திங்கள், ஆகஸ்ட் 19, 2024

கோடி புண்ணிய்ம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 3
திங்கட்கிழமை

இன்று
ஆவணி அவிட்டம்


திருக்கோடிகா ஸ்ரீ கோடீஸ்வரர் கொட்டையூர் ஸ்ரீ கோடீஸ்வரர் என, 
முந்தைய பதிவுகளில் சிந்தித்திருந்த வேளையில் எதிர்பாராத வகையில்
Fb ல் குறுங் காணொளியாகக் கிடைத்த தகவல் இன்றைய பதிவில்..

1987 ல் திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பெருநூல் ஒன்றில் இருந்து தேவாரத் திருத்தலங்களின் தல வரலாற்றினையும் திருப்பதிகப் பாடல்களையும் சுருக்கமாக தொகுத்து வைத்திருக்கின்றேன்.. 

அந்த வகையில் திருக்கோயில்களைப் பற்றி ஓரளவுக்கு  தெரியும்...  

இந்நிலையில் தேவஸ்தான குறிப்புகள் சிலவற்றையும் 

விக்கி முதலான தகவல் தொகுப்புகளையும் ஒப்பிட்டு  உணர்ந்து தான் பதிவுகளில் தந்து கொண்டு இருக்கின்றேன்.. 

திருக்கோடிகா,  கொட்டையூர் தலப் பெருமையும் இப்படித்தான் பதிவு செய்யப்பட்டது.. 

கொட்டையூர் வழியாக பல முறை சென்றிருந்தும் கொட்டையூர் திருக்கோயிலுக்குச் செல்கின்ற வாய்ப்பு அமைந்ததில்லை.. 

ஆரோக்கியம் குறைந்திருக்கின்ற இவ்வேளையில் ஆலயத்திற்கு " வருக " என்கின்றான் இறைவன்..

எதிர்வரும் நாட்களில் கொட்டையூர் தலத்தை தரிசனம் செய்தபின் மேல் விவரங்களை அறிந்து பதிவில் தரலாம் என்றிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக இப்படி ஒரு காணொளி - விவரக் குறிப்புகளுடன் கிடைத்திருக்கின்றது..

கொண்டல் தவழ் கொடிமாடக் கொட்டை யூரிற்
கோடீச்சரம் 

- என்கின்றார் அப்பர் பெருமான்..

நீர் கொண்ட மேகத்திற்கும் கிழக்கிருந்து வீசுகின்ற காற்றிற்கும் கொண்டல் என்று பெயர்..

நாற்றிசைகளில் இருந்தும் பரவுகின்ற காற்றில் மேலை தவிர்த்த ஏனைய மூன்றும் ஈரத் தன்மையுடன் மனதுக்கு இனியவை..

இத்தகைய குளிர் காற்று தவழ்கின்ற கொட்டையூரில் திகழ்கின்ற ஆலயத்தை கோடீச்சரம் என்கின்றார் ஸ்வாமிகள்..

அவ்வண்ணமே நாமும் வணங்கி நலம் பெறுவோம்..

நெஞ்சார்ந்த நன்றியுடன்


சண்டனைநல் அண்டர் தொழச் 
செய்தான் கண்டாய்
சதாசிவன் கண்டாய் சங்கரன் 
தான் கண்டாய்
தொண்டர் பலர் தொழுதேத்துங் 
கழலான் கண்டாய்
சுடரொளியாய்த் தொடர்வரிதாய் 
நின்றான் கண்டாய்
மண்டு புனல் பொன்னி வலஞ்
சுழியான் கண்டாய்
மாமுனிவர் தம்முடைய 
மருந்து கண்டாய்
கொண்டல் தவழ் கொடி மாடக் 
கொட்டையூரிற்
கோடீச் சரத்துறையும் 
கோமான் தானே.. 6/73/6
-: திருநாவுக்கரசர் :-

இறைவன் என்றும்
நம்முடன்..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

11 கருத்துகள்:

  1. கொட்டையூர் பெருமான் தரிசனத்திற்கு அழைத்திருப்பது மகிழ்ச்சி.  வணங்கிக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாமும் இறையருளுக்குப் பாத்திரம் ஆகின்றோம்...

      அன்பின் கருத்திற்கு
      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. திருநாவுக்கரசர் எவ்வளவு அருமையாகப் பாடியுள்ளார். தலம் மிக நன்று. தரிசனம் வாய்க்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நெல்லை அவர்களுக்கு நன்றி..

      நீக்கு
  3. தரிசிக்க இறைவனின் அருள் கிட்டட்டும்.

    பதிலளிநீக்கு
  4. கொடடையூர் தரிசனம் அரிய வாய்ப்பு.

    நாமும் பதிகம் பாடி வணங்கினோம். அவனருள் அனைவரையும் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு
  5. அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      நீக்கு
  6. கொட்டையூர் தல வரலாறு அருமை.
    படங்கள் அருமை.பதிகத்தை பாடி வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..