சனி, பிப்ரவரி 17, 2024

கொடியேற்றம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 5
சனிக்கிழமை


ஓதா நாவன் திறத்தை உரைத்திரேல்
ஏதானும் இனிதாகும் இயமுனை
சேதா ஏறுடையான் அமர்ந்த இடம்
கோதாவிரி உறையும் குடமூக்கிலே..5/22/4
-: திருநாவுக்கரசர் :-

இயமுனையும் கோதாவிரியும் இத்திருப்பாட்டில் குறிக்கப்படுகின்றன எனில் மற்ற நதிகள் மறை பொருளாக விளங்குகின்றன என்பது தெளிவு..

வியாழன் சிம்ம ராசியில் இருக்கும் போது கும்ப ராசியில் சூரியன் பிரவேசிக்க சந்திரன் மக நட்சத்திரத்தில் நிற்கும் நாளே மகாமகப் பெருவிழா..

வியாழன் (குரு/ பிரகஸ்பதி) எனும் கிரகம் தனது ஒரு சுழற்சிக்கு எடுத்துக் கொள்ளும் ஆண்டுகள் பன்னிரண்டு.. 

வியாழன் தற்போது  இருப்பது மேஷ ராசியில்..

இந்த அடிப்படையில் வியாழன் சிம்ம ராசியில் பிரவேசிப்பதற்கு இன்னும் நான்கு வருடங்கள் இருக்கின்றன..

அடுத்த மகாமகம் எதிர்வரும் பிலவங்க ஆண்டின் மாசி மாத முதல் வாரத்தில் (2028) நிகழ இருப்பதாகத்  தெரிகின்றது..




நிகழும் மங்களகரமான சோபகிருது வருடத்தில்
எதிர்வரும் மாசி 11 வெள்ளியன்று (23/2) மாசிமகப் பெருவிழா..

இதனையொட்டி
கடந்த 15/2  வியாழன்று
கும்பகோணத்திலும் அடுத்துள்ள கொட்டையூர், சாக்கோட்டை ஆகிய ஊர்களின் 
சிவாலயங்களிலும் 16/2 வெள்ளியன்று 
ஸ்ரீ சார்ங்கபாணி ஸ்வாமி முதற்கொண்டு ஏனைய பெருமாள் கோயில்களிலும் மாசி மகோற்சவத்திற்கான திருக்கொடியேற்றம் நிகழ்ந்துள்ளது..


ஸ்ரீ மந்திரபீடேஸ்வரி மங்களாம்பிகா சமேத ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில்
பாலாலயம் நிகழ்ந்து  திருப்பணிகள் நடைபெற்று வருவதால், நிகழாண்டில் மாசி மக பிரம்மோற்சவம் நடைபெறாது.

கும்பேஸ்வரர் கோயிலில்
பிரம்மோற்சவம் நடைபெற வேண்டிய  பத்து நாட்களும் ருத்ர ஹோமம் நடைபெற்று சுவாமி அம்பாள் சோமாஸ் கந்தருக்கு உச்சி காலத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இதர சிவாலயங்கள்
ஸ்ரீ வியாழசோமேஸ்வரர்
ஸ்ரீ காசி விஸ்வநாதர்
ஸ்ரீ அபிமுகேஸ்வரர்
ஸ்ரீ கௌதமேஸ்வரர்
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்களில் மாசி மக பிரம்மோற்சவம் (15.02.2024) கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது..

ஏனைய சிவாலயங்கள் :
ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர்
ஸ்ரீ பாணபுரீஸ்வரர்
ஸ்ரீ கம்பட்ட விஸ்வநாதர்
ஸ்ரீ கோடீஸ்வர ஸ்வாமி கொட்டையூர்.
ஸ்ரீ அமிர்தகலச நாதர் சாக்கோட்டை..

இந்த பன்னிரு சிவாலயங்களின் தீர்த்தவாரி மகாமகக் குளக்கரையில் நிகழும்..


திருக்குடந்தை
ஸ்ரீ சுதர்சனவல்லி 
ஸ்ரீ விஜயவல்லி சமேத 
ஸ்ரீ சக்ரபாணி ஸ்வாமி திருக்கோயில் 
மாசி மகோத்ஸவ குறிப்புகள்..

