நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மார்ச் 04, 2013

சிவராத்திரி - 02

மாசி மாதம் 26-ஆம் நாள் (10-03-2013) ஞாயிறன்று இரவு மகாசிவராத்திரி.

மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கி வழிபட்டனள். 

இந்த நாளே மகா சிவராத்திரி எனக் கொண்டாடப்படுகிறது.

நந்தியம்பெருமான், நான்முகன், திருமால், குபேரன், இந்திரன், சூரியன், சந்திரன், அக்னி, சனைச்சரன், ஆதிசேஷன் - முதலான தேவர்கள் பலரும் சிவராத்திரி விரதத்தைக் கடைபிடித்து உயர்ந்த நிலையை அடைந்தார்கள்.

சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும். சிவராத்திரி அன்று விடியற் காலையிலேயே எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின் போது வீட்டில் பூஜை செய்யவேண்டும்.

ஸ்ரீ குபேரலிங்கம்
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனாய ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்,
திருஆனைக்கா , திருச்சி.

அதன் பின் திருக்கோயிலுக்குச் சென்று முறைப்படி சிவதரிசனம் செய்ய வேண்டும். சிவபெருமானைக் குறித்து விரதம் இருந்து தேவார திருவாசகத் திருமுறைகளை இயன்றவரை பாராயணம் செய்தல் வேண்டும். 

நண்பகலிலும் குளித்து விட்டு சிவதரிசனம் செய்ய வேண்டும். மாலையில் மீண்டும் குளித்து வீட்டில் சிவபூஜை செய்ய வேண்டும். சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு ஆலயம் சென்று சிவதரிசனம் செய்ய வேண்டும்.  

வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்தலும் நலம். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தல் கூடுதல் உத்தமம்.

நான்கு கால பூஜைகளின் போது ஆலயத்திலேயே இருந்து தரிசனம் செய்யும் பக்தர்கள் நான்காவது கால பூஜை முடிந்தபின், இல்லங்களுக்கு சென்று பொழுது புலரும் நேரத்தில் நீராடி மறுபடியும் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்த பின்னர்,  அன்னதானத்துடன் விரதத்தினை நிறைவு செய்ய வேண்டும்.

மகாசிவராத்திரி விரதத்தினால் கோபம் கட்டுப்படும். சிந்தை அமைதியுறும். பற்றற்ற நிலை ஏற்பட்டு பேராசைகள் விலகும். எவ்வுயிர்க்கும் தீங்கு நினையாது மனம் செம்மையுறும். உடல் நலம் பெருகும்.

இத்தகைய சிறப்பு மிக்க சிவராத்திரி - வடக்கே பனிமலைச் சிகரம் முதற்கொண்டு தெற்கே இந்து மகாசமுத்திரம் வரை - பாரதம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.  

ஈசன் எழுந்தருளியுள்ள எல்லா சிவாலயங்களிலும்  எம்பெருமானை பக்தர்கள் கூட்டங்கூட்டமாக சென்று சிவராத்திரியன்று தரிசனம் செய்வார்கள். 

வடநாட்டில் சிவலிங்கத்திற்கு நாமே அபிஷேகம் செய்யலாம் என்பது சிறப்பு..

தவிர்க்க முடியாத காரணங்களினால் ஆலயத்திற்கு செல்ல இயலாதவர்கள் தங்கள் இல்லத்திலேயே இறைவனை தியானித்து வழிபட வேண்டும்.

சிவசிவ என்கிலர் தீ வினையாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதிதானே... 

                                                    - திருமூலர் அருளிய திருமந்திரம்.

தென்னாடுடைய சிவனே போற்றி!.
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!.  

