நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், நவம்பர் 06, 2023

அழகின் அழகு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 20
திங்கட்கிழமை

விவரம் தெரிந்த நாள் முதலாகவே ஓவியர் மாருதி அவர்களது ரசிகன் நான்..

விவரம் என்றால் என்ன விவரம்?.. - என்று விவரம் தெரிந்த யாரும் என்னிடம் விவரம் கேட்கக் கூடாது!..

விவரம் என்றால் விவரம் தான்..

இருபது வயதில் கதைகள் எழுதத் தொடங்கிய போது எனக்குள் ஒரு கனவு.. 

மாருதி அவர்களது ஓவியங்களுடன் கதைகள் வெளிவர வேண்டும் என்று!..

ஆனால் - 
இறைவனின் விருப்பம் அதுவாக இருக்கவில்லை..

வருடங்கள் பல சென்ற நிலையில் -
எங்கள் வலைத் தளத்தில் எனது கதைகள் வெளியான போது தனி ரசனை..

அன்புள்ள பாஸ்.. - என்று ஒரு சிறுகதை எழுதப்பட்டு - அது எபியில் வெளியான நாள் 20/11/18..

அந்தக் கதைக்குள் உயிராக இருந்த எனது கற்பனை - ஓவியமாக வெளிப்பட்ட நாள் 8/4/22 ..

அப்படி வெளியான ஓவியம் தான் கீழே இருப்பது..

அன்புள்ள பாஸ் - இதோ இணைப்பு


எனது கதாநாயகிகளில் சிலர்
மாருதி அவர்களது சித்திரங்களில் இருந்து
 உருப்பெற்றிருக்கின்றனர் என்பதே எனக்கு மகிழ்ச்சி..

மாருதி அவர்களது ஓவியங்களுக்காக சில வரிகள்..


தூரிகை கொடுத்த
காரிகை வண்ணம்
தோன்றும் நெஞ்சில்
அழகின் வண்ணம்..


அழகின் வண்ணம்
ஆக்கிய வண்ணம்
அமுதெனும் நிலவாய்
நெஞ்சினில் மின்னும்


நெஞ்சினில் மின்னும் 
காரிகை வண்ணம்
கவிதையின் வண்ணம்
கருவிழி உண்ணும்..


கருவிழி உண்ணும்
கருத்தினில் மின்னும்
இனியவள் வண்ணம்
தூரிகை வண்ணம்!..


மேலும் சில படங்களுடன்
பின்னொரு சமயத்தில் மேலும் பேசுவோம்..
*
வாழ்க மாருதி
வாழ்க மாருதி!..
***

18 கருத்துகள்:

  1. ​நீங்கள் மாருதியின் ரசிகர் என்று தெரியும். படங்களுக்கான கவிவரிகள் ஜோர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. அன்புள்ள பாஸ் கதைக்கு சுட்டி கொடுத்திருப்பீர்கள் என்று பார்த்தேன்.  இல்லை.  இதோ சுட்டி..

    https://engalblog.blogspot.com/2018/11/blog-post_20.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணைப்பு கொடுத்து விட்டேன்..

      முதல் இருபத்தைந்து கதைகளுக்கு என்னிடம் இணைப்புகள் உள்ளன..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. நானும் ஓவியர் மாருதியின் ரசிகன். ஆனால் பதின்ம வயதில் ஜெ..... அவர்களின் தீவிர ரசிகன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அப்படித்தான்..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி நெல்லை..

      நீக்கு
  4. இந்த பதிவு முன்பு தவறுதலாக வெளியான போதே பார்த்து விட்டேன்.
    மீண்டும் ஓவியங்களை பார்த்து ரசித்தேன்.
    படங்களுக்கு உங்கள் கவிதை வரிகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் இணையம் படுத்திய பாடு..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  5. எனக்கும் மாருதியின் ஓவியங்கள் ரொம்பப் பிடிக்கும். அது போல மசெ. குறிப்பாக வரலாற்றுக் கதைகளுக்கான ஓவியங்கள்.

    ஓவியங்களுக்கான உங்கள் கவிவரிகளழகை ரசித்தேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. ஓவியர் மாருதி அவர்களின் ஓவியங்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும். அடக்கவொடுக்கமான அழகில் நம்மனதில் நற்ப்பண்புடன் குடியேறும் பெண்கள் என அவர் வரைந்த அழகிற்கு நானும் என் பதின்ம வயதிலேயே அடிமை. தங்கள் கதைகளுக்கு அவர் வரைந்த ஓவியங்கள் உயிரோட்டமாக இருந்தது குறித்து மகிழ்ச்சி.

    ஓவியங்களுக்கு ஏற்ப, தங்களின் எண்ணங்களில் உதித்த தங்களின் கவிதை வரிகள் மிக நன்றாக உள்ளது. நீங்கள் தந்த சுட்டியிலும் சென்று தங்களின் கதையை வாசித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் எண்ணங்களில் உதித்த கவிதை வரிகள் மிக நன்றாக உள்ளன..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  7. கோபுலு, மணியம் ஆகியவர்களுக்குப் பின்னரே மாருதி. எனினும் அவரின் பெண் ஓவியங்கள் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் நேரில் பார்ப்பதைப் போலவே வரையப்பட்டிருக்கும். பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி. ஓவியங்களுக்கேற்ற கவிதை வரிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி அக்கா ..

      நீக்கு
  8. ஆரம்ப காலங்களில் சோகமான கதைகளுக்குத்தான் மாருதி அவர்களின் படங்கள் வரும். அவருடைய சகோதரி ஸ்ரீரெங்கத்தில் இருந்தார். அவர் சகோதரியின் பெண்களின் ஜாடையில்தான் பெண்களை வரைவார் என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மேல் விவரங்களும்
      மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  9. மாருதியின் படங்கள்மிகவும் அழகாக இருக்கும் பார்க்கும்போது மனதுக்கு மகிழ்ச்சியும் கூட.

    பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மிக்க மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..