நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஏப்ரல் 28, 2026

காக்க காக்க..

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
செவ்வாய்க்கிழமை 



இப்போதெல்லாம் கைத்தல பேசியில் எதுவும் வாசிக்க முடிவதில்லை..
தட்டச்சு செய்வதும் சிரமமாக உள்ளது...

பல பிரச்னைகள்..

சற்று நேரம் வெளியே சென்று காலார நடந்து வரலாம் எனில் - 

(வீட்டைச் சுற்றிலும் இருக்கின்ற  சாலைகள் தலை கீழாகப் புரண்டு கிடப்பதால் நெடுஞ்சாலை ஓரம் தான் நடப்பதற்கு...

ஆனாலும், நான் 
நடப்பதில்லை..
முழங்காலில் வலி காரணம்.. )

அங்கே -
சுய கட்டுப்பாடு இல்லாத மனிதர்களே அதிகம்...

உரிய ஒழுங்கு இல்லாமல்  வாகனங்களை இயக்குபவர்களும் 

ஒரே வழித்தடத்தில் நேருக்கு நேர் படு வேகமாக வருபவர்களும் தான் அதிகம்....

சாலை சந்திப்புகளின் நடுவே அமைக்கப்பட்டுள்ள  வட்ட வடிவ ஒழுங்கை மீறி குறுக்காகப் பாய்ந்து செல்கின்ற மனித ஜந்துகளே அதிகம்...

சாலை சந்திப்புகளில் பொது மக்கள் குறுக்காகச் செல்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டிருக்கும் வெள்ளைப் பட்டைகளை மதிக்காத வாகன ஓட்டிகளும்  அதிகம்...

சாலை விதிகள் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமல்  மனம் போன போக்கில்,  வாகனங்கள் இயக்கப்படுவதே நிதர்சனம்...

இன்னும் எவ்வளவோ இதைப் பற்றிச் சொல்லலாம்..

சுதந்திர நாட்டின் பொது வாழ்வில் எவரையும் குறை சொல்வது நோக்கம் அல்ல..

சாலைப் போக்குவரத்தில்
பிறரால் நமக்கு இடையூறு  ஏற்படுவதன் காரணமாக மனதில் எழுகின்ற ஆதங்கமே இது..

நகர்ப்புறச் சாலைகளும் கிராமத்துத் தெருக்களும் ஒன்றாகவே மிளிர்கின்றன... எங்கெங்கும்  கவனக் குறைவான ஆபத்தான வாகன இயக்கமே...
வாகனங்கள் அலறி அடித்துக் கொண்டு  செல்கின்ற நிலையே உள்ளது.

இதனைக் கட்டுப்படுத்த, ஆங்காங்கு போக்குவரத்து
காவலர்களை நியமித்து  சாலை போக்குவரத்தை  ஒழுங்குபடுத்துவது அவசியம்.

ஆனால், எங்கெங்கும் ஒழுங்கீனமே நிறைந்து இருக்க - இதெல்லாம் நடக்கின்ற காரியமா?...

இறைவன் தான்  காப்பாற்ற வேண்டும்..

வாழ்க நலம்
***

12 கருத்துகள்:

  1. கண்கள்தான் படுத்துகின்றன என்றால் எல்லாமேவா...   நீங்கள் கண்களை சரியாக பாதுகாக்கவில்லை என்று தோன்றுகிறது.  சரியான மருத்துவரை பார்க்கவில்லை.  பொறுமையாக தொடர்ந்து செல்லவேண்டும்.  அவர்களிடமும் பொறுமையின்மை இருக்கலாம்.  ஆனாலும் நம் காரியம் முக்கியம் என்று தொடர்ந்து சென்று சரிசெய்து .கொள்ளவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்களைச் சரியாகத் தான் பாதுகாக்கின்றேன் .

      இருப்பினும் வணிக மருத்துவத்துக்குள் சிக்கிக் கொண்டதனால் சற்றே பிரச்னை

      நீக்கு
  2. ஒழுங்கான சாலைகள், ஒழுங்கான மக்கள், சட்டத்தை மதிக்கும் அல்லது பயப்படும் மக்கள், அரபு நாடுகளிலும், சிங்கப்பூரிலும் சாத்தியம்.  இந்தியா இப்படிதான்.  நாம் நம் நிம்மதியை காத்துக்கொள்ள இவர்களை கண்டு கொள்ளாமல் இருக்க பழகவேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்...

