நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆடி 21
வியாழக்கிழமை
குருஷேத்ர களத்தில் பாரதப் போர் தொடங்குவதற்கு முன்னதாக ஆறு சங்குகள் ஒலித்தன..
அந்த ஆறு சங்குகளின் பெயர்கள்..
1. பாஞ்சஜன்யம் :
பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடையது
வெண்ணிறத்தில் மின்னல் ஒளியுடன் இடி போல ஒலிக்கும்... இந்த சங்கின் சத்தம் கேட்டாலே அதர்மம் நடுங்கும்..
2. அனந்தவிஜயம் : தருமருடையது
வெளிர் நீல நிறத்தில் அமைதியாக ஒலிக்கும் இது, முடிவில்லாத வெற்றியைக் குறிக்கும்.
3. பௌண்ட்ரம் :
பீமனுடையது
பார்க்கவே பயங்கரமாக நெருப்பைப் போல ஜொலிக்கின்ற பிரமாண்டமான சங்கு இது. பீமனின் பலத்தை போலவே இதன் சத்தமும் அதிர வைக்கும்.
4. தேவதத்தம் : அர்ஜுனனுடையது
தங்க நிறத்தில் ஜொலிக்கும் இது, வெற்றியின் அடையாளம். இதன் ஒலி எதிரிகளுக்கு பயத்தை கொடுக்கும்.
5. சுகோஷம் : நகுலனுடையது
இனிய இசை போல ஒலிக்கின்ற வெள்ளிச் சங்கு. இதன் சத்தம் நல்ல செய்தியைக் கொண்டு வரும்.
6. மணி புஷ்பகம் : சகாதேவனுடையது
நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்தச் சங்கின் ஒலி, ஞானத்தையும் செல்வத்தையும் குறிக்கும்.
நன்றி
மகாபாரதம் Fb
ஓம் ஹரி ஓம்
***

இதை இப்போதுதான் அறிகிறேன். இதுபோல ஒரு 'ஆறு மனமே ஆறு 'விஷயம் நானும் எடுத்து வைத்திருக்கிறேன் - எந்த நாளில் ஷேர் செய்யலாம் என்று யோசித்தபடி...
பதிலளிநீக்குபதினாறு வயதில் வியாசர் விருந்து என மகாபாரதக் கதையைப் படித்திருக்கின்றேன்...
நீக்குஎல்லாம் அவன் செயல்...
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்,
நானும் இப்பொழுதுதான் அறிகிறேன்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு மிக்க நன்றி..
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. ஆறு சங்குகளின் படமும், அதன் விளக்கமும் அருமை. பகவான் கிருஷ்ணரின் கையில் தவழ்ந்திருக்கும் சங்கின் பெயரைத் தவிர பஞ்ச பாண்டவர்கள் போரில் உபயோகப்படுத்தும் சங்குகளின் பெயரை அறியேன். இப்போது அறிந்து கொண்டேன். விபரமாக சொல்லியுள்ளமைக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா..
போர்களத்தில் ஆறு சங்குகள் ஒலி பற்றியும் அதன் பேர்களையும் சொன்னது சிறப்பு.
பதிலளிநீக்குபடம் நன்றாக இருக்கிறது.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா..