புதன், பிப்ரவரி 14, 2024

உயிரே.. உணவே

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 2
புதன் கிழமை



உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு என்பது பழமொழி..

ஒரு மனிதனுக்கான உணவு அவனது கையால் 32 கவளம் என்பர்.. 

இன்னும் கொஞ்சம் என்று மனம் எண்ணுவதே வயிறு நிறைந்ததற்கான குறிப்பு..


எப்போதும் கிடைத்த உணவை திருப்தியுடன் உண்ணுவதே சிறப்பு..

அதற்காக சாப்பிட்டதும் விழுந்து புரண்டு குறட்டை விட்டுத் தூங்குதல் கூடாது.. 

சற்றே ஓய்வு.. அவ்வளவு தான்..

சாப்பிட்டதும் உறங்கக் கூடாது என்கிற மாதிரி குளிக்கவும் கூடாது... சாப்பிட்டு முடித்தவுடன் குளிப்பதும் பயணம் செய்தும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்..

சாப்பிடும் போது கடைப்பிடித்த அமைதியான மனநிலையில் சாப்பிட்ட பின்னரும் ஒரு நாழிகைப் பொழுது  (24 நிமிடங்கள்) இருப்பதே நலம்..

இன்றைய நவீன உலகின் போக்கில் இயன்றவரை இயற்கையுடன் இணைந்து வாழ்வதே முறை..


தேன் சர்க்கரை பால்  நெய் எண்ணெய் மஞ்சள் முதலான பொடி வகைகள் உப்பு 
இவற்றில் நாம் கவனமாக இருந்து விட்டால் அதற்கு மேல் இருக்கவே இருக்கின்றான் இறைவன்..

தேன் சர்க்கரை பால் நெய் எண்ணெய் உப்பு இவையெல்லாம் ஆபத்தானவை என்று அலறுகின்ற மூடர்களும் இருக்கின்றார்கள்.. 

சாதாரணமாக
இவை அளவுக்கு மீறுகின்ற போது நமக்கே திகட்டி விடும்..

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பது இயற்கை மொழி.. இவற்றில் அச்சம் வேண்டாம்..

மேற்சொன்ன - தேன் சர்க்கரை பால் நெய் எண்ணெய் உப்பு இவையெல்லாம் இயற்கையாகவே கிடைக்கும் சூழலில் வாழ்கின்றவர்கள் வரம் பெற்றவர்கள்.. 

அதற்காக மற்றவர்கள் வருந்த வேண்டாம்.. முயற்சி மெய் வருத்தக் கூலி தரும்..


இயற்கையை நாம் தேடிச் சென்றால் இயற்கை நம்மைத் தேடி வரும்..

தேடிச் சென்ற மூலிகை தெருவில் கிடைத்தது என்றொரு சொல் வழக்கும் நம்மிடையே உண்டு..

ஆக, மீண்டும் மீண்டும்
 நினைவில் கொள்வோம்..

நாம் நமது உணவில் கவனமாக இருந்து விட்டால் அதற்கு மேல் இருக்கவே இருக்கின்றான் இறைவன்!..
 
இறைவன் ஒருவனே
அன்பும் ஆரோக்கியமும் ஆனவன்..

இறைவன் ஒருவனே
 நிம்மதியும் நிறைவும் ஆனவன்..

இன்னும் எவ்வளவோ இருக்கின்றன.. 
இருப்பினும் இந்த அளவில்  குறிப்புகள் நிறைவு பெறுகின்றன.. 

யார் இந்தப் பொடியன்!..

கை விரல்களில் வலி இருக்கின்ற போதிலும் நான் அறிந்திருக்கும் விஷயங்களை நமது தளத்தில் பதிவு செய்ததில் மகிழ்ச்சி.. மன நிறைவு.. 

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்..

தொடர்ந்து எழுதுதற்கு ஊக்கமளித்த தங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்..
நாளும் வாழ்க
நன்றென வளர்க..

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

15 கருத்துகள்:

  1. நல்ல குறிப்புகள். இன்றைய நிலையில் இவற்றில் பாதியைக் கடைப்பிடித்தாலே நல்ல ரிசல்ட் கிடைக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ////இன்றைய நிலையில் இவற்றில் பாதியைக் கடைப்பிடித்தாலே நல்ல ரிசல்ட் கிடைக்கும்..///

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. தேடிச்சென்ற மூலிகை தெருவில் கிடைத்தது - எங்களுக்கு எங்கள் குலதெய்வம் கோவிலில் கிடைத்தது! அது ஒரு வியப்பான அனுபவம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// எங்களுக்கு எங்கள் குலதெய்வம் கோவிலில் கிடைத்தது! ..///

      எல்லாம் அவன் செயல்..

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. அந்தப் பொடியனின் படம் என்னையும் ரசிக்க வைத்தது, புன்னகைக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பொடியன் யாரென்று தெரிய வில்லையா..

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  4. உணவே மருந்து என்பது உண்மை. நேற்று சைதை துரைசாமி இதுபற்றிக் கூறிய காணொளி பார்த்தேன். சமைத்த உணவில் சத்தில்லை என்பதைத் தெளிவாக விளக்கியிருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// உணவே மருந்து என்பது உண்மை ///

      நெல்லை அவர்களது வருகைக்கு மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  5. உணவே மருந்து பற்றி பல நல்ல தகவல்களை தொடர்ந்து வழங்கி வந்துள்ளீர்கள். பலருக்கும் பயன்படும்

    பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// பாராட்டுகளும் வாழ்த்துகளும்.///

      மகிழ்ச்சி..
      நன்றியம்மா..

      நீக்கு
  6. உணவே மருந்து பற்றி அருமையான தொகுப்பு.
    கைவலியுடன் நல்ல குறிப்புகளை பகிர்ந்தமைக்கு நன்றி.
    உடல் நலத்தை பார்த்து கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// உடல் நலத்தை பார்த்து கொள்ளவும்.///

      மகிழ்ச்சி..
      நன்றியம்மா..

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. அதிலும் அந்தப் பள்ளிச்சிறுவன் படம் அழகோ அழகு.

    உணவே மருந்து என நிறைய தொகுப்புககளை அருமையாக திரட்டி தந்துள்ளீர்கள். இதுவரை இது அனைவருக்கும் பயனுள்ள பதிவுகளாக இருந்தது. ஆனால், தங்கள் கை வலியுடன் பாடுபட்டது மனதிற்கு வேதனையாக உள்ளது. கைவலிக்கு நல்ல மருந்தாக எடுத்துக் கொள்ளுங்கள். விரைவில் பூரண குணமாக இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///விரைவில் பூரண குணமாக இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.///

      மகிழ்ச்சி..
      நன்றியம்மா..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..