நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், நவம்பர் 22, 2023

தஞ்சை அரண்மனை


நாடும் வீடும் 
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 6
 புதன்கிழமை


தமிழகத்தில் குறிப்பிடத்தக்கது - இயல்  இசை நாட்டியம் எனச் சிறப்புற்றிருந்த தஞ்சை அரண்மனை..

இது மாநகரின் மத்தியில் அமைந்துள்ளது.. அரண்மனையைச் சுற்றிலும் வீதிகள்.. ராஜ வீதிகள் எனப்பட்டவை காலப் போக்கில் பல மாற்றங்களில்!..

ராஜ வீதிகளைச் சுற்றிலும் வட்டமான  பாதுகாப்பு சாலை அலங்கம் என்ற பெயரில்.
இதனை அடுத்ததே அகழி.. 

ஊரை காத்த அகழியின்
இன்றைய நிலை பரிதாபம்..

இந்த அரண்மனை தஞ்சை நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது..

ஆனால், கீழே உள்ள அஸ்திவாரம் சோழர்களுடையது என்றும் செவிவழிச் செய்திகள் உலவுகின்றன..

தஞ்சை நாயக்க வம்சமும் மதுரை நாயக்க வம்சமும் அடிதடி சண்டை சச்சரவு என, இறங்கியதில் வெகுவாகப் பாதிக்கப்பட்டது இந்த அரண்மனை..

நாயக்கர்கள் வீழ்ச்சிக்குப் பின்னர்  தஞ்சாவூர் மராட்டிய அரசர்களின் வசமானது..

சோழர்களின் அரண்மனைத் தடம் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் - கோட்டை கொத்தளங்கள்  என, 
தஞ்சை மீண்டும் பொலிவுற்றது நாயக்கர் ஆட்சியில்..

அதன் பின் மேலும்  மராட்டியர் ஆட்சியில் சிறப்புற்றது..

அரண்மனையிலுள்ள அருங்காட்சியகத்தில் மராட்டிய மன்னர்களது  உடைகள் இசைக் கருவிகள் பண்ட பாத்திரங்கள் புழக்கத்தில் இருந்த நாணயங்கள் போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் என பற்பல கலைப்பொருட்கள் நிறைந்துள்ளன..

அரண்மனையின் கலைக்கூடத்தில் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கிடைத்த விக்ரகங்களும் சிற்பங்களும் பாதுகாக்கப்படுகின்றன..

சரபோஜி மன்னரின் பளிங்குச் சிலையும் இங்குள்ளது..

இரண்டாம் சரபோஜி மன்னரால் உருவாக்கப்பட்ட சரஸ்வதி மஹால் இங்கு தான் அமைந்துள்ளது..

அரண்மனைக்குள் நுழையும் போதே கட்டணம்.. இந்த அனுமதிச் சீட்டைக் கொண்டு அருங்காட்சியகம், கலைக்கூடம்,  அரசவைக் கூடம் - இவற்றைப் பார்க்க இயலும்..

நான் சரஸ்வதி மஹாலுக்குச் சென்றதால் இந்தச் சீட்டு எடுக்கவில்லை..

பதிவில் உள்ளவை அனைத்தும் வெளித் தோற்றங்களே.. மறுமுறை  ஒருநாள் இதற்காக ஒதுக்க வேண்டும்..

சரஸ்வதி மஹால் பற்றி தனியானதொரு பதிவு தரவேண்டும்..

அரண்மனை வளாகத்திற்கு செல்ல நேர்ந்ததற்கு அன்பின் நெல்லை அவர்களுக்கு  நன்றி..

நுழைவாயிலில் விரும்பத்தகாத காட்சிகள்.. எனவே இங்கு இடம் பெறவில்லை..

நுழைவாயில் யானை சிற்பம்

சரஸ்வதி மஹால்
முன்புற கூடம்







மணிக்கோபுரம்
(தொள்ளக்காது மண்டபம்)









கலைக்கூட நுழை வாயில்
ஆயுத கோபுரம்


ஆயுத கோபுரம்




அரண்மனை வாசல்


சதார் மாளிகை

மேலும் பல செய்திகளுடன் 
அடுத்தொரு பதிவில் சந்திப்போம்..

வாழ்க நலம்
நலம் வாழ்க
***

14 கருத்துகள்:

  1. இன்னும் பார்க்காத இந்த இடத்தை ஒருமுறையாவது பார்க்க ஆவல்! நானும் இருந்திருக்கிறேன் தஞ்சையில் பல வருடங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கங்கைக் கரை வண்ணான், கங்கையில் நீராடாமலிருப்பதைப் போல.

      நீக்கு
    2. ஸ்ரீராம் அவர்கள் குடும்பத்தோடு விரைவில் தஞ்சைக்கு மட்டும் சுற்றுலா வரவும்...

      மின்னல் வேகம் இல்லாமல் நிதானமாகக் கண்டு மகிழவும்..

      மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  2. சதார் மாளிகையின் உப்பரிகைகளில் ஏதாவது இளவரசிகள் எட்டிப் பார்க்கிறார்களா என்று பார்த்தீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் வந்து பார்க்க வில்லையே என்ற வருத்தத்தில் தஞ்சை அரண்மனை இருக்கின்றது..

      நீக்கு
  3. படங்கள்நன்று. பலகாட்சிகளும் கண்டோம்.

    தஞ்சை. சென்று இவற்றை எல்லாம் பார்த்திருக்கிறேன் என்பதில் மகிழ்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சைக்கு வந்திருக்கின்றீர்களா!.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  4. அரணமனை படங்கள், மற்றும் மணி கோபுரம் படங்கள் அருமை.
    பல வருடங்கள் முன்பு சரஸ்வதி மஹால், மற்றும் அரண்மனை அருகாட்சியம் பார்த்தோம் . மராட்டிய மன்னர்களின் வழி வந்தவர்கள் அரண்மனையை பாதுகாத்து வந்தார்கள். கட்டணம் வாங்கி உள்ளே போய் பார்த்து விட்டு திரும்பும் போது அதை கவனித்து கொண்டவர்கள் கையேந்தும் போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

    சிவகங்கை பூங்கா போனோம். சிறு வயதில் பள்ளி சுற்றுலாவில் எல்லா இடங்களும் பார்த்தேன். சாரின் அண்ணா தஞ்சையில் பணியாற்றியபோது விடுமுறையில் இரண்டு மூன்று முறை வந்து தங்கி எல்லா இடங்களையும் பார்த்து இருக்கிறோம்.

    நீங்கள் சொன்னது போல 10 நாட்கள் தங்கினால் தான் ஓரளவு தஞ்சையில் பார்க்க வேன்டிய இடங்களை, கோயில்களை பார்க்க முடியும். அவசரமாக வந்து விட்டு எல்லா இடங்களையும் பார்க்க முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது தனித்தனியே இல்லாமல் ஒரே கட்டணம்..

      பழைய மன்னர் பரம்பரையினர் அரண்மனை யின் ஒரு பகுதியில் வசிக்கின்றனர்..

      கட்டணம் யாருக்கு என்று தெரியவில்லை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..நன்றி ..

      நீக்கு
  5. இரண்டு, மூன்று முறை பார்த்திருந்தாலும் ஆயுத கோபுரம் நினைவில் இல்லை. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. உங்கள் விரிவான பதிவுக்குக் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..