நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 24, 2020

சிவமே சரணம் 2

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பிணியும் பகையும் நீங்கிட வேண்டும்..
***

நாளும் பாராயணம் செய்வோர் தம் வாழ்வில்
நலம் பல சேர்க்கும் அற்புதத் திருப்பதிகம்..

இன்றைய பதிவில்
இடர் களையும் திருப்பதிகம்..

அருளிச் செய்தவர்
திருஞானசம்பந்தப் பெருமான் 

திருத்தலம் - திருநெடுங்களம்

ஸ்ரீ நெடுங்கள நாதர் 
ஸ்ரீ ஒப்பிலா நாயகி 
இறைவன் - நெடுங்கள நாதர்
அம்பிகை - ஒப்பிலாநாயகி

தீர்த்தம் - சுந்தர தீர்த்தம்
தல விருட்சம் - வில்வம்

திருச்சிராப்பள்ளியை அடுத்துள்ள 
திரு எறும்பூரில் இருந்து எட்டு கி.மீ., தொலைவு..
துவாக்குடி வழியாக பேருந்துகள் இயங்குகின்றன..

முதலாம் திருமுறை
ஐம்பத்து இரண்டாவது திருப்பதிகம்


அம்மையப்பன் தரிசனம் 

மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்று உன்னைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே..{01}

கனைத்தெழுந்த வெண்திரைசூழ் கடலிடை நஞ்சு தன்னைத்
தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ நின்னை
மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணியிராப் பகலும்
நினைத்தெழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே..{02}

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்
திரு ஆனைக்கா 
நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத
என்னடியான் உயிரை வவ்வேல் என்றடர் கூற்றுதைத்த
பொன்னடியே பரவி நாளும் பூவொடு நீர் சுமக்கும்
நின்னடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.. {03}

மலைபுரிந்த மன்னவன்றன் மகளை யோர்பால் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவா நின்தாள் நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.. {04}

ஸ்ரீ எறும்பீஸ்வரர் - திரு எறும்பூர் 
பாங்கின் நல்லார் படிமஞ் செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவ நின்தாள் நிழற்கீழ்
நீங்கிநில்லார் இடர் களைவாய் நெடுங்களம் மேயவனே.. {05}

விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ் சடைமேற் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவ நின்னடி யிணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.. {06}

ஸ்ரீ சுத்த ரத்னேஸ்வரர்
திரு ஊற்றத்தூர்.. 
கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தம் ஈதென் றெம்பெருமான் அணிந்த
நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.. {07}

குன்றின்உச்சி மேல் விளங்குங் கொடிமதில் சூழிலங்கை
அன்றிநின்ற அரக்கர் கோனை அருவரைக் கீழ்அடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்பகலும்
நின்றுநைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே..{08}

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி
திரு ஊற்றத்தூர் (லால்குடி அருகில்) 
வேழவெண் கொம்பு ஒசித்த மாலும் விளங்கிய நான்முகனும்
சூழ வெங்கு நேடவாங்கோர் சோதி உள்ளாகி நின்றாய்
கேழல்வெண்கொம்பு அணிந்த பெம்மான் கேடிலாப் பொன்னடியின்
நீழல்வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.. {09}

வெஞ்சொல் அஞ்சொல்லாக்கி நின்ற வேடமில்லாச் சமணும்
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவம் ஒன்றறியார்
துஞ்சலில்லா வாய் மொழியாற் தோத்திர நின்னடியே
நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.. {10}

ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி உடனாகிய
ஸ்ரீ சோற்றுத்துறை நாதர்
திருச்சோற்றுத்துறை (திருஐயாறு அருகில்) 
நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்
சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக் கோன் நலத்தால்
நாடவல்ல பனுவல் மாலை ஞான சம்பந்தன் சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே.. {11}

திருச்சிற்றம்பலம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

20 கருத்துகள்:

  1. நலமே விளையட்டும்.

    எம்பெருமான் ஈசன் அனைவருக்கும் நல்லதே அருளட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்...
      தங்களுக்கு நல்வரவு...

      ஈசன் அனைவருக்கும் நல்லதே அருளட்டும்...

      நீக்கு
  2. அனைவரும் நலம் பெறட்டும் வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
  3. இன்று காலை படித்து விட்டேன்.
    நேற்று விஷகாய்ச்சல், குளிர் காய்ச்சல் மற்றும் வினையால் வரும் துன்பங்கள் போக்கும்.

    எல்லோரும் நலமாக இருக்க படிப்போம்.
    நன்றி, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      எல்லாரும் நலமாக இருக்கட்டும்...

      தங்கள் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி...

      நீக்கு
  4. ஓம் நமச்சிவாய...
    எல்லாரும் நல்லாயிருக்கட்டும்.
    படங்கள் அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்...

      எல்லாரும் நலமாக இருக்கட்டும்...

      நீக்கு
  5. நேற்று குளிர் காய்ச்சல், விஷகாய்ச்சல், வினையால் வரும் துன்பங்கள் போக்கும் பதிகம்
    "அவ்வினைக் கிவ்வினையாம் என்று ஆரம்பிக்கும் திருநீலகண்டப் பதிகம் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  6. இக்கோயிலுக்குப் பலமுறை சென்றுள்ளேன். உரிய நேரத்தில் சரியான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  7. போகாத கோயில்களில் இவையும் உண்டு. நல்லதொரு தரிசனம் கிட்டியது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      திருச்சிக்கு அருகில் தானே நெடுங்களம்....
      விரைவில் வாய்ப்பு கூடி வரும்...

      மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  8. நம்பிக்கைதான் பெரும்பல்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...

      நம்பிக்கைதான் பெரும் பலம்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. ஓம் சிவாய நம.   சிவனின் கருணை அனைவர் மீதும் பரவட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம் ...

      சிவனருள் பரவட்டும் அகிலமெல்லாம்...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..