நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஏப்ரல் 07, 2026

காளியாட்டம்

 


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 செவ்வாய்க்கிழமை


தஞ்சையின் தொன்மங்களுள் ஒன்றான 
ஸ்ரீ கோடியம்மன் கடந்த சில தினங்களாக மேல ராஜ வீதியில்  காளியாட்டம் கண்டருள்கின்றாள்..


நாமும் தரிசித்து மகிழ்வோம்..






ஓம் சக்தி ஓம்
***

16 கருத்துகள்:

  1. காளியாட்டம் படங்கள் தரிசித்தேன். ஓம் சக்தி...

    பதிலளிநீக்கு
  2. ஆதிபராசக்தி படம் என்று நினைக்கிறேன்.  காளியிடம் தன் பக்தியை நிரூபிக்க சுருளி தண்ணீரில் மூழ்கி 'காளியாத்தா மாரியாத்தா காளியாத்தா மாரியாத்தா' என்று சொல்லியபடியே இருப்பார்.  மூழ்கும் சமயம் தமிழ்ப்பட கிளைமேக்சில் போலீஸ் வருவது போல காளி காட்சி தருவாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல ஞாபக சக்தி

      மகிழ்ச்சி.. நன்றி
      ஓம் சக்தி ஓம்

      நீக்கு
  3. ஓம் சக்தி என்றதும் சக்தி லீலை படத்தில் 'சக்தி வந்தாளடி' என்று எல் ஆர் ஈஸ்வரி குரல் பாடலும், ஜெ நடனமும் நினைவுக்கு வருகின்றன.  கூடவே 'ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி... 'ஜெய்சங்கர் ஜெய்சங்கர் ஜெய்சங்கர் ஜெய்சங்கர்ஜெய்சங்கர்' பாடலும் நினைவுக்கு வருகிறது!

    பதிலளிநீக்கு
  4. ஆடி மாதத்தில் கூட இந்தக்காளியாட்டம் தஞ்சை ஜில்லாக்களில் நிறைய நடக்கும்னு நினைக்கிறேன். நான் முதல்முதலாகப்பார்த்தது கும்பகோணத்தில் தான். ஓர் ஆடி மாதத்தில் பெரிய தெருவில் பார்த்தேன். படம் எடுக்கக் கூடாதுனு சொல்லிட்டாங்க. இங்கே படங்கள் எடுத்திருப்பது ஆச்சரியமாவும் மகிழ்வாகவும் இருக்கு. நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா அவர்களுக்கு நல்வரவு...

      இன்னும் பாரம்பரியமாக தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், மயிலாடுதுறை வட்டாரங்களில் காளியாட்டம் நடைபெற்று வருகிறது...

      மகிழ்ச்சி
      நன்றி அக்கா

      நீக்கு
  5. கோடி அம்மன் காளியாட்ட படங்கள் நன்றாக உள்ளன.

    ஓம் தாயே சரணம்.

    பதிலளிநீக்கு
  6. மாயவரத்திலும் பச்சை காளி, பவள காளி என்று ஆடிவருவார்கள் ஆடி மாதம்.பங்குனியும் அம்மனுக்கு உகந்த நாள் .
    அருமையான படங்கள் மூலம் காளியாட்டம் தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..