ஞாயிறு, ஆகஸ்ட் 18, 2024

உப்பு

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 2
ஞாயிற்றுக்கிழமை


உப்பு இயற்கையின் கொடை.. 

உப்பிட்டவரை உள்ளளவும் நினை.. என்று உயிரோடு இணைத்தது தமிழ்..

ஆனால், இன்றைக்கு உப்பு இரசாயனம்.. 

அளவான உப்பு உடலுக்கு ஆரோக்கியம்..  
உப்பு சுப மங்கலங்களுள் ஒன்று.. மகாலக்ஷ்மி என்பர் சான்றோர்..

உப்பு விளைகின்ற தளம் உப்பளம்..

தேவாரத்தில் - கழி என்றும் களர் என்றும் உப்பளங்கள் குறிக்கப்பட்டு உள்ளன..

பொதுவாக உப்பு 99.99% சோடியம் குளோரைடு..

உப்பு உணவில் பயன்படுத்தப்படுகின்ற கனிமம்..  உடல் நலத்துக்குத் தேவையான முக்கியமான பொருள்.. 

சாதாரண உப்பு என்பது நாம் உணவில் பயன்படுத்தும் உப்பையே குறிக்கும். இது சோடியம் குளோரைடு என அழைக்கப்படுகிறது. இது "NaCl" என வேதியலில் குறிக்கப்படுகிறது..


1) What is table salt and sea salt?..

Table salt is harvested from salt mines, and sea salt comes from ocean water that has been evaporated. Both salts are made from sodium chloride. According to Oregon State University, Sodium and chloride are major electrolytes needed in the body that work together to regulate fluid outside.


2) Is table salt pure?

It is not. 
Rock salt (from the ground) and sea salt have various other compounds in them. Table salt is not pure NaCl because it has an ant-caking agent in it. Sodium chloride NaCl is a pure substance by definition.

Regular table salt comes from salt mines and is processed to eliminate minerals. In addition to iodine — an essential nutrient that helps maintain a healthy thyroid — table salt usually contains an additive to prevent clumping.

Experts recommend limiting salt of any kind in your diet because this common food topper contains sodium. For some people, sodium can increase blood pressure because it holds excess fluid in the body. 

The sodium content of sea salt and table salt is identical - 40% when measured by weight. However, some sea salt may have larger crystals than table salt, so the sea salt may have less sodium by volume because fewer crystals will fit in a measuring device such as a spoon.

Whether you choose to use sea salt or table salt, remember to use in moderation. Better yet, experiment with herbs and spices to add flavor to your food and keep the salt shaker off the table.

... நன்றி : விக்கிப்பீடியா


பொதுவாக -
மழைக் காலங்களில் உப்பு நீர்த்து விடும்.. கால சூழ்நிலை மாறியதும் திரள் திரளாக ஆகி விடும்..


இப்படியெல்லாம்
கட்டியாகாமல் வருடம் முழுதும் தூளாகவே பொலபொல என்று இருப்பதற்காகவும் நீர்த்துப் போகாமல் இருப்பதற்காவும்
இப்போது சிலவிதமான ரசாயனங்கள் இரண்டறக் கலக்கப்படுகின்றன என்று சொல்லப்படுகின்றது... 
இதுதான் உடம்புக்கு நல்லது!.. - என்ற வியாபாரக் கூச்சலுடன் 
உணவுக்கும்
உடலுக்கும்,  கேடு விளைவிக்கின்ற பொருட்கள் சந்தையில் பெருகிக் கொண்டு  இருக்கின்றன...

நாம் தான் தப்பிப் பிழைக்க வேண்டும்...

இந்த வேதிப்பொருட்கள்  உடலுக்கு நல்லதல்ல..

கடலில் இருந்து எடுக்கப்படும் கல்லுப்பு தான் தலை சிறந்தது.. கல்லுப்பை நாமே  பொடியாக்கி நுணுக்கிக் கொண்டு பயன்படுத்தலாம்..

நவீன ரசாயனங்கள் இங்கே நுழைவதற்கு முன்பே இயற்கையின் துணை  கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் நாம்.. 

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே...

என்றெல்லாம் உப்பின் பயன்கள் நமக்குத் தெரியும்.. 

எலுமிச்சை, நாரத்தை
வேறு சில காய்கள், மீன், இறைச்சி - இவற்றை உப்புடன் அல்லது உப்பு கலந்த நீருடன் சேர்த்துப் பதப்படுத்தும்  நம்முடைய நுட்பமும் ஆதியானது...

உப்பு தானம் சிறப்பானது.. 

குறிப்பாக  நோய் தீர்வதற்கு நேர்ந்து  கொண்டு மாரியம்மன் கோயில்களில்
உப்பினைக் காணிக்கை செலுத்துவது சமயம் சார்ந்த தமிழர்களின் வழக்கம்..

தென் தமிழகத்தில் சில சமுதாயத்தில் கல்யாணம் நிச்சயம் செய்யப்பட்டதும் இரு வீட்டாரும் ஒருவருக்கொருவர் உப்பினைப் பரிமாறிக் கொள்வது வழக்கம்.. 

எனது மகள் திருமண நிச்சயத்தின் போது இப்படி நடந்தது..

வீட்டுக்குள் புகுந்து நாட்டாமை செய்கின்ற  
இரசாயன விளம்பரங்களில் இருந்து மீள்வதற்கு முயற்சிப்போம்..

உப்பிட்டவரை உள்ளளவும் நினை..

இயற்கையே இறைவன்
இறைவனே இயற்கை

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

  1. உப்பு பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம். வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் பற்றி கூட சொல்லி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உப்பு சத்தியாகிரகம் பற்றி அடுத்தொரு பதிவில்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. உப்பு பற்றிய தகவல்கள் சிறப்பு ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
  3. உப்பில் ரசாயனம் என்பதைப் பலவருடங்களாகக் கேள்விப்படுகிறேன். நான் கல் உப்பும் உபயோகிக்கிறேன் ஆனால் பல நேரங்களில் உடனுக்குடன் கரைந்து நமக்கு உப்பின் அளவைத் தெரிந்துகொள்ள பொடி உப்புதான் உபயோகம். பல பிராண்டு பெயர்களில் வரும் உப்பு சுத்தக் குப்பை என்பது என் எண்ணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ////பல பிராண்டு பெயர்களில் வரும் உப்பு சுத்தக் குப்பை என்பது என் எண்ணம்.///

      இதுதான் இப்பதிவுக்கு அடிப்படை..

      மகிழ்ச்சி.. நெல்லை அவர்களுக்கு நன்றி..

      நீக்கு
  4. உப்பு குறித்த தகவல்கள் நன்று.

    பதிலளிநீக்கு
  5. "உப்பு" நல்ல பகிர்வு. கல்லு
    உப்பே நலமானது.

    எமது அம்மாமார்கள் கல்லு உப்பை மண்பானையில் இட்டு அடுப்புக்கு பின்புறம் வைத்து உபயோகிப்பார்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..