திங்கள், டிசம்பர் 30, 2024

மார்கழி 15

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
மார்கழி 15 
திங்கட்கிழமை
இன்று
ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி

குறளமுதம்

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது. 68


அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள்
அருளிச்செய்த
திருப்பாவை

எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.. 15
 நன்றி
நாலாயிர திவ்யப்ரபந்தம்

ஸ்ரீ மாணிக்கவாசகர்
அருளிச்செய்த
 திருவெம்பாவை

மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.. 5 
**
ஸ்ரீ ஞானசம்பந்தர்
அருளிச்செய்த
கோளிலி திருப்பதிகம்
 
வஞ்சமனத் தஞ்சொடுக்கி 
  வைகலும்நற் பூசனையால்
நஞ்சமுது செய்தருளும் 
  நம்பியென வேநினையும்
பஞ்சவரிற் பார்த்தனுக்குப் 
  பாசுபதம் ஈந்துகந்தான்
கொஞ்சுகிளி மஞ்சணவுங் 
  கோளிலி எம்பெருமானே.  5


ஸ்ரீ சுந்தரர்
அருளிச்செய்த
ஏகம்பத்திருப்பதிகம்

வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை
       வேலை நஞ்சுண்ட வித்தகன் றன்னை
அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை
        அரும றையவை அங்கம்வல் லானை
எல்லையில் புகழாள் உமை நங்கை
       என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை எங்கள் பிரானைக்
       காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.  5  
 நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்
**



புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதாம்
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்

ஓம் ஹரி ஓம் 

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

  1. பதிகம், பாசுரம் பாடி வணங்கிக் கொள்கிறேன். நன்றி.

    __/\__

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      ஓம் ஹரி ஓம்
      நலம் வாழ்க

      நீக்கு
  2. ஸ்ரீஹனுமத் ஜயந்தி வாழ்த்துகள்.
    ஜெய் ஆஞ்சநேயா நமக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி
      நன்றி மாதேவி

      ஓம் ஹரி ஓம்
      நலம் வாழ்க

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவு அருமை. குறளமுதம் நன்றாக உள்ளது. கோதை நாச்சியார் அருளிய பாசுரங்களைப் பாடி இறைவனை வணங்கி கொண்டேன். அனுமன் நமக்கு துணையாக என்றும் வர வேண்டுமென மனதாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நான்கு நாட்களுக்கு மேலாக வெளியூர் பயணத்தால், வலைத்தளம் வரவில்லை. மன்னிக்கவும். விபரம் எபியில் இன்று தந்துள்ளேன். ஆனால், யாரும் கண்டுக்கவில்லை என்பது சற்று வருத்தந்தான். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள்
      கோயில் தரிசனம் நிறைவேற்றி இல்லம் திரும்பியதற்கு மகிழ்ச்சி...

      எல்லாருக்கும் நன்மைகள் விளையட்டும்...

      தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி.. நன்றி

      ஓம் ஹரி ஓம்
      நலம் வாழ்க

      நீக்கு
  4. பதில்கள்
    1. ஓம் நம சிவாய
      சிவாய நம ஓம்

      மகிழ்ச்சி..
      நன்றி தனபாலன்

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..