வாழ்க வையகம்..
வாழ்க நலமுடன்!...
இங்கு கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன...
வெள்ளிக் கிழமையுடன் விமான நிலையம் முற்றாக மூடப்பட்டு விட்டது..
மேலும் வரலாற்றில் முதன்முறையாக வெள்ளிக்கிழமையன்று
நகரில் கூடும் கூட்டம் தடுக்கப்பட்டிருக்கின்றது...
ஆங்காங்கே தொலைதூரத்திலும் வீடுகளின் உள்ளேயும் வாரம் முழுதும் பணி செய்வோர் தமக்கு சற்றே ஆறுதலும் தேறுதலும் ஆவது வெள்ளிக் கிழமை விடுமுறை..
விடுமுறை - விடுமுறையாக இருக்க
வெளியே எங்கும் செல்ல முடியாதவாறு பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டு விட்டது...
அதனால் டாக்ஸி ஓட்டிகளின் காட்டில் மட்டும் சற்றே கனமழை...
நகரில் கூட்டத்தை எதிர்பார்த்து வழக்கம் போலத் தயாராக இருந்த
உணவகங்கள் அனைத்தும் விற்பனை சரிவுக்கு ஆளாகின...
வீதிகளில் மக்கள் கூட்டமாகக் கூடி நிற்காதபடிக்கு
காவல் மற்றும் சுகாதாரத் துறையினர் சுற்றிச் சுற்றி வந்து தடுப்பதோடு -
Face Mask அணிவதை கட்டாயமாக்குகின்றனர்..
கையுறைகள் அணிவதை வற்புறுத்துகின்றனர்...
இரண்டு நாட்களாக எங்கள் இருப்பிடத்துக்கு எதிரே உள்ள வங்கி
பகல் பதினொரு மணிக்குத் தான் திறக்கப்பட்டது..
ஆயினும் ஒரு மணிக்கெல்லாம் மூடப்பட்டு விட்டது...
எங்கும் பரவலாக இருக்கின்ற ஒப்பனை நிலையங்கள் மூடப்பட்டு விட்டன..
எங்கள் குடியிருப்புக்கு அருகிலுள்ள கடைகளும் உணவகங்களும் அடைக்கப்பட்டுக் கிடக்கின்றன...
சற்றே ஆறுதலாக
அருகிலுள்ள Grand Hyper Mall வழக்கம் போல இயங்கிக் கொண்டிருக்கின்றது...
வளாகத்தினுள் பல இடங்களில் Hand Sanitizer வைக்கப்பட்டிருக்கின்றன..
இயல்பு நிலைக்கு மறு அறிவிப்பு எப்போது வரும் என்று தெரியவில்லை...
இத்தனை களேபரத்துக்கு இடையே Net Pack முடிந்து விட்டது...
கடைகள் மூடப்பட்டு விட்டதால் உடனடியாக Recharge செய்யமுடியவில்லை..
சற்றே பணம் கொடுத்து புதிய இணைப்பு வாங்க விட்டேன்...
இதனிடையே பல்கலை வளாகம் மூடப்பட்டு விட்டதால்
அதனுள்ளிருந்த எங்கள் நிறுவனத்தின் உணவகமும் மூடப்பட விட்டது...
கடந்த பிப்ரவரி 25, 26 தேதிகளில் இந்நாட்டின் தேசிய தின விடுமுறைக்குப் பின்
மார்ச் முதல் தேதி வேலை நாள் என்றிருந்த நிலையில்
தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு விட்டது...
இதனால் உணவகத்தில் இருந்த Freezer/ Chiller பொருட்களை அப்புறப்படுத்த வேண்டிய அவசியமும் சேர்ந்து கொண்டது...
Dry Store பொருட்களைத் தவிர்த்த மற்றவைகளை ஒருங்கு செய்து பட்டியலிட்டு தலைமையகத்தில் ஒப்படைத்தாயிற்று...
மீண்டும் பல்கலைக் கழகத்தின் உணவகங்கள் திறக்கப்படும் போதுதான் அங்கே வேலை..
இந்நிலையில் -
நிறுவனத்தின் மற்ற தளங்களில்
கூடுதலான ஆட்களை இட்டு நிரப்பியிருக்கின்றார்கள்..
அதன்படி எனக்கும் வேலை கிடைத்துள்ளது..
என்றாலும் -
முன்னெப்போதும் சந்தித்திராத சில சிரமங்கள் சூழ்ந்துள்ளன...
சில மாதங்களைக் கடந்தாக வேண்டும்...
