நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஏப்ரல் 16, 2019

சித்திரைத் திருவிழா 5

கடம்ப வனமாகிய மாதுரைத் திருநகரில் நிகழும்
சித்திரைப் பெருவிழாவின் திருக்காட்சிகள்
தொடர்கின்றன...

சோமசுந்தரப்பெருமானுடன் கூடி விளங்கும்
மங்கல மீனாள் திருக்கோலம் காண்பதற்கு
அரற்றிக் கிடக்கும் மனதிற்கு
இந்தப் படங்கள் ஆறுதலாக இருக்கின்றன...

நாம் மதுரையில் இருந்தாலும்
அம்மையப்பனின் திருக்கோலத்தினை
இத்துணை அருகில் கண்டு களிக்க இயலுமா!?..
தெரியவில்லை...

பற்பல சிரமங்களுக்கிடையில்
அம்மையப்பனின் தரிசனக் காட்சிகளை
வலையேற்றித் தரும் கலைஞர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி...
***
எட்டாம் (15/4) திருநாள் காலை
தங்கப்பல்லக்கு




முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆலவாயான் திருநீறே..(2/66)

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆலவாயான் திருநீறே..(2/66) 
-: திருஞானசம்பந்தர் :- 
***

எட்டாம் (15/4) திருநாள் மாலை
படியளக்கும் பரமேஸ்வரிக்கு
மதுரையம்பதியின் மகாராணியாக
பட்டாபிஷேகம்





சுரும்பு முரல் கடிமலர்ப் பூங்குழல் போற்றி
உத்தரியத் தொடித்தோள் போற்றி
கரும்புருவச் சிலை போற்றி
கவுணியர்க்குப் பால் சுரந்த கலசம் போற்றி
இரும்பு மனம் குழைத்தென்னை எடுத்தாண்ட
அங்கயற்கண் எம்பிராட்டி
அரும்பும் இளநகை போற்றி ஆரண நூபுரம் 
சிலம்பும் அடிகள் போற்றி..
-: பரஞ்சோதி முனிவர் :-








நலந்திகழ் வாயின் நூலால் சருகிலைப் பந்தர்செய்த
சிலந்தியை அரசதாள அருளினாய் என்று திண்ணம்
கலந்துடன் வந்து நின்றாள் கருதிநான் காண்பதாக
அலந்தனன் ஆலவாயில் அப்பனே அருள்செயாயே..(4/62)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ 

10 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    மதுரைத்திருவிழாக் காட்சிகள் பார்த்து எத்தனை வருடங்கள் ஆயிற்று தெரியுமா? என் ஆசை பெருகுதே...!

    பதிலளிநீக்கு
  2. அழகான அருமையான படங்கள். மீனாக்ஷி பட்டாபிஷேஹம் காணவும், திக்விஜயம் காணவும், திருக்கல்யாண நிகழ்வு காணவும் அலுக்கவே அலுக்காது. முன்னெல்லாம் சின்னக்கடை அருகே வியாபாரிகள் பந்தல் போட்டுப் பூக்கொட்டுவதற்கென பொம்மைகளைக் கட்டி வைப்பார்கள். திக்விஜயத்தன்று திக்விஜயம் நடக்கும் ஒவ்வொரு மூலைக்கும் ஓடோடிப் போய்த் தொடர்ந்து நின்று பார்ப்போம். ஒரு மூலையில் முடிந்ததும் அடுத்த மூலைக்கு ஸ்வாமி வருவதற்குள்ளாக ஓடோடிப் போய் நின்று கொள்வோம்.

    பதிலளிநீக்கு
  3. அழகிய படங்கள் தந்தமைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  4. அருமையான படங்களுடனும் பாக்களுடனும் அழகான பதிவு.

    பதிலளிநீக்கு
  5. படங்கள் அனைத்தும் அழகு.
    நேற்று சங்கரா தொலைக்காட்சியில் கண்டு களித்தேன் இந்த காட்சிகளை.

    பதிலளிநீக்கு
  6. பச்சைப் பசேல் என்று அம்மா வந்தால் பார் செழிக்கப் போகிறது என்று நம்புவோம்.
    மீனாளின் திரு ஆட்சி ,செங்கோலுடன் இனிதாக நடக்கும்.
    நேரிலேயே பார்ப்பது போல அழகான படங்கள்.
    கூடவே வந்த பாசுரங்கள்.

    மனம் மகிழக் கொடுத்த பதிவுக்கு மிக நன்றி துரை செல்வராஜு.

    பதிலளிநீக்கு
  7. அழகான காட்சிகள். இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..