வெள்ளி, ஜூலை 31, 2026

தமிழமுது


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி
மூன்றாம் வெள்ளி


இன்று
அப்பர் ஸ்வாமிகள்
அருளிச்செய்த தேவாரம்

தலம்
திரு ஐயாறு


இரப்பவர்க்கு ஈய வைத்தார் 
  ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாம்
  கடு நரகங்கள் வைத்தார்
பரப்புநீர்க் கங்கை தன்னைப் 
  படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும் வைத்தார்  
ஐயன் ஐயாறனாரே.. 4/38/10

இரந்து நிற்போருக்கு வழங்கும்படியாக
செல்வங்களைத் தந்தவர்..
அப்படி வாரி வழங்குகின்ற மக்களுக்கு நல்லருளும்  புரிந்தவர்..

அஃதன்றி நிறைய பொருளை வைத்துக் கொண்டு ஒளித்து வாழ்பவர்களுக்குக் கொடிய நரகங்களையும் வைத்தவர்.. 

எங்கும் பரவி விளங்குகின்ற  கங்கையைப் படர் சடையின் பாகமாக வைத்ததோடு அரக்கனாகிய இராவணனுக்கும் அருள் புரிந்தவராய் விளங்குகின்றார்  ஐயனாகிய ஐயாற்று நாதன்..
*
ஓம் நம சிவாய
***

8 கருத்துகள்:

  1. கேட்டவருக்கு கொடுக்க வைத்தாய் 
    கொடுத்ததற்கு அருள் கொடையும் தந்தாய் 
    பொருளிருந்தும் கொடுக்க மறுத்தோருக்கு 
    அருள்தர மறுத்தாய் அறநெறி புகட்டினாய் 
    வேகம் காட்டிப் பாய்ந்த கங்கையை 
    தலையில் வைத்து - மக்கள் 
    தாகம் தீர்த்தாய் 
    ராவணனுக்கு, வரம் தந்த நீ 
    அவனைக் கொன்ற 
    ராமனுக்கும் பாபவிமோசனம் 
    தந்தாய் ஐயாறு ஆளும் 
    என் அம்மையப்பனே....

    பதிலளிநீக்கு
  2. பாடல்பாடி வணங்கினோம்.

    ஐயாறப்பர் தாழ் சரணம்.

    ஓம் நமசிவாய.

    பதிலளிநீக்கு
  3. அருமையான படங்கள். பாடலை பாடி ஐயாற்று இறைவனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..