செவ்வாய், ஆகஸ்ட் 20, 2024

ஸ்ரீ கோடி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 4
செவ்வாய்க்கிழமை

தஞ்சை மாநகரின் காவல் தெய்வம் ஸ்ரீகோடியம்மன்..

அருகிலேயே ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர்  மற்றும் ஸ்ரீ வீர நரசிங்கப் பெருமாள் கோயில்கள்..

தஞ்சை மாவட்டத்தில்  கும்பகோணம், பாபநாசம், மயிலாடுதுறை, சீர்காழி வட்டாரங்களில் காளியாட்டம் நடைபெற்றாலும்
பச்சை பவளம் என, இரண்டு வடிவாக தஞ்சை மாநகரில்
விளையாடி வருபவள் இவள் தான்...

இன்றைய பதிவிலுள்ள பாடல் 
சில வருடங்களுக்கு முன்பு  எழுதப்பட்டதாகும்..

மீண்டும் பதிவில்!..

அன்னை 
என்றென்றும் அருகில் இருக்கின்றாள்..


காளி வந்தாள் எங்கள் காளி வந்தாள் - கொடு
வினை பொடியா கிடக் காளி வந்தாள்.. 1

நீலி வந்தாள் திரிசூலி வந்தாள் - நெஞ்சம்
ஆனந்தம் பாடிடத் தேடி வந்தாள்.. 2

நீதி நெறி நிலை நாட்ட வந்தாள் - நோய்
நொடி பகை பசி ஓட்ட வந்தாள்.. 3


ஏழை முகந்தனைக் காண வந்தாள் - அவள்
எளியவர் நலந் தனைப் பேண வந்தாள்.. 4

பவள நிறம் எங்கும் திகழ வந்தாள் - அவள்
பாசமும் நேசமும் தவழ வந்தாள்.. 5


பசுமை வளம் எங்கும் விளங்க வந்தாள் - அவள்
பங்கயக் கண்விழி மலர்ந்து வந்தாள்..6

மலரினும் மெல்லிய மங்கையர் வணங்கிட - மலர்
முகங் காட்டி மகிழ்ந்து வந்தாள்.. 7

மங்கலம் என்னும் மரபினைக் காக்கும் - காளையர்
தோள்களில் திகழ்ந்து வந்தாள்.. 8


அடியவர் இல்லத்தில் அமுது கொள்ள - அவள்
அடியவர் சூழ நடந்து வந்தாள்.. 9

அடியவர் தமக்கு அமுதளிக்க - அவள்
ஆலயந் தனையே கடந்து வந்தாள்..10


சூழ்ந்திடும் தொல்வினை தனையழிக்கும் - அவள்
சூட்சுமம் தன்னை யாரறிவார்..11

அவளன்றி கதியில்லை என்றி ருக்கும் - அவள் 
அடியவர் தானே நலம் அறிவார்..12

அடியவர் தானே 
நலம் அறிவார்..

ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. ​வணங்கிக் கொள்கிறேன். எழுதப்பட்ட பாடலை ரசித்தேன். அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அன்னை காளிகாதேவி படங்களை கண்டு பணிவுடன் வணங்கி, அனைவரின் நலத்திற்காகவும், பிரார்த்தித்துக் கொண்டேன்.

    தாங்கள் இயற்றிய பாடல் அருமை. பக்தியுடன் பாடி அன்னையை வணங்கிக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நெல்லை அவர்களுக்கு நன்றி..

      நீக்கு
  4. பாடல் நன்று. காளி அனைவருக்கும் மன அமைதியையும் சுகத்தினையும் அருள எனது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் பிரார்த்தனையும்
      மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      நீக்கு
  5. "காளிவந்தாள்"....நல்லபாடல் .காளி
    அன்னையின் அலங்காரப் படங்கள் அழகாக இருக்கின்றன.

    அனைவரையும் அன்னை அருள் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவரையும் அன்னை அருள் காக்கட்டும்.

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு
  6. நீங்கள் இயற்றிய பாடலை படித்து காளியை வணங்கி கொண்டேன்.
    எல்லோருக்கும் நலம் அளிக்க வேண்டும் காளி அன்னை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..