நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஏப்ரல் 13, 2026

சமையல்

 


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 திங்கட்கிழமை

இன்று 
தேங்காய்ப் பால் ரவா கஞ்சி...


தேவையானவை
சம்பா கோதுமை ரவை 200 கி
தேங்காய் ஒருமூடி
சின்ன வெங்காயம் 10
தக்காளிப்பழம் ஒன்று
கேரட் ஒன்று
பீன்ஸ் 10
பச்சைப் பட்டாணி 50
பச்சை மிளகாய் 2
பட்டை சிறியதாக 2 துண்டு
முந்திரி 10
அன்னாசிப்பூ ஒன்று
நெய் தேவைக்கு
மல்லித்தழை சிறிதளவு
கல் உப்பு தேவைக்கு

குறிப்பு ;-
சம்பா கோதுமை ரவையாக இருப்பதே நல்லது.. பச்சைப் பட்டாணி எனில் பிஞ்சாக உரித்து எடுக்கப்பட்டவை மட்டுமே.. உலர்ந்த பட்டாணியைத் தவிர்க்கவும்..

செய்முறை :

1)
ரவையை வெறும் வாணலியில் வறுத்தெடுத்துக் கொள்ளவும்... 

2)
தக்காளியைக் கழுவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்..  பச்சை மிளகாய்களை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்..

3)
சின்ன வெங்காயத்தை உரித்து  -  கழுவிக் கொள்ளவும்.. நறுக்க வேண்டாம்..கேரட்  பீன்ஸ் இவற்றைச் சன்னமாக நறுக்கி பட்டாணியுடன் சேர்த்து எல்லாவற்றையும் இட்லி தட்டில் வைத்து அவித்துக் கொள்ளவும்...

4)
தேங்காயைத் துருவி கொஞ்சமாகத் தண்ணீர்  விட்டு பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும்...  (விருப்பம் எனில் திட்டமாக தண்ணீர் விட்டு அரைத்து விழுதாகவும் எடுத்துக் கொள்ளலாம்)...

5)
பாத்திரம் ஒன்றில் - ஒன்றுக்கு மூன்று  (தேங்காய்ப் பால் எனில் ஒரு பங்குக்கு மூன்று பங்கு.. தேங்காய் விழுது எனில் ஒன்றுக்கு நான்கு..) என்ற கணக்கில்  - தண்ணீர் ஊற்றி, அதில் அவித்த காய்களுடன் தக்காளியை சற்று வதக்கி
பச்சை மிளகாய், பட்டை, அன்னாசிப்பூ தாளித்து உப்பு சேர்த்து வேக வைக்கவும்..

6)
 எல்லாம் அரை வேக்காடாக இருக்கின்ற நிலையில் தேங்காய்ப் பாலை ஊற்றி  வறுதெடுத்த  ரவை,  முந்திரியைச் சேர்த்து.,

7)
ரவை கட்டியாகத் திரண்டு விடாமல் சற்று கவனத்துடன் கிளறி விட வேண்டும்..

8)
ரவை நன்றாக வெந்து மலர்ந்ததும், சிறிது நெய் விட்டு மல்லித் தழையைத் தூவி கிளறி விடவும் ..

9)
அடுப்பிலிருந்து இறக்கி மூடி வைத்து மிதமான சூட்டில் பரிமாறவும்..

அவ்ளோ தான்..
தேங்காய்ப் பால் ரவா கஞ்சி..

வாழ்க நலம்
***

12 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

    சுவையான சமையல் குறிப்பு. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. கோதுமை ரவை கஞ்சி காய்கறிகள் சேர்த்து செய்து இருக்கிறேன், மசாலா பொருட்கள், தேங்காய் இல்லாமல்.
    தேங்காய் பால் சேர்த்தால் சுவை அதிகரிக்கும் செய்து பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது மிகவும்
      எளிமையானது..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
      நன்றி..

      நீக்கு
  3. நல்ல சமையல் குறிப்பு.

    பால்கஞ்சி வகைகள் எமக்கும் பிடித்தமானது.

    பதிலளிநீக்கு
  4. நேற்று வெளியான பதிவை கவனிக்கவில்லை! இப்போதுதான் பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
  5. கோதுமை ரவா உப்புமா பிடிக்கும்.  என் அம்மா கோதுமை ரவையில் கஞ்சி செய்வார்.  சிறிது வெந்தயம் மட்டும் சேர்த்து வழக்கமான கஞ்சி பாணியில் கொதிக்க வைத்து இறக்கி பால் சர்க்கரையோ, மோர் உப்போ போட்டு அப்பாவுக்கு கொடுப்பார்.  புல்லுக்கும் அங்கே பொசியும்!

    பதிலளிநீக்கு
  6. இதை ஒரு முறை செய்து பார்க்க வேண்டும்.  இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..