திங்கள், ஆகஸ்ட் 03, 2026

ஆடிப்பெருக்கு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி 18
 திங்கட்கிழமை
மங்கல நாள்


அனைவருக்கும்
ஆடிப் பெருக்கு நல்வாழ்த்துகள்..
 

கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பேராளர் மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழில் நுழைந்து கூர்வாயால் இறகு உலர்த்திக் கூதல் நீங்கிச்
செங்கானல் வெண்குருகு பைங்கானல் இரைதேரும் திருவையாறே.. 1/130/3

சிவந்த கால்களையுடைய வெண்ணிறக் குருகுகள் தேன் நிறைந்த சோலைகளுக்குள் நுழைந்து கூரிய அலகுகளால் தமது இறகுகளைக் கோதி - குளிர் நீங்கப் பெற்று பசுமையான சோலைகளில் தமக்கு வேண்டும் இரைதனைத் தேடும் இடம் திரு ஐயாறு - என்கின்றார் ஞானசம்பந்தப் பெருமான்..

திரு ஐயாற்றின் இத்தகைய வளத்திற்குக் காரணம் காவிரி..

அணைகள் திறக்கப்படாததால் 
தஞ்சை வள நாட்டின் ஜீவநாடியான காவிரியில் தண்ணீர் இல்லை..

தஞ்சையில் இருந்து திரு ஐயாறு வரைக்கும் உள்ள ஐந்து ஆறுகளும் வானம் பார்த்திருக்கின்றன.  
வெண்ணாற்றுப் படுகையில் மட்டும் ஏதோ கொஞ்சம்  தண்ணீர்... அதுவும் இன்னும் சில  நாட்களில் வற்றிப் போகும்...

பழி பாவங்கள் மிஞ்சிப் போனதால் காவிரி வறண்டு கிடக்கின்றாள்.. 

ஆற்று நீர் பாசனம் தொடங்கப்படவே இல்லை.. 

அடுத்த சாகுபடிக்கு முன்னதாக காவிரியாள் தந்த வயல்வெளிகளை வீட்டு மனைகளாக்கி விடவேண்டும் - என, முனைந்திருக்கின்றனர்.

ஆடிப்பெருக்கும் அதனை ஒட்டிய விழாக்களும்  விடை இன்றி தவிக்கின்றன...

ஒன்றும் சொல்வதற்கில்லை...



கூடிய விரைவில் 
காவிரியாள் தடைகளைக் கடந்து 
பொங்கி வருவாளாக..
புது வெள்ளமெனப் பெருகி வருவாளாக..

காவிரிப் பெண்ணே வாழ்க  - உன்
காலடி மலர்களும் வாழ்க வாழ்க..
***

10 கருத்துகள்:

  1. நேற்று ஏதோ காவிரியில் தண்ணீர் திறந்து விட்டிருக்கிறார்கள் என்று சொன்னார்கள். தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக எங்கள் குடும்ப குழுமத்தில் சொல்லி இருந்தார்கள்.

    எவ்வளவு திறந்தார்களோ... எவ்வளவு தூரம் வருமோ...!

    பதிலளிநீக்கு
  2. ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி காலங்கள் எல்லாம் மலையேறி விட்டன போலும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காவேரி ஓடி வந்த காலங்களை எல்லாம் மலையேற்றி விட்டனர்..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. ஆடிபெருக்கு வாழ்த்துகள்.
    ஆடிபெருக்கு கொண்டாடிய காலங்களை நினைத்து கொள்கிறேன்.
    காவிரி அன்னையே போற்றி
    வளம் சேர்க்க வருவாய்

    பதிலளிநீக்கு
  4. தண்ணீர் திறந்திருக்கிறார்களே... நேற்று காவேரியில் கொஞ்சமே தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. பரந்து விரிந்த மணல்வெளியை மறைக்கும் அளவு தண்ணீர் வரலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆடிப் பெருக்கு அன்று காவிரியில் தண்ணீர் இல்லை...

      தங்களது அன்பினுக்கு நன்றி

      நீக்கு
  5. காவேரித் தாயை வணங்குகிறோம்.

    படங்களில்தான் காவேரிப் பெருக்கை பார்க்கும் காலம் வந்து விட்டது. :(

    பழைய அழகிய தருணங்கள் மீண்டும் வருமா. ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// படங்களில் மட்டுமே காவேரிப் பெருக்கை பார்க்கும் காலம் வந்து விட்டது..///

      உண்மை தான்..
      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..