''திருச்சிற்றம்பலம்''
பூஜைகளில் ராத்திரி பூஜைகளுக்கு சில மகத்துவங்கள் உண்டு. பரிவார தேவதைகள், காவல் தெய்வங்கள், சுடலைமாடன், முனீஸ்வரர், இருளப்பர் போன்ற தேவாதிகளுக்கு ராத்திரி பூஜைகள் விசேஷம். இவர்கள் எல்லாம் சிவனின் அம்சமாக கருதப்படுகிறவர்கள். - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=21675#sthash.zrxC6kZB.dpuf
ஆஅபூஜைகளில் ராத்திரி பூஜைகளுக்கு சில மகத்துவங்கள் உண்டு. பரிவார தேவதைகள், காவல் தெய்வங்கள், சுடலைமாடன், முனீஸ்வரர், இருளப்பர் போன்ற தேவாதிகளுக்கு ராத்திரி பூஜைகள் விசேஷம். இவர்கள் எல்லாம் சிவனின் அம்சமாக கருதப்படுகிறவர்கள். - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=21675#sthash.zrxC6kZB.dpuf
பூஜைகளில் ராத்திரி பூஜைகளுக்கு சில மகத்துவங்கள் உண்டு. பரிவார தேவதைகள், காவல் தெய்வங்கள், சுடலைமாடன், முனீஸ்வரர், இருளப்பர் போன்ற தேவாதிகளுக்கு ராத்திரி பூஜைகள் விசேஷம். இவர்கள் எல்லாம் சிவனின் அம்சமாக கருதப்படுகிறவர்கள். - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=21675#sthash.zrxC6kZB.dpuf
பூஜைகளில் ராத்திரி பூஜைகளுக்கு சில மகத்துவங்கள் உண்டு. பரிவார தேவதைகள், காவல் தெய்வங்கள், சுடலைமாடன், முனீஸ்வரர், இருளப்பர் போன்ற தேவாதிகளுக்கு ராத்திரி பூஜைகள் விசேஷம். இவர்கள் எல்லாம் சிவனின் அம்சமாக கருதப்படுகிறவர்கள். - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=21675#sthash.zrxC6kZB.dpuf
பூஜைகளில் ராத்திரி பூஜைகளுக்கு சில மகத்துவங்கள் உண்டு. பரிவார தேவதைகள், காவல் தெய்வங்கள், சுடலைமாடன், முனீஸ்வரர், இருளப்பர் போன்ற தேவாதிகளுக்கு ராத்திரி பூஜைகள் விசேஷம். இவர்கள் எல்லாம் சிவனின் அம்சமாக கருதப்படுகிறவர்கள். - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=21675#sthash.zrxC6kZB.dpuf
பூஜைகளில் ராத்திரி பூஜைகளுக்கு சில மகத்துவங்கள் உண்டு. பரிவார தேவதைகள், காவல் தெய்வங்கள், சுடலைமாடன், முனீஸ்வரர், இருளப்பர் போன்ற தேவாதிகளுக்கு ராத்திரி பூஜைகள் விசேஷம். இவர்கள் எல்லாம் சிவனின் அம்சமாக கருதப்படுகிறவர்கள். - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=21675#sthash.zrxC6kZB.dpuf
பூஜைகளில் ராத்திரி பூஜைகளுக்கு சில மகத்துவங்கள் உண்டு. பரிவார தேவதைகள், காவல் தெய்வங்கள், சுடலைமாடன், முனீஸ்வரர், இருளப்பர் போன்ற தேவாதிகளுக்கு ராத்திரி பூஜைகள் விசேஷம். இவர்கள் எல்லாம் சிவனின் அம்சமாக கருதப்படுகிறவர்கள். - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=21675#sthash.zrxC6kZB.dpuf
பூஜைகளில் ராத்திரி பூஜைகளுக்கு சில மகத்துவங்கள் உண்டு. பரிவார தேவதைகள், காவல் தெய்வங்கள், சுடலைமாடன், முனீஸ்வரர், இருளப்பர் போன்ற தேவாதிகளுக்கு ராத்திரி பூஜைகள் விசேஷம். இவர்கள் எல்லாம் சிவனின் அம்சமாக கருதப்படுகிறவர்கள். - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=21675#sthash.zrxC6kZB.dpuf
பூஜைகளில் ராத்திரி பூஜைகளுக்கு சில மகத்துவங்கள் உண்டு. பரிவார தேவதைகள், காவல் தெய்வங்கள், சுடலைமாடன், முனீஸ்வரர், இருளப்பர் போன்ற தேவாதிகளுக்கு ராத்திரி பூஜைகள் விசேஷம். இவர்கள் எல்லாம் சிவனின் அம்சமாக கருதப்படுகிறவர்கள். - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=21675#sthash.zrxC6kZB.dpuf
பூஜைகளில் ராத்திரி பூஜைகளுக்கு சில மகத்துவங்கள் உண்டு. பரிவார தேவதைகள், காவல் தெய்வங்கள், சுடலைமாடன், முனீஸ்வரர், இருளப்பர் போன்ற தேவாதிகளுக்கு ராத்திரி பூஜைகள் விசேஷம். இவர்கள் எல்லாம் சிவனின் அம்சமாக கருதப்படுகிறவர்கள். - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=21675#sthash.zrxC6kZB.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..