரில் உலா வந்த பிள்ளையார், பிரகதீஸ்வரர் அனைவரையும் தரிசித்துக் கொண்டேன். தேர்த் திருவிழாவில் பங்கு கொண்ட அனைவரின் முகங்களிலும் வெய்யிலைப் பொருட்படுத்தாத ஒரு சந்தோஷம் தெரிகிறது. பாரம்பரியமான விழாக்களை இவ்விதம் நடத்துவதும், கண்டு களிப்பதுமே ஒருவகையான மகிழ்வுதான். நானும்அத்தனைப் படங்களையும் கண்டு களித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா...
தஞ்சை தேர்த்திருவிழா கண்டு வணங்கினோம்.. நன்றி.
பதிலளிநீக்குபடங்கள் அழகாக உள்ளன.
தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா
தஞ்சை தேர்த்திருவிழா படங்கள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குஇங்கு இன்று தேர்த்திருவிழா. தொலைக்காட்சியில் விழாக்களை நேரலையில் பார்த்து தரிசனம் செய்து வருகிறேன்.
தங்கள் வருகையும் மேல் விவரமும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா...