ஞாயிறு, அக்டோபர் 15, 2023

சக்தி லீலை 1

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 28 
 ஞாயிற்றுக்கிழமை


இன்று முதல் நவராத்திரி விழா..

நம் நாட்டில்
பெண்மையைப் போற்றி வணங்குகின்ற சிறப்புறு வழிபாடு -
நவராத்திரி..

நவராத்திரி விழாவில் கும்பம் வைத்து பூசை செய்து  கொலு அமைத்து விரதம் மேற்கொள்வதும் வழக்கம்..

இது அவரவர் பாரம்பரியத்திற்கு மாறுபட்டு விளங்கக் கூடும்..

நவராத்திரி எனப்படும் ஒன்பது நாட்களில்
முதல் மூன்று நாட்களும்  ஸ்ரீ துர்கா பரமேஸ்வரிக்கு உரியவை..

இந்நாட்களில் - 
அபிராமி அந்தாதி, துர்கா அஷ்டகம், மஹிஷாசுரமர்த்தனி ஸ்தோத்திரம் முதலான ஞான நூல்களின் வழியாக அம்பிகையை சிந்தித்திருப்பது நலம் தரும்..

அம்பிகைப் போற்றி வணங்கி சக மனிதரையும் சிற்றுயிர்களையும் ஆதரித்து இயற்கை வளங்களை இயன்ற வரை காத்தலே எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளுக்கு நாம் செய்யும் தொண்டு..

சர்வலோக ஜனனியாகிய அம்பிகை நடத்திய திருவிளையாடல்கள் எத்தனை எத்தனையோ!..

அத்தனையையும் அறிந்து கொண்டு இங்கே சொல்வதென்றால் ஆயிரம் நா படைத்த ஆதிசேஷனாலும் ஆகாது..

எனினும் அம்பிகை நிகழ்த்திய திருவிளையாடல்கள் சிலவற்றை இந்த நவராத்திரி நாட்களில் சொல்வதற்கு
எளியேன் முயற்சிக்கின்றேன்..

தற்பரையாகிய அந்தத் தயாபரியின் தயவுடன் ஒரு சில திருத்தலங்களை இந்நாளில் நினைவில் கொள்வோம்..

சக்தி லீலை 1

முதலாவதாக - 

முதல் இரண்டாவது என்பதெல்லாம் நம்முடைய வசதிக்காகத் தான்..

இப் பூதலத்தில் ஈ எறும்பு முதலாக யானை ஈறாகிய எண்ணாயிரங்கோடி யோனி பேதங்களில் எப்படிப் பிறந்திருந்தாலும் அவற்றுக்கான உணவினை அவற்றின் கர்மவினைகளின் படி அன்றாடம் அளிப்பவள் அம்பிகை..

அவ்விதம் வாழ்ந்தபின்
உட்லை விட்டு நீங்கிய உயிர்களைத் தன் மடியில் இட்டு - முந்தானை கொண்டு விசிறி ஆசுவாசப்படுத்துகின்றவள் அம்பிகை..


இவ்விரண்டையும் அம்பிகை - தாயாக வீற்றிருந்து நிகழ்த்துகின்ற  திருத்தலம் காசி..


இத்தலத்தில் அம்பிகையின் திருப்பெயர்கள் அன்னபூரணி, விசாலாட்சி..


அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விஸ்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய ஷிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே..

காத்யாயனாய வித்மஹே கன்யகுமாரி தீமஹி
தந்நோ துர்கே ப்ரசோதயாத்

அம்பிகையைச் சரணடைந்தால் 
அதிக வரம் பெறலாம்..
-: மகாகவி :-
*
ஓம் சக்தி ஓம் 

சிவாய 
திருச்சிற்றம்பலம்
***

6 கருத்துகள்:

  1. அருமையான ஒன்பது நாட்கள் ஆரம்பம். இனிமையான பாட்டு, சுவையான சுண்டல், அழகான பொம்மை அலங்காரங்கள்... வாழ்க நமது கலாச்சாரம்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. சக்தி லீலை தொடக்கம் சிறப்பு. படங்களில் காசி விசாலாட்சி அன்னையை தரிசித்துக் கொண்டேன். இந்த நவராத்திரி நாட்களில் ஒன்பது அன்னையர்கள் தரிசனம் கிடைக்க வைத்திருப்பதற்கு தங்களுக்கு மிக்க நன்றி. தொடர்கிறேன். ஓம் சக்தி ஓம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. ஓம் சக்தி ஓம்
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  4. நவராத்திரி ஆரம்ப நாளில் சக்தி தரிசனம் பெற்று மகிழ்ந்தோம் நன்றி.

    அகிலாண்ட நாயகியை சரணடைவோம்.
    ஓம் சக்தி ஓம்.

    பதிலளிநீக்கு
  5. இன்று சக்தியின் லீலைகளை படிப்பது சிறப்பு.
    தேவி மாகாத்மியம் படிப்பது உண்டு வீடுகளில். நானும் படிப்பேன்.
    இன்றைய பாடல்களை படித்து சக்தியை தரிசனம் செய்து கொண்டேன்.
    ஓம் சக்தி ஓம்!

    பதிலளிநீக்கு
  6. அம்பிகையின் லீலைகள் குறீத்து எழுதுவதும் அருமையான தலங்கள் குறீத்து எழுதி வருவதும் சிறப்பு. காசி அன்னபூரணீயும் விசாலாக்‌ஷி தரிசனமும் கிடைத்தது. தேவி மஹாத்மியம்/தேவி பாகவதம் போன்றவை படிப்பதும் நன்மை தரும். நேரம் இருக்கையில் நானும் படிப்பது உண்டு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..