புதன், ஜனவரி 01, 2025

மார்கழி 17

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மார்கழி 17 
புதன் கிழமை
2025 ன் முதல் நாள்..

குறளமுதம்

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை.. 411


அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள்
அருளிச்செய்த
திருப்பாவை

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.. 17
 நன்றி
நாலாயிர திவ்யப்ரபந்தம்

ஸ்ரீ மாணிக்கவாசகர்
அருளிச்செய்த
 திருவெம்பாவை

அன்னே இவையுஞ் சிலவோ பலஅமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.. 7

ஸ்ரீ ஞானசம்பந்தர்
அருளிச்செய்த
கோளிலி திருப்பதிகம்

கன்னவிலு மால்வரையான் 
 கார்திகழு மாமிடற்றான்
சொன்னவிலும் மாமறையான் 
  தோத்திரஞ்செய் வாயினுளான்
மின்னவிலுஞ் செஞ்சடையான் 
  வெண்பொடியான் அங்கையினில்
கொன்னவிலும் சூலத்தான் 
  கோளிலி எம்பெருமானே.. 7

ஸ்ரீ சுந்தரர்
அருளிச்செய்த
ஏகம்பத்திருப்பதிகம்

விண்ண வர்தொழு தேத்தநின் றானை
  வேதந் தான்விரித் தோதவல் லானை
நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை
  நாளும் நாம்உகக் கின்றபி ரானை
எண்ணில் தொல் புகழாள் உமை நங்கை
  என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்றுடைக் கம்பன் எம்மானைக்
  காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.  7  
 நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்
ஃஃ
ஓம் ஹரி ஓம் 
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்

***

12 கருத்துகள்:

  1. பாசுரங்களைப் படித்துப் பணிகிறேன்.

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      ஓம் ஹரி ஓம்
      நலம் வாழ்க

      நீக்கு
  2. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2025

    பதிலளிநீக்கு
  3. ஓம் நம சிவாய...

    இனிய 2025 புத்தாண்டு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி
      நன்றி தனபாலன்

      ஓம் சிவாய நம ஓம்
      நலம் வாழ்க..

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனதன்பான இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இறைவன் அனைவருக்கும் நலலருளை தர வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    இன்றைய பதிவு அருமை. குறளமுதமும், ஆண்டாள் நாச்சியாரின் பாசுர பாடலும், மற்ற பாசுர பாடல்களும் பாடி மகிழ்ந்தேன். படங்களும் அருமை.
    ஓம் நமசிவாய.
    ஓம் நாராயணாய நமஃ. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      வாழ்த்துரையும்
      மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      ஓம் ஹரி ஓம்
      நலம் வாழ்க

      நீக்கு
  5. வணக்கம், தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
    பாடல்களை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின்
      வருகையும் கருத்தும்
      வாழ்த்துரையும்
      மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      ஓம் ஹரி ஓம்
      நலம் வாழ்க

      நீக்கு
  6. விநாயகாய நமக.
    ஆங்கிலப் புத்தாண்டு விநாயக வணக்கத்துடன் ஆரம்பம் அவனருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுவோம்.

    ஆண்டாள் சரணம்.
    ஹரிஓம்.
    சிவாயநமக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தாண்டு வாழ்த்துகள்

      அன்பின்
      வருகையும்
      கருத்தும்
      வாழ்த்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி

      ஓம் ஹரி ஓம்
      நலம் வாழ்க

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..