நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி மகம்
திங்கட்கிழமை
இன்று
ஸ்ரீ மாணிக்க வாசகர் குருபூஜை
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே..
பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே..
கண்ணப்பன் ஒப்பதோர்
அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில்
என்னையும் ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
வா என்ற வான் கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே
சென்று ஊதாய் கோத்தும்பீ..
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா
போற்றி
மாணிக்க வாசகர் திருவடிகள் போற்றி
சிவாய நம ஓம்
**
ஓம் சிவாய நம. நமச்சிவாய என்று சொல்வோமே, நால்வகை நன்மைகளை வெல்வோம்.
பதிலளிநீக்குஓம் நம சிவாய
நீக்குதங்கள் அன்பின் வருகையும்
கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
மாணிக்க வாசகர் திருவடிகளே போற்றி.
பதிலளிநீக்குதென்னாடுடைய சிவனே போற்றி.
ஓம சிவாயநமக.
தங்கள் அன்பின் வருகையும்
நீக்குகருத்தும் மகிழ்ச்சி..
நன்றி மாதேவி
மாணிக்க வாசகர் அருளிய பாடல்களை பாடி மாணிக்கவாசகரை பணிந்து வணங்கி கொண்டேன். மாணிக்கவாசகர் குருபூஜை அன்று செய்யப்பட்ட சந்தனகாப்பு அலங்காரம் படம் அருமை.
பதிலளிநீக்குசந்தனக் காப்பு அலங்கார படம் சென்ற ஆண்டு
நீக்குதங்கள் அன்பின் வருகையும்
கருத்தும் மகிழ்ச்சி..
நன்றியம்மா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குமாணிக்க.வாசகரின் குருபூஜை படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. மாணிக்கவாசகர் இயற்றிய பாடல்கள் அருமை. அவர் பாடல்களைப் பாடி அவரை வணங்கி கொண்டேன்.
நமசிவாய போற்றி
நாதன் தாள் போற்றி...! . இம்ப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் போற்றி..!
சர்வேஸ்வரனே துண🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகையும்
நீக்குகருத்தும் மகிழ்ச்சி..
நன்றியம்மா