      இவர்களை கண்டு கொள்ளாமல் கடந்து செல்வதற்குப் பழக வேண்டும்..

      மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. உங்கள் ஆதங்கம் சரியானது.

    கீழைநாடுகளில் சாலை போக்குவரத்துகள் சரியாக இல்லை எவருக்கும் அக்கறை இல்லை வாகனம் ஓட்டுவதில் அவசர வேகம் சாலை மீறல்கள்.தாராளம்..

    ஓர் வாலிபர் வீதியோரம் நண்பரை எதிர் பார்த்து காத்து நிற்கிறார். மிக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டி திடீரென திருப்பியதால் ஓரம் நின்ற இளையர் மேல் இடித்து கால் உடைந்து ஆறு மாதமாக நடக்க முடியாத படுக்கை நிலை. இது யார் தவறு ? ?
    வீதி ஓரம் ஒதுங்கி நின்ற இளைஞர் செய்த பாவம் என்பதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படித் தான் இங்கும் பல விபத்துகள்....

      நாம் கவனத்துடன் ஒதுங்கியே இருப்பது அவசியம்...

      மகிழ்ச்சி
      நன்றியம்மா..

      நீக்கு
  4. துரை அண்ணா, உங்கள் உடல் நலத்தை இன்னும் சற்றுப் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    நம் நாட்டைப் பற்றி நமக்குத் தெரியும். இப்படித்தான் இங்கு சட்டங்கள் மதிக்கப்படுவதில்லை என்று தெரியும். உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் இதெல்லாம் நம்மால் ஒழுங்குபடுத்த இயலுமா? சமூக சேவை செய்யவும் நம்மிடம் தெம்பு இல்லை. இயலாத போது, அதைச் சொல்வதை விட, அருகில் இருக்கும் அழகை, காக்கையை, குருவியை, நம் வாழ்க்கையில் இருக்கும் சிறு சந்தோஷங்களை ரசிக்கலாம் என்று தோன்றும்.

    நாம் சிறிய சந்தோஷங்களை ரசிக்கும் போதும் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் நேர்மறை சக்தி பரவும். நம் பார்வைகள் மாறும் போது இந்த உலகமே மாறிவிடும். உங்களுக்கும் தெரிந்த ஒன்றுதானே அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///துரை அண்ணா, உங்கள் உடல் நலத்தை இன்னும் சற்றுப் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்று தோன்றுகிறது///

      எல்லாற்றுக்கும் அடிப்படை பொருளாதார சிக்கல் தான் காரணம்...

      திரு நெல்லை அவர்களுக்கு எனது சூழ்நிலை தெரியும்...

      இருப்பினும்..
      காலம் கை கொடுக்கும்... நாம் சந்தோஷங்களை ரசிப்போம்...

      மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  5. கண்களை கவனித்து கொள்ளுங்கள் . கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்.
    புன்னைநல்லூர் மாரியம்மனை வேன்டிக் கொள்கிறேன். உங்கள் கண்கள் சரியாகி விடும்.

    நாம் கவனமாக செல்ல வேண்டும் . பூங்கா போன்ற இடத்தில் நடைபயிற்சி செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புன்னைநல்லூர் மாரியம்மனைத் தான் வேண்டியுள்ளேன்...

      எல்லாம் அம்மன் அருள்...

      மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு
  6. உடல் நலம் காக்கவும்.

    உங்கள் ஆதங்கம் சரியானதே. இங்கே எல்லோரும் இப்படித்தான் இருக்கிறார்கள் - அவரவருக்கு அவரவர் செய்வதே சரி என்று தோன்றுகிறது. சாலையில் எத்தனை விபத்துகள் நடந்தாலும், மற்றவர்களுக்கு அது பற்றிய கவலை இல்லை - இன்னமும் வேகமாக, நான் முன்னே சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் பறக்கிறார்கள் - விதி முறைகளை காற்றில் பறக்கவிட்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே ஒழுங்கீனம் என்பதே ஒழுங்கு என்றாகி விட்டது...

      நாம் கவனத்துடன் ஒதுங்கியே இருப்பது அவசியம்...

      நன்றி வெங்கட்

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..