ஞாயிறு, அக்டோபர் 27, 2024

உணவு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 10
 ஞாயிற்றுக்கிழமை

கண்டதும் கேட்டதும்
இப்பதிவில்..


வழிச்செல்வோர் தங்கி இளைப்பாறுதற்கு இடமும், உண்டு பசியாறுதற்கு அறுசுவை உணவும் எவ்வித பிரதிபலனும்  எதிர்பாராது நமது மக்கள் வழங்கி இருக்கின்றனர்..

இப்படியான இடங்களே அன்ன சத்திரங்கள் எனப்பட்டன.. 

தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் வரை இப்படியான சத்திரங்களைக் கட்டி பெருமளவில் நிதி வழங்கி தர்ம பரிபாலனம்  செய்திருக்கின்றனர் மராட்டிய மன்னர்கள்..

 நன்றி இந்துதமிழ்
தஞ்சை  - பட்டுக்கோட்டை வழித்தடத்தில் சத்திரம் என்ற் பெயருடன் பல ஊர்கள் இன்றும் இருக்கிறன..

இதெல்லாம் அந்தக் காலத்தில்...

இப்படிப்பட்ட தர்மம்  பூமியில் இன்றைக்கு உணவு வர்த்தகப் பொருள் ஆகி விட்டது..

ஆக்கப்பட்டு விட்டது..

விளக்கு வைத்த நேரத்தில் சாப்பிடக் கூடாது என்பது நமது சம்பிரதாயம்..

ஆனால்,நாகரீக மனிதர்கள் அரை இருட்டில் சிற்றுண்டி அருந்தி மகிழ்கின்றனர்..

இதில் - நட்ட நடு ராத்திரியிலும் விருந்து கேளிக்கை.

விழித்திருக்கின்ற நேரம் எல்லாம்  எதையாவது தின்று கொண்டே இருக்க வேண்டும் என்று மக்களும் நினைக்கின்றனர் ..

ஒட்டுமொத்த தமிழகத்தின் இயல்பும் இப்படி மாறிக் கொண்டு இருப்பதாகத் தோன்றுகின்றது...‌

அல்லது 
ஒட்டுமொத்த தமிழகத்தின் இயல்பையும் இப்படி மாற்றிக் கொண்டு இருப்பதாகத் தோன்றுகின்றது...‌


ஆனால்
சாப்பிடும் உணவுகளில் எதுவுமே வழக்கமான ஆரோக்கியமான உணவு  கிடையாது. 




இட்லி, தோசை, பொங்கல், உப்புமா என்பன எல்லாம் ஏளனத்துக்கு உரியதாகி விட்டன..




பல உணவகங்களில் இவற்றை முறையாகத் தயாரிப்பதும் இல்லை.

ரொட்டி, பரோட்டா - (எல்லாமே மைதா மாவு) மற்றும் இறைச்சி - இவை  மட்டுமே இரவு உணவு என்று மக்களுக்குப் பரிமாறப்படுகிறது. 
மக்களும் விருப்பத்துடன் சாப்பிடுகின்றனர்..

மதிய வேளையில் கூட சாம்பார் சோற்றை விடப் பிரியாணி , பரோட்டா ஆகியவற்றுக்கு ஆலாய்ப் பறக்கின்றனர் மக்கள்.. 

இதனால் 
இங்கே  சாக்கடைகளின் ஓரத்தில் கூட அவசர பிரியாணிக் கடைகள் அதிகமாகி விட்டன..

Corn Flakes  போன்ற லொட்டு லொசுக்குகள் வந்து விட்டாலும் தற்போதைக்கு காலை உணவு மட்டுமே பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தோன்றுகின்றது..

விரைவில் இதனையும் உணவு வணிகத்தினர் மாற்றி விடுவர்..




குதிரையும் இன்ன பிற வர்க்கமும்  தின்று தீர்த்துக் கொண்டிருந்த Oates,
மலச்சிக்கலை ஏற்படுத்துகின்ற Bun, Bread,
Burger, Sandwich ..
என்னவென்றே புரியாத Noodles, Pasta - போன்ற உணவு வகைகளால் உண்பவர் வயிறு நிறைகின்றது... அத்துடன் ஆரோக்கியம் குறைகின்றது..

