நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பிணியும் பகையும் நீங்கிட வேண்டும்..
***
நாளும் பாராயணம் செய்வோர் தம் வாழ்வில்
நலம் பல சேர்க்கும் அற்புதத் திருப்பதிகம்..
இன்றைய பதிவில்
திருக்கடவூர்த் திருப்பதிகம்..
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் செய்தருளிய
திருப்பதிகம்
ஏழாம் திருமுறை
திருப்பதிக எண் 28
திருக்கடவூர் வீரட்டம்
யம தர்மராஜன் தண்டிக்கப்பட்ட திருத்தலம்
இறைவன் - ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ அபிராமவல்லி
தீர்த்தம் - அமிர்த தீர்த்தம்
தலவிருட்சம் - பிஞ்சிலம் (முல்லை)
ஏழாம் திருமுறை
திருப்பதிக எண் 28
திருக்கடவூர் வீரட்டம்
யம தர்மராஜன் தண்டிக்கப்பட்ட திருத்தலம்
ஸ்ரீ காலசம்ஹாரமூர்த்தி - ஸ்ரீ பாலாம்பிகை |
அம்பிகை - ஸ்ரீ அபிராமவல்லி
தீர்த்தம் - அமிர்த தீர்த்தம்
தலவிருட்சம் - பிஞ்சிலம் (முல்லை)
பொடியார் மேனியனே புரிநூலொரு பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல் வளரங்கையின் மங்கையொடும்
கடியார் கொன்றையனே கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக்கார்துணை நீயலதே.. 1
வடியார் மூவிலைவேல் வளரங்கையின் மங்கையொடும்
கடியார் கொன்றையனே கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக்கார்துணை நீயலதே.. 1
பிறையாருஞ் சடையாய் பிரமன் தலையிற் பலிகொள்
மறையார் வானவனே மறையின் பொருள் ஆனவனே
கறையாரும் மிடற்றாய் கடவூர் தனுள் வீரட்டத்தெம்
இறைவா என்னமுதே எனக்கார் துணை நீயலதே.. 2
அன்றாலின் நிழற்கீழ் அறம் நால்வர்க்கருள் புரிந்து
கொன்றாய் காலனுயிர் கொடுத்தாய் மறையோனுக்குமான்
கன்றா ருங்கரவா கடவூர்த் திருவீரட்டத்துள்
என்றாதைப் பெருமான் எனக்கார் துணை நீயலதே.. 3
போராருங் கரியின் உரிபோர்த்துப் பொன்மேனியின்மேல்
வாராரும் முலையாள் ஒருபாகம் மகிழ்ந்தவனே
காராரும் மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டானத்து
ஆராஎன்னமுதே எனக்கார் துணை நீயலதே.. 4
மையார் கண்டத்தினாய் மதமாவுரி போர்த்தவனே
பொய்யா தென்னுயிருள் புகுந்தாய் இன்னம் போந்தறியாய்
கையார் ஆடரவா கடவூர்தனுள் வீரட்டத்தெம்
ஐயா என்னமுதே எனக்கார் துணை நீயலதே.. 5
மண்ணீர் தீவெளிகால் வருபூதங்கள் ஆகிமற்றும்
பெண்ணோடாண் அலியாய்ப் பிறவாவுரு ஆனவனே
கண்ணாருண் மணியே கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அண்ணா என்னமுதே எனக்கார் துணைநீயலதே.. 6
ஸ்ரீ அபிராமவல்லி |
நரியாருஞ் சுடலை நகுவெண்தலை கொண்டவனே
கரியார் ஈருரியாய் கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அரியாய் என்னமுதே எனக்கார் துணை நீயலதே.. 7
வேறா உன்னடியேன் விளங்குங்குழைக் காதுடையாய்
தேறேன் உன்னையல்லாற சிவனே என்செழுஞ்சுடரே
காறார் வெண்மருப்பா கடவூர்த்திரு வீரட்டத்துள்
ஆறார் செஞ்சடையாய் எனக்கார் துணை நீயலதே.. 8
அயனோ டன்றரியும் அடியும்முடி காண்பரிய
பயனே எம்பரனே பரமாய பரஞ்சுடரே
கயமா ருஞ்சடையாய் கடவூர்த்திரு வீரட்டத்துள்
அயனே என்னமுதே எனக்கார் துணை நீயலதே.. 9
காராரும் பொழில்சூழ் கடவூர்த் திரு வீரட்டத்துள்
ஏராரும் இறையைத் துணையா எழில் நாவலர்கோன்
ஆருரன் அடியான் அடித்தொண்டன் உரைத்ததமிழ்
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத் திருப்பாரே.. 10
திருச்சிற்றம்பலம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ
தரிசனம் நன்று வாழ்க வையகம்...
பதிலளிநீக்குநல்ல பதிகம் படித்தேன்.
பதிலளிநீக்குஇன்றைய தரிசனத்திற்கு நன்றி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
மக்கள் நலமுடன் வாழ அபிராமி அமிர்தகடேஸ்வரர் அருள்புரிய வேண்டும்.
மனபலம், உடல்பலம் வேண்டும் இறைவா அனைவருக்கும்.
ஓம் நமச்சிவாய...
பதிலளிநீக்குநல்ல பதிவு. அவனருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்.
பதிலளிநீக்குநலமே விளையட்டும்.
நல்ல பதிகத் தேர்வு.
பதிலளிநீக்குஓம்... சிவாய நாம ஓம்.
பதிலளிநீக்குபார்த்து தொழுதுவிட்டு படுக்கச் செல்கிறேன் அண்ணா. நலமே விளைந்திட வேண்டும் உலகம் முழுவதும்.
பதிலளிநீக்குகீதா
யமனைத் தண்டித்த நாயகர் அனைவரையும் காத்து அருளட்டும். மார்க்கண்டேயன் சரண் அடைந்ததைப் போல் நாம் அனைவருமே அவன் தாளைச் சரண் அடைவோம். அனைவரையும் காக்கட்டும்.
பதிலளிநீக்கு