நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 14
குறளமுதம்
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.. 14
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.. 14
**
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை
ஒண்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.. 4
ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிச்செய்த
தேவாரம்
திரு ஐயாறு
ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம் ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
திரு ஐயாறு அகலாத செம்பொற் சோதீ.. 6/38/1
நன்றி
பன்னிரு திருமுறை
**
ஓம் ஹரி ஓம்
சிவாய நம ஓம்
**


மார்கழி பதினான்காம் நாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்
என்ன சொல்லுங்க... பன்னிரு திருமுறை படிக்க எளிதாக இருக்கிறது. அதுவும் இன்றைய தேவாரம் சற்றே பல்லை பதம் பார்க்கிறது!
பதிலளிநீக்குபொருள் பொதிந்த பாடல்... எனக்கு மிகவும் பிடித்தமான திருப் பாடல்..
நீக்குஅன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய குறளமுதம் நன்று. படங்களில் இறைவனை தரிசித்துக் கொண்டேன். திருப்பாவை பாசுரம், திருவெம்பாவை பாடல், தேவாரம், அனைத்தையும் பாடி மகிழ்ந்தேன். தினமும் இறை நாமாவை சொல்வதும், இறைவனை நினைப்பதும் ஒரு அரும்பெரும் செயல். அத்தகைய செயலை செய்து வரும் உங்கள் இறை தொண்டினை பணிந்து வணங்குகிறேன்.
ஓம் நமோ நாராயணா..🙏
ஓம் நமசிவாய.. 🙏.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.