தொ. கா. நிகழ்ச்சிகளின் ஊடாகத் தொடர் விளம்பரங்கள் அதனைத் தான் செய்து  கொண்டிருக்கின்றன..

கிடைத்த  உணவை மட்டும் சாப்பிட்டு விட்டு நிறைந்த ஆரோக்கியத்துட.ன் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த நடுத்தர குடும்பங்கள் 
கூட இன்றைக்கு  இரண்டு  மூன்று வகை உணவுகளை ஒன்றாகச் சேர்த்து சாப்பிட ஆரம்பித்து விட்டனர். 

இந்த மாற்றத்திற்கான காரணம் அதீதமான பணப்புழக்கமா.. உணவின் மீதான பெருவிருப்பமா..
தெரியவில்லை. 

ஆனால், இவையெல்லாம் கடந்த சில வருடங்களில் நடந்தேறியிருக்கிறது என்பது மட்டும் தெளிவு.. . 

இந்த விஷயத்தில்
ஏனைய ஊடகங்களின்  - ரைஸ் செய்வது எப்படி?.. - என்பது மாதிரியான உணவுப் பதிவுகளும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அனைத்து அரேபிய  உணவுகளும் தமிழகத்தில் விற்பனை ஆகின்றன..

அதில் குறிப்பிடத்தக்க ஒன்று தான் ஷவர்மா..

ஷவர்மா கடைகள் எல்லா ஊரிலும் தென்படுகின்றன..

இன்னொன்று பேக்கரி..


நகரின் புறவழிச் சாலை எங்கிலும்  
Bakery & Snacks.. 

அங்கு விற்கப்படும் பொருட்கள் அங்கேயே செய்யப்பட்டதற்கான உத்தரவாதம் இல்லை, 

எங்கிருந்தோ வருகின்றன... எப்படியோ விற்றுத் தீர்கின்றன.. 

உணவின் தரம்  அவ்வப்பொழுது  மாறுபட்டு வாந்தி பேதி ஏற்பட்டாலும் யாரும் அதைப் பொருட்படுத்தவது இல்லை..


இதே போல இனிப்பு வகை விற்கப்படும் கடைகளின் எண்ணிக்கையும்  பெருகிவிட்டது..


வீடுகளில் முறுக் முறுக் என்றிருந்த முறுக்கு - இன்றைக்கு மாறி விட்டது.. 

சில முறுக்குகளைத் தின்றதும் நாக்கிலும் உதடுகளிலும் நம நம என்று ஏதோ ஒரு உணர்வு..

முறுக்கு - வணிகச் சந்தைக்கு வந்த பிறகு - பல மாதங்களுக்கு நறுக் முறுக் என்று  இருக்க வேண்டும் என்பதற்காக அத்துடன் ரசாயனங்கள் சேர்க்கப்படுவதாக பேசிக் கொள்கின்றனர்..


மேலும்
இப்படியான தயாரிப்புகளில்
தரமான நெய் அல்லது வனஸ்பதி  சமைப்பதற்கான நல்ல எண்ணெய் ஆகியவை சந்தேகத்திற்கிடம் என்றால்!?.. 


சந்தையில் வண்ணமயமான
 உணவுகள்.. அவற்றின் பல நிலைகளிலும் 
ரசாயனக் கலப்பு மிகுந்து விட்டதாக மருத்துவர்கள் 
சொல்கின்றனர்..

மாநிலத்தில்  மருத்துவ மனைகளும் நோயாளிகளும்
பெருகி இருக்கிறனர்..

சமீப காலங்களில் ஷவர்மா எனும் அரேபிய உணவு சரியில்லாததாக இருக்கின்றது..

அரேபிய நாட்டிற்கு அந்த உணவு சரி தான்.. அங்கே தரக் கட்டுப்பாடுகள் மிக அதிகம்..

இங்கே அதைத் தயாரிக்கின்ற முறையில் தான் குறைபாடு..

இதைத் தின்று விட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப் படுவது குறிப்பிடத் தக்கது..

தமிழ் மரபின் பாரம்பரிய சிறு தீனிகளை வீட்டில் செய்வது குறைந்து விட்டது.. 

கடைகளில் வாங்கித் தின்பது என்பதே வழக்கமாகி விட்டது..

தரமான சிறு தீனிகளைத் தயாரித்து விற்பனை செய்த குடும்பங்கள்  நசிந்தே விட்டன... 