பற்களைக் கடித்துக் கொள்ளத்தான் வேண்டும்!...
இம்மாத இறுதியில்
சூரியன் காலைப் பொழுதிலேயே உக்ரம் கொண்டு எழுந்து விடுவான் ..
சர்வ சாதாரணமாக 20 டிகிரி பாரன்ஹீட்டுடன் தான் காலை நேரம் தொடங்கும்...
குறுகி வந்த கொரானா அவ்வேளையில் குற்றுயிராகி ஒழியக்கூடும்...
இந்த நாடு மட்டுமின்றி அனைத்து வளைகுடா நாடுகளிலும்
தாய் தந்தையரை மனைவி மக்களை உற்றாரை மற்றோரைப் பிரிந்து
இங்கே பணி செய்து கிடக்கும் ஆயிரமாயிரம் மக்களை -
அவர்கள் எந்த நாடு ஆயினும் எந்த மதம் ஆனாலும் எத்தன்மையர் ஆயினும்
அவர்கள் அத்தனை பேரையும் இறைவன் தான் காத்து அருள வேண்டும்..
அத்துடன்
இம்மண்ணின் மக்களையும் எம்பெருமான் தான் ரக்ஷிக்க வேண்டும்...
நேற்று (16/3) சிறப்பு விமானம் மூலம் LuLu Super Market தனது விற்பனை வளாகங்களுக்காக காய்கறி மற்றும் பழங்களை வரவழைத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது...
இன்றைய பதிவில் அழகான காணொளி ஒன்று...
எங்கள் பிளாக்கில் எனது நலம் கேட்ட
அனைவருக்கும் நன்றி.. நன்றி..
நாயினும் கடைப்பட்டேனை நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே அமுதம் ஒத்து
நீயும் என்னெஞ்சுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க
நோயவை சாரும் ஆகில் நோக்கி நீஅருள் செய்வாயே!..
-: திருநாவுக்கரசர் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ
இன்னும் இங்கே பேஸ் மாஸ்க், கையுறை அணிவதை கட்டாயமாக்கவில்லை.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு...
நேற்றெல்லாம் இங்கு சென்னையிலும் வெயில் கொளுத்தியது. சில மாதங்களைக் கடந்தாக வேண்டும் என்கிற குறிப்பு பயமுறுத்துகிறது.
பதிலளிநீக்குசீக்கிரமாக ஓடி விடும் நாட்கள்...
நீக்குஇறைவன் துணையுண்டு...
சீக்கிரமே சங்கடங்கள் விலகி நலம் விளையாட்டும். எம்பெருமான் எல்லோரையும் காக்கட்டும்.
பதிலளிநீக்குஎம்பெருமான் எல்லாரையும் காக்கட்டும்..
நீக்குஅவ்வண்ணமே வேண்டிக் கொள்வோம்...
இங்கே கோயில்களுக்கு வரும் மக்கள் முகமூடி அணியவேண்டும் என்பது கட்டாயம். மதுரை மீனாக்ஷி கோயில், ஸ்ரீரங்கம் கோயில் ஆகிய கோயில்களிலேயும் இதைக் கடைப்பிடிக்கின்றனர். மற்றபடி மக்கள் அதிகம் கூடுவதாகத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்து சில, பல திருமணங்கள், கிரஹப்ரவேசம் போன்றவை ஒத்திப் போடப்பட்டுள்ளன. திருமணம் ஏற்பாடு செய்தவர்களுக்கு மனக்கஷ்டம், பொருள் நஷ்டம்!
பதிலளிநீக்குகுறை தீர்க்கும் கோயில் கொரானாவைத் தீர்க்காதா!...
நீக்குஎன்றாலும் நாமும் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது தானே!...
எல்லாரையும் இறைவன் காத்தருளட்டும்!..
துரை, நீங்களும் கையுறை, முகமூடி அணிந்து கொண்டு பாதுகாப்பாக இருக்கவும்.
பதிலளிநீக்குநானும் அப்படித்தான் இருக்கிறேன்...
நீக்குபணியிடத்திலும் வெளியே செல்லும் போதும் அவை அவசியம்...
எனினும் அறைக்குள் இருக்கும் போது Mask அணிவதில்லை...
வலைத்தளம் வரமுடியாத காரணங்களை தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குவிரைவில் இறைவன் அருளால் இந்த கஷ்டங்கள் விலக வேண்டும்.
