நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மார்ச் 25, 2024

பங்குனி உத்திரம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி உத்திரம்
பங்குனி 12 
திங்கட்கிழமை


தனதனன தாத்த ... தனதான
தனதனன தாத்த ... தனதான

வசனமிக வேற்றி ... மறவாதே
மனதுதுய ராற்றி ... லுழலாதே

இசைபயில்ஷ டாக்ஷ ... ரமதாலே
இகபரசெள பாக்ய ... மருள்வாயே..

பசுபதிசி வாக்ய ... முணர்வோனே
பழநிமலை வீற்ற ... ருளும்வேலா

அசுரர்கிளை வாட்டி ... மிகவாழ
அமரர்சிறை மீட்ட ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


அதிகமாக ஜபம் செய்து அதனால் 
உன்னை மறந்து விடாமல் இருக்கவும் 

துயர் தருகின்ற வழிகளில் எனது மனம் 
அலைந்து திரியாமல் இருக்கவும்

இசையுடன் பயில்கின்ற 
சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரத்தால் 
இம்மைக்கும் மறுமைக்கும் ஆகிய 
நல்வாழ்வைத் தந்தருள்வாயாக..

சிவபெருமானது 
வேத மந்திரங்களை உணர்ந்தவனே

பழனிமலையில் இருந்து
அருள் புரிகின்ற வேலவனே..

அசுர கூட்டங்களை ஒடுக்கி 
தேவர்களை  சிறையினின்று
மீட்டு அவர்களுக்கு 
நல்வாழ்வு அளித்த பெருமாளே...
***


தான தந்தன தானா தனாதன
தான தந்தன தானா தனாதன
தான தந்தன தானா தனாதன ... தனதான


நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸாமீ நமோநம ... வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம ... பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாத நமோநம
தீர சம்பிரம வீர நமோநம ... கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம ... அருள்தாராய்..

ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு ... மறவாத

ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடா ளுநாயக ... வயலூரா

ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ... லையிலேகி

ஆதி யந்தவு லாவா சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நானாடதில்
ஆவி நன்குடி வாழ்வா னதேவர்கள் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


ஸ்ரீ அருணகிரி நாதர்  
நமக்காக வழங்கிய மிக அற்புதமான 
அர்ச்சனைத் திருப்புகழ் இது.. 


இத் திருப்பாடலில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் ஸ்ரீ சேரமான் நாயனாரும் திருக்கயிலாய மாமலைக்கு ஏகிய வரலாறு சொல்லப்பட்டுள்ளது..

முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய
 சிவாய நம ஓம்
*** 

7 கருத்துகள்:

  1. அர்ச்சனை திருப்புகழ் படிக்கும் காலத்தில் தொடர்ந்து பாடுவோம் .
    இன்று பாடிக்கொண்டேன். பகிர்தலுக்கு நன்றி.

    முருகா சரணம்.

    சிவாய நம ஓம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு
  2. எங்கள் குலதெய்வம் கோயிலில் திருவிழா விமரிசையாக நடைபெற்றக் கொண்டு இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறப்புடன் திருவிழா நடக்கட்டும்..

      மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  3. திருப்புகழை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  4. பங்குனி உத்திரம் - நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..