அந்நிய உணவு வகைகளாலும்
 மரபை மீறிய தின் பண்டங்களினாலும்
 நமது பாரம்பரிய உணவுகளும் நமது ஆரோக்கியமும் அழிந்து கொண்டு இருக்கின்றன..

மருத்துவ மனைகளுக்கு அருகிலேயே அதீத சுவையுடைய இனிப்புப் பண்டங்கள்  ரசாயனக் கலப்புடைய நொறுக்குத் தீனிகள் மற்றும்  Bakery & Snacks.. விற்கின்ற கடைகள் இயங்குகின்றன என்றால் யாரை நொந்து கொள்வது??..

இந்த உளைச்சலுக்கு நாமே காரணம்..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்

முருகா முருகா
முருகா முருகா
***

15 கருத்துகள்:

  1. அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல் எனும் பாரதி வரி நினைவுக்கு வருகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாரும் படிக்கப் போய் ஆணும் பெண்ணும் அநியாயம் செய்வது அதிகமாகி விட்டது..

      நீக்கு
  2. காலங்காலையில் இவ்வளவு படங்கள் போட்டு பசியைத் தூண்டி விடுவது நியாயமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நியாயமில்லை தான்...

      ஆனாலும் சந்தோஷமாக இருக்கின்றது..

      நீக்கு
  3. நூடுல்ஸ் செய்யம் இடம் காணொளி ஒன்று நேற்று வாட்ஸாப்பில் பார்த்தேன்.   உவ்வே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல உணவுத் தயாரிப்புத் தளங்களும் செய்முறைகளும் காணச் சகியாது. பெட்டிக்கடையில் விற்கும் அனைத்துமே எப்படிச் செய்கிறார்கள் என்ன என்ன போடுகிறார்கள் என்று ஆராய்ந்தால் வெளியில் உணவு சாப்பிடவே தோணாது.

      நீக்கு
  4. இனி இந்நிலை பழைய நிலைக்கு போக வாய்ப்பில்லை என்றே கொள்ளவேண்டும்.    நீங்கள் சொல்லியிருப்பது போல இப்போது காலம் போகப்போக ஏகப்பட்ட உணவுக்கடைகள் தெருவெங்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்நிலை பழைய நிலைக்குத் திரும்புவதற்கு வாய்ப்பே இல்லை

      உணவு வியாபாரிகள்
      திரும்புவதற்கும் விட் மாட்டார்கள்

      தாங்கள் வருகையும் கருத்துகளும்
      மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  5. உணவு பற்றிய நல்ல விழிப்புணர்வு பகிர்வு

    .காலத்தின் கோலத்தில் இளம் சமுதாயம் உணவுப்பழக்கத்தில் சீரழிகிறது என்பது உண்மை.

    முப்பது வயதிலேயே வந்துவிடுகிறது இதய ஆப்பரேசன், நீரிழிவு,இரத்த அழுத்தம் எல்லாமும். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் கதைதான் எங்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் வருகையும் கருத்துகளும்
      மகிழ்ச்சி.. நன்றி மாதேவி..

      நீக்கு
  6. இன்றிலிருந்து இனிப்பு சாப்பிடக்கூடாது என்று நினைப்பவன் ஒவ்வொரு இனிப்புக்கடையா அண்ணாந்து பார்த்துக்கொண்டிருப்பது மாதிரி உணவுக் கட்டுப்பாடு என்ற பதிவுக்கு விதவிதமான உணவுப் படங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நியாயமில்லை தான்...

      ஆனாலும் மகிழ்ச்சியாக இருக்கின்றது..

      நீக்கு
  7. சிந்தனை சிறப்பு. இங்கே இவை காலூன்றி விட்டன. இவற்றை மாற்றுவது கடினம் தான். வடக்கில் மோமோஸ் அப்படி கொட்டிக்கிடக்கிறது - எங்கே பார்த்தாலும் இதன் விற்பனை. சற்று தொலைவிலிருந்து வரும் அந்த வாசத்தின் வீச்சம், எப்படித்தான் சாப்பிடுகிறார்களோ என்று தோன்ற வைக்கிறது. ஆனாலும் அப்படி ஒரு கூட்டம் இந்தக் கடைகளில்!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..