உணவங்கள் மூடி விட்டால் நீங்கள் எங்கு சாப்பிடுகிறீர்கள். சமைக்கும் வசதி இருக்கா? நீங்கள் தங்கி இருக்கும் இடத்தில்?
காணொளி பார்த்தேன். சுத்தம் சுத்தம் படு சுத்தம் செய்கிறார்கள்.
விரைவில் எல்லாம் சரியாக வேண்டும்.
வாழ்க வையகம், வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்.
பொது உணவகங்கள் மூடப்பட்டு விட்டதே தவிர
நீக்குஎங்களுக்கு கம்பெனி வழங்கும் உணவுக்குப் பிரச்னை இல்லை...
அந்த சமையற்கூடத்தில் தான் இப்போது தற்காலிகமாக வேலை...
மற்றபடி அறைக்குள் ஆளில்லாத போது எளிமையாக சமைத்துக் கொள்கிறேன்...
வாழ்க வையகம்.. வாழ்க நலமுடன்..
எங்கு நோக்கிலும் விழிப்புணர்வு செய்திகள் ...
பதிலளிநீக்குஇந்த செய்திகள் இது இன்னும் இன்னும் அனைவருக்கும் சென்று சேர்ந்து எல்லாரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் ..
எங்கும் நலமே விளயட்டும் ...
எல்லாரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்..
நீக்குஎங்கும் நலமே விளையட்டும்...
எல்லாம் நலமாகும் என்று நம்புவோம் ஜி
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குநம்பிக்கையே வாழ்க்கை...
நலமே விளைக..
விரைவில் நல்லதொரு தீர்வு கிடைக்கும்...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குவிரைவில் நல்லது தீர்வு கிடைக்கட்டும்...
அன்பு துரை, சற்று கவலையாகத் தான் இருந்தது.
பதிலளிநீக்குபாசம் வளர்த்து விட்டோம் எல்லோருடனும்.
தாங்கள் நலமாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சி.
மன வளம், உடல் நலம் எப்பொழுதும்
மேலோங்க அன்னை காப்பாள்.
அன்னை அனைவரையும் காத்தருள்வாளாக..
நீக்குமகிழ்ச்சி.. நன்றியம்மா..
பாதுகாப்பாக இருங்கள் ஐயா
பதிலளிநீக்குஅன்பின் ஐயா...
நீக்குதங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
ஓ வெளிநாடுகள் அனைத்திலும் கொரனா தாக்கம் கூடியிருக்கிறது, உங்களிடத்தில் பெரிதாக இல்லைப்போலும் என்றெல்லோ நினைச்சிருந்தேன் துரை அண்ணன், கவனமாக இருங்கோ, பொருட்கள் கொஞ்சம் வாங்கி சேமித்து வையுங்கோ.
பதிலளிநீக்குஅன்பின் அதிரா...
நீக்குகவனமுடன் இருக்கிறேன்..
தங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
இங்கு மாஸ்க், கையுறை கட்டாயமில்லை...
பதிலளிநீக்குநோயின் தீவிரம் அதிகமாகியிருக்கிறது.
வீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி இருக்கின்றன. பள்ளிகளில் தொழுகை ரத்தாகியிருக்கிறது.
விமான சேவைகள் ரத்தாகியிருக்கிறது.
பார்த்து இருங்கள் ஐயா...
பத்திரம்...
அன்பின் குமார்..
நீக்குகவனமாகத்தான் இருக்கிறேன்...
தங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
தனியாக இருக்கிறீர்கள். உங்கள் குடும்பத்தாருக்கு அதுவே கவலையாக இருக்கும். ஜாக்கிரதையாக இருங்கள். அனைவரையும் ஆண்டவன் காக்கட்டும்.
பதிலளிநீக்குஉண்மைதான்... ஆளுக்கு ஒரு திசையாய் ஆனது வாழ்வு.... அபுதாபியில் மருமகன் மகள் பேத்திகள்...
நீக்குஎல்லாருக்கும் இறைவன் ஒருவனே பாதுகாப்பு...
தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நலமே விளையட்டும். இங்கேயும் சூழல் மாறிக் கொண்டு வருகிறது. விரைவில் இந்தப் பேரிடரிலிருந்து உலகம் முன்னேற்றப் பாதையில் திரும்ப எல்லாம் வல்லவன் அருள் புரியட்டும்.
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்...
நீக்குநாமும் பத்திரமாக இருப்போம்...
பேரிடரில் இருந்து மீள்வதற்கு
எல்லம் வல்ல இறைவன் நல்லருள் புரியட்டும்...
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...