நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை
கிழமை
பகுதி 6
உண்ணும் முறையும் ஒழுங்கும்
வடக்குத் திசை நோக்கி அமர்ந்து சாப்பிடுவதில்லை என்பதில் நிச்சயமாக இருக்க வேண்டும்..
உணவுக்கு முன் - முழங்கால் முழங்கை, முகம் கழுவுதல் நல்லது..
குழப்பமான சூழலில் உண்ணக் கூடாது..
முற்காலத்தில் ஒவ்வொரு வேளையும் குளித்த பின்னரே உணவு அருந்தியிருக்கின்றனர்.. இதில் விதிவிலக்கும் உள்ளது..
எப்போதும் - சிறுநீர் கழித்தால் முழங்கால் வரையிலும் மற்றது என்றால் இடுப்பு வரையிலும் கழுவுதல் என்பதிலும் உறுதியாக இருக்க வேண்டும்..
தரையில் விரிப்பின் மீது அமர்ந்து ஒரே நினைவுடன் உண்பது ஆன்றோர் குறித்தது..
உணவின் மீது முழு கவனம் கொண்டு உண்ண வேண்டும்..
கிடைத்தது என்பதற்காக உணவை தொண்டைக்குழி வரைக்கும் அடைக்கக் கூடாது..
அரை வயிறு உணவு.. அதற்கு மேல் கால் பங்கு நீர் என்பதே நியதி..
உணவு நேரத்தில் தொலைக்காட்சி கைத்தலபேசி இவற்றை கவனிக்காமல் விட்டால் மிகவும் நல்லது..
சாப்பிடும் போது கல்கி வாசித்ததால் கண்டிக்கப்பட்ட தண்டிக்கப்பட்ட தலைமுறையும் நம்முடையது..
வீட்டில் உள்ள முதியோர்கள் குழந்தைகள் உணவில் கவனம் செலுத்துதல் அவசியம்..
உணவை வெதுவெதுப்பாகத் தான் உட்கொள்ள வேண்டும்..
கொதிக்கக் கொதிக்க கொட்டிக் கொள்வதால் தீமையே விளையும்..
உணவை பரக்கப் பரக்க அள்ளிப் போட்டுக் கொள்வதும் கூடாது.. நன்றாக மென்று உண்ணுதல் வேண்டும்..
பசித்த பின்னர் உண்ணுதல் நலம்..
சமைத்த உணவை ஒரு முகூர்த்த பொழுதுக்குள் சாப்பிட்டு விட வேண்டும் என்பர்..
ஒரு முகூர்த்தம் என்பது மூன்றே முக்கால் நாழிகை. (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள் ஆக, ஒன்றரை மணி நேரம்)
இருவேளை உணவிற்கும் இடையில் நான்கு மணி நேரம் இருக்க வேண்டும்..
நமக்கும் கீழே உள்ளவர் கோடி - என்ற எண்ணத்துடன் கிடைத்த உணவை திருப்தியுடன் உண்ணுதல் வேண்டும்..
தினசரி இயலாவிட்டாலும்
அவ்வப்போது ஆதரவு அற்றவர்க்கு உணவு அளிக்க வேண்டும்..
ஒருவருக்காவது உணவு அளிப்பது கோடி புண்ணியம்..
மேலும் குறிப்புகள்
அவ்வப்போது
வெளிவர இருக்கின்றன..
நம்முடைய நலம்
நம்முடைய கையில்..
நாளும் வாழ்க
நன்றென வளர்க..
***
அனைத்தும் நல்ல கருத்துக்கள். படங்கள் அருமை.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குசிறப்பான குறிப்புகள். பின்பற்ற முடியாதவை பெருமூச்சு விடவைக்கின்றன!
பதிலளிநீக்குஎல்லாம் காலத்தின் கோலம்..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்
எந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால் என்ன பலன் என்று படித்திருக்கிறேன். வடக்கு நோக்கி அமரக்கூடாது என்பதற்கும் வடக்கிருப்பதற்கும் தொடர்புண்டா என்ன?
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குஉண்டு..
வடக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிடும் போது சரியான முறையில் நமக்கு ஜீரணம் ஆகாது. இதனால் நமக்கு அஜீரண கோளாறுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் பல்வேறு குறைபாடுகள் வந்து சேரும். ஆகவே வடக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்..
அன்பின் கருத்திற்கு நன்றி..
சிறப்பான குறிப்புகள். சில தொடர முடியாதவையாகவே இருக்கின்றன!
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்..
நீக்குஉணவு பற்றி நல்ல பல தகவல்கள் கண்டோம்.
பதிலளிநீக்கு