செவ்வாய், டிசம்பர் 31, 2024

மார்கழி 16

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 16  
கிழமை

குறளமுதம்

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.. 69


அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள்
அருளிச்செய்த
திருப்பாவை

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.. 16
 நன்றி
நாலாயிர திவ்யப்ரபந்தம்

ஸ்ரீ மாணிக்கவாசகர்
அருளிச்செய்த
 திருவெம்பாவை

மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்.. 6

ஸ்ரீ ஞானசம்பந்தர்
அருளிச்செய்த
கோளிலி திருப்பதிகம்
ஃஃ
தாவியவ னுடனிருந்துங் 
  காணாத தற்பரனை
ஆவிதனி லஞ்சொடுக்கி 
  அங்கணனென் றாதரிக்கும்
நாவியல்சீர் நமிநந்தி 
  யடிகளுக்கு நல்குமவன்
கோவியலும் பூவெழுகோற் 
  கோளிலி எம்பெருமானே.. 6


ஸ்ரீ சுந்தரர்
அருளிச்செய்த
ஏகம்பத்திருப்பதிகம்

திங்கள் தங்கிய சடையுடை யானைத்
  தேவ தேவனைச் செழுங்கடல் வளரும்
சங்க வெண்குழைக் காதுடை யானைச்
  சாம வேதம் பெரிதுகப் பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு
  மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கை யாளனைக் கம்பன் எம்மானைக்
  காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.  6  
 நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்
ஃஃ
ஓம் ஹரி ஓம் 
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

  1. வணங்கிக் கொள்கிறேன். ஓம் நமோ நாராயணாய; ஓம் நமச்சிவாய.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வரவு..

      தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      ஓம் ஹரி ஓம்
      நலம் வாழ்க

      நீக்கு
  2. சிறப்பான பாசுரங்கள். பக்தியை வளர்க்கின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வரவு..

      தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி நெல்லை

      ஓம் ஹரி ஓம்
      நலம் வாழ்க

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின்
      வருகைக்கு
      மகிழ்ச்சி..
      நன்றி தனபாலன்

      ஓம் ஹரி ஓம்
      நலம் வாழ்க

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    மார்கழி பதிவு அருமை. குறளமுதம் பாடல் அருமை.
    ஸ்ரீஆண்டாள் நாச்சியார் அருளிய அருளமுதமும், தலை சிறந்த சிவனடியார்கள் மூவர் தந்த தேவார பாடல்களும் கண்டு பாடி பரவசித்தேன். அனைவரும் நலமாக இருக்க வேண்டி நாராயணனையும், சிவபெருமானையும் பக்தியுடன் தொழுது வணங்கி பிரார்த்தித்துக் கொண்டேன். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரியோர் வழி நின்று இறைவனை வணங்கிக் கொள்வோம்..

      அன்பின்
      வருகையும்
      கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      ஓம் ஹரி ஓம்
      நலம் வாழ்க

      நீக்கு
  5. மார்கழி வணக்கங்கள் அருமை.

    நமோ நாராயணாய.

    சிவாய நமக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின்
      வருகையும்
      கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி..

      ஓம் ஹரி ஓம்
      நலம் வாழ்க

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..