நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமை.. இன்றைய தினத்தின் சிறப்புகளை நம் அனைவரும் அறிவோம்..
அம்பிகையின் மங்கலத்தை மணக்கோலத்தில் வர்ணித்து அபிராமபட்டர் அருளிச்செய்த திருப்பாடல் இது.. இதனைத் தொடர்வது அம்பிகையின் நாமாவளி.. அவளது திருப்பெயர்களை உளமுருகக் கூறுதலே சிறந்த வாழ்வுக்கு அடிப்படை..
எல்லாரும் செய்கின்றார்கள் என்று - நானும் பதிகம் ஒன்றினை எழுதி அதை இன்றைக்கு பதிவேற்றம் செய்யலாம் என்றிருந்தேன்..
ஆனாலும் மரபின் வழி நின்று மங்கல கீதமாக அபிராம வல்லியின் புகழ் பாடி போற்றி வணங்குவதற்காக இந்தத் திருப்பாடல்கள் இந்தப் பதிவில்!..
*
கங்கையொடு தும்பையும் அணிந்தவர் வியக்கும் கலாமதியை நிகர் வதனமும்
கருணைபொழி விழிகளும் விண்முகில்கள் வெளிறெனக் காட்டிய கருங் கூந்தலும்
சங்கையில்லாது ஒளிரும் மாங்கல்ய தாரணம் தங்குமணி மிடறு மிக்க
சதுர்பெருகு துங்கபா சாங்குசம் இலங்குகர தலமும் விரல் அணியும் அரவும்
புங்கவர்க் கமுதருளு மந்தர குசங்களும் பொலியும் நவமணி நூபுரம்
பூண்ட செஞ்சேவடியை நாளும் புகழ்ந்துமே போற்றியென வாழ்த்த விடை மேல்
மங்கலம் மிகுந்தநின் பதியுடன் வந்தருள் செய் வளர் திருக்கடவூரில் வாழ் வாமி சுபநேமி புகழ் நாமி சிவசாமி மகிழ் வாமி அபிராமி உமையே!..
சந்த்ர சடாதரி முகுந்த சோதரி துங்க சல சுலோசன மாதவி சம்ப்ரம பயோதரி சுமங்கலி சுலட்சணி சாற்றருங் கருணாகரி
அந்தரி வராகி சாம்பவி அமர தோதரி அமலை செக சால சூத்ரி அகிலாத்ம காரணி வினோதசய நாரணி அகண்ட சின்மய பூரணி
சுந்தரி நிரந்தரி துரந்தரி வரைராச சுகுமாரி கௌமாரி உத்துங்க கல்யாணி புஷ்பாஸ்திராம் புயபாணி தொண்டர்கட்கருள் சர்வாணி
வந்தரி மலர் பிரமராதி துதி வேதவொலி வளர்திருக்கடவூரில் வாழ் வாமி சுபநேமி புகழ் நாமி சிவசாமி மகிழ் வாமி அபிராமி உமையே!..
-: ஸ்ரீ அபிராமி பட்டர் :-
*
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
***
ஆடி முதல் வெள்ளியின் சிறப்புப் பதிவு நன்று. நீங்கள் எழுதியதையும் வெளியிட்டிருக்கலாமே...
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குஞாயிறு அன்றிலிருந்து அந்தப் பாமாலை வெளியாகும்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. ஆடி முதல் வெள்ளியன்று அம்மனின் அருள் மிகும் தரிசன பகிர்வு டன் அருமையான ஸ்ரீஅபிராமி பட்டரின் பாடல்களையும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
அம்மனை பாடல்களைப் பாடித்துதித்து வணங்கிக் கொண்டேன். தாங்கள் அம்மன் மேல் இயற்றிய பாமாலையையும் இன்றே வெளியிட்டு இருக்கலாமே... பாடி ரசித்திருக்கலாம். பக்திப் பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அந்தப் பாமாலை ஞாயிறன்று வெளியாகும்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி..
ஆடி வெள்ளி சிறப்பு பதிவு நன்று.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி ஜி..
நீக்குசிறப்பு...
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..
நீக்குசிறப்பான தரிசனம்
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி..
நீக்குஅபிராமி பட்டரின் பதிகம் பாடி அபிராமி அன்னையை தரிசனம் செய்து கொண்டேன்.
பதிலளிநீக்குஆடிவெள்ளி சிறப்பு பதிவு அருமை.
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி..
நீக்குநலம் வாழ்க..
ஆடி வெள்ளி வாழ்த்துகள். அம்மனை போற்றும் சிறப்பான பகிர்வு.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும்
நீக்குவாழ்த்துரைக்கும்
நன்றி..
வாழ்க நலம்..