நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூன் 25, 2025

நவநீத சேவை

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 11
ஞாயிற்றுக்கிழமை

ஆனி மாதம் இரண்டாம் நாள் 
திங்களன்று (16/6) காலை 
தஞ்சை மா நகரில் நடைபெற்ற 
இருபத்தைந்து கருட சேவையைத் தொடர்ந்து ராஜ வீதிகளில் செவ்வாயன்று நடைபெற்ற 
(பதினைந்து) நவநீத சேவை எனும் வெண்ணெய்த் தாழி உற்சவம்.. 


















கருட சேவையன்றும் நவநீத சேவைன்றும் 
ராஜ வீதிகளில் மக்கள் - சித்ரான்னங்கள் மோர் பானகம் முதலானவற்றை  வழங்கியும் பட்டறைகளை இழுத்து வருகின்ற மாடுகளுக்கு பழங்கள் கொடுத்தும் நீரில் தீவனங்களைக் கரைத்து வைத்தும் புண்ணியம் தேடிக் கொண்டனர்..

ஓம் ஹரி ஓம்
நம சிவாய ஓம்
**

8 கருத்துகள்:

  1. // ராஜ வீதிகளில் மக்கள் - சித்ரான்னங்கள் மோர் பானகம் முதலானவற்றை வழங்கியும் பட்டறைகளை இழுத்து வருகின்ற மாடுகளுக்கு பழங்கள் கொடுத்தும் நீரில் தீவனங்களைக் கரைத்து வைத்தும் புண்ணியம் தேடிக் கொண்டனர்..//

    மிகவும் சிறப்பு. ஒரு திருவிழா என்றால், இது மாதிரி காட்சிகள் தான் திருவிழாவை மேலும் சிறப்பாக்கும். I miss நீர்மோர், பானகம்,, புளியோதரை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானகம் பதிவில் உள்ளதே... பெருமாள் கோயில் வைபவத்தில் புளியோதரை இல்லாமலா!...

      தங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
      கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. படங்கள் யாவும் சிறப்பு. வெயிலில் நின்று எடுத்துப் பகிர்ந்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
      கருத்தும் நெகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. நவநீதசேவை காட்சிகள் கண்டு தரிசித்தோம்.
    வெண்ணைத் தாழியுடன் பெருமாள் அழகான அலங்காரம்.

    ஓம் வெங்கடேசா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
      கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நவநீத கிருஷ்ணன் படங்கள் அனைத்தும் கண்களுக்கு விருந்து. நவநீத கிருஷ்ணரை தரிசித்துக் கொண்டேன். அனைவருக்கும் உணவுகள் அளித்தும், பசுக்களின் தாகம் தீர்த்தும் திருவிழாவை பக்தியுடன் கொண்டாடிய மக்களுக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
      கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..