குறளமுதம்
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.. (484)
கருதி இடத்தாற் செயின்.. (484)
***
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 08
எம்பெருமான் - ஸ்ரீ வரதராஜப் பெருமாள்
தாயார் - ஸ்ரீ பெருந்தேவி
உற்சவர் - தேவாதிராஜன்
உற்சவர் - தேவாதிராஜன்
நின்ற திருக்கோலம்
மேற்கே நோக்கிய திருமுக மண்டலம்.
இங்குள்ள திருக்குளத்துள்
அத்தி வரதர் மூழ்கிக் கிடக்கின்றார்..
நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறையே
திருமேனி மீட்டெடுக்கப்பட்டு ஒரு மண்டல காலத்திற்குத்
திவ்ய தரிசனம் நிகழும்..
-: மங்களாசாசனம் :-
திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார்,
பேயாழ்வார்.
மேற்கே நோக்கிய திருமுக மண்டலம்.
இங்குள்ள திருக்குளத்துள்
அத்தி வரதர் மூழ்கிக் கிடக்கின்றார்..
நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறையே
திருமேனி மீட்டெடுக்கப்பட்டு ஒரு மண்டல காலத்திற்குத்
திவ்ய தரிசனம் நிகழும்..
-: மங்களாசாசனம் :-
திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார்,
பேயாழ்வார்.
கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!..
ஓம் ஹரி ஓம்
***
சிவதரிசனம்
திருத்தலம் - திருக்கச்சி ஏகம்பம்
-: காஞ்சி :-
-: காஞ்சி :-
இறைவன் - ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ காமாக்ஷி
ஸ்ரீ காமாக்ஷி முப்பதிரண்டு
அறங்களையும் புரிந்த திருத்தலம்..
அம்பிகை தனது திருக்கரத்தால்
மணல் கொண்டு எழுப்பிய சிவலிங்கம்..
சிவபூஜை இயற்றும் போது கம்பையாற்றில்
நீர்ப்பெருக்கு ஏற்பட்டது..
அது கண்டு அஞ்சிய காமாக்ஷி -
சிவலிங்கத்தை ஆரத் தழுவிக் கொண்டனள்..
அதனால், ஈசன் - அம்பிகையின் திருமுலைத் தழும்பும்
திருவளைத் தழும்புக் கொண்டனன் என்பர் ஆன்றோர்..
தலவிருட்சம் - மாமரம்.
பஞ்ச பூதத்தலங்களுள் - மண்ணுக்குரிய தலம்..
திருஒற்றியூரில் பார்வையிழந்த சுந்தரர்
இங்கே - இடக்கண்ணில் பார்வை பெற்றனர்..
ஏலவார்குழலி - காமாட்சி அன்னை |
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,
சுந்தரர்..
* * *
ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிச் செய்த
திருப்பாட்டு
எள்கலின்றி இமையவர் கோனை
ஈசனை வழிபாடு செய்வாள் போல்
உள்ளத்து உள்கி உகந்து உமைநங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி
வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே!.. (7/61)
* * *
திருப்பாட்டு
எள்கலின்றி இமையவர் கோனை
ஈசனை வழிபாடு செய்வாள் போல்
உள்ளத்து உள்கி உகந்து உமைநங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி
வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே!.. (7/61)
* * *
திருப்பள்ளி எழுச்சி
எட்டாம் திருப்பாடல்
முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயோ!..
முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயோ!..
திருவெம்பாவை
15 - 16
15 - 16
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஒவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தான்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்!..
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொலிவாய் மழையேலோர் எம்பாவாய்!..
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஒவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தான்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்!..
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொலிவாய் மழையேலோர் எம்பாவாய்!..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
வணக்கம் ஜி மார்கழித் தென்றலின் எட்டாம் நாள் திருவெம்பாவையுடன் நன்று தொடர்கிறேன்
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் அன்பு வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
மார்கழித் திங்கள் அருமையா இருக்கு...
பதிலளிநீக்குமற்ற பதிவுகளையும் வாசிக்கிறேன் ஐயா...
அன்பின் குமார்..
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
பாவைப் பாடல்கள் இப்போ தான் ஒழுங்கா படிக்கிறேன்.
பதிலளிநீக்குஅருமை அருமை தொடர்கிறேன்.
அன்புடையீர்..
நீக்குதங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..