மாசி 3 வியாழன் 15/2 காலை 108 கலசாபிஷேகம் 

மாசி 4  வெ 16/2 முதல் திருநாள்
காலை துவஜாரோகணம்  ரத சப்தமி புறப்பாடு 
மாலை இந்திர விமானம் 
மாசி 5 சனி 17/2 இரண்டாம் திருநாள்
காலை பல்லக்கு 
இரவு சந்த்ரப்ரபை

மாசி 6 ஞாயிறு 18/2 மூன்றாம் திருநாள் 
காலை பல்லக்கு 
இரவு சேஷ வாகனம்
மாசி 7 திங்கள் 19/2 நான்காம் திருநாள்
காலை பல்லக்கு 
மாலை கருடசேவை இரவு ஓலைச்சப்பரம் 

மாசி 8 செவ்வாய் 20/2 ஐந்தாம் திருநாள்
காலை பல்லக்கு 
இரவு ஹனுமந்த வாகனம்
மாசி 9 புதன் 21/2 ஆறாம் திருநாள்
காலை பல்லக்கு 
இரவு யானை வாகனம்

மாசி 10 வியாழன் 22/2 ஏழாம் திருநாள்
காலை படிச்சட்டம் 
இரவு புன்னைமர வாகனம்
மாசி 11 வெள்ளி 23/2 எட்டாம் திருநாள்
காலை வெண்ணெய்த் தாழி 
இரவு குதிரை வாகனம்
 
மாசி 12 சனி 24/2 ஒன்பதாம் திருநாள் 
காலை (7:45) திருத்தேர் வடம் பிடித்தல் 
மாலை தீர்த்தவாரி
மாசி 13 ஞா 25/2 பத்தாம் திருநாள்
காலை திருமஞ்சனம்  
இரவு சப்தாவர்ணம்

மாசி 14 திங்கள் 26/2 விடையாற்றி 
இரவு புஷ்ப பல்லக்கு 

வைணவத் திருக்கோயில்களின் தீர்த்தவாரி சக்கரப் படித்துறையில் நிகழும்..

 மகாமகம் 2016

2016

கழைவளர் கவ்வைமுத்தங் கமழ் காவிரி யாற்றயலே
தழைவளர் மாவின் நல்ல பலவின் கனிகள் தங்கும்
குழைவளர் சோலைசூழ்ந்த குழகன் குடமூக்கிடமா
இழைவளர் மங்கையோடும் இருந்தான் அவன் எம்இறையே.. 3/59/6
-: திருஞானசம்பந்தர் :-

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. மாசி மக கொண்டாட்டங்கள், படங்கள் விவரங்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  2. மாசிமகம் ,மகாமகம் பற்றிய விரிவான தகவல்களும். விழாக்கள் நடைபெறும் தினங்களும் என பலரும் அறிய உதவும் பகிர்வு.

    ஓம் நமசிவாய. ஓம் ஹரி ஓம்.

    பதிலளிநீக்கு
  3. மாசி மகம் பற்றிய அருமையான தகவல்கள். போகிறவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். முன்பு போய் வந்த நினைவுகள் வந்து போனது. படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நதிதீர அன்னையர்களின் படங்களை பதிவின் வாயிலாக கண்டு வணங்கி கொண்டேன். சார்ங்கபாணி பெருமாள் கோவில் கோபுர தரிசனம் பெற்றுக் கொண்டேன்.

    மாசிமகம், பற்றிய விபரங்கள் அறிந்து கொண்டேன். கும்பகோணத்திலுள்ள அத்தனை கோவில்களின் விஷேடங்களும், விழாக்களும், அதன் நேரம் காலம் குறித்த செய்திக்ளும் அனைவருக்கும் பயனுள்ளவை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. அடுத்த மகாமகம் பற்றிய தகவல்கள், மாசி மகம் கொண்டாட்ட்ங்கள் என அனைத்து தகவல்களும் நன்று. 2028-இல் மகாமகம் - முடிந்தால் அச்சமயம் வரவேண்டும் என ஆவல் உண்டு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..