சனி, அக்டோபர் 14, 2023

திருவேங்கடம்



நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி 27
நான்காவது
சனிக்கிழமை

இன்று 
மஹாளய அமாவாசை

திருவேங்கட தரிசனம்

கிழக்கே திருமுகம் காட்டி 
ஆனந்த விமானத்தின் கீழ் நின்ற திருக்கோலம்..


தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டொழிந்தேன்  நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்
வேயேய் பூம் பொழில் சூழ்  விரையார் திருவேங்கடவா
நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள் என்னைக் கொண்டருளே.. 1028

மானேய் கண் மடவார்  மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம்பொழில் சூழ்  திருவேங்கட மா மலை
என் ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.. 1029


கொன்றேன் பல்லுயிரை  குறிக்கோள் ஒன்று இலாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு  இனிது ஆக உரைத்து அறியேன்
குன்றேய் மேகம் அதிர்  குளிர் மா மலை வேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.. 1030

எப் பாவம் பலவும்  இவையே செய்து இளைத்தொழிந்தேன் 
துப்பா நின் அடியே  தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்
செப்பார் திண் வரை சூழ்  திருவேங்கட மா மலை
என் அப்பா வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.. 1032

தெரியேன் பாலகனாய்  பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயினபின்  பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்
கரிசேர் பூம் பொழில் சூழ்  கன மா மலை வேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.. 1034


பற்றேல் ஒன்றும் இலேன்  பாவமே செய்து பாவி ஆனேன்
மற்றேல் ஒன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல்தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா
அற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.. 1036
-: திருமங்கையாழ்வார் :-
 நன்றி நாலாயிர திவ்யப்ரபந்தம்
*

தஞ்சை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசர் தரிசனம்
 


ஓம் நமோ வேங்கடேசாய
**

 ஓம் ஹரி ஓம்
***

15 கருத்துகள்:

  1. நானிலம் முழுவதும் நாராயணன் காக்கட்டும்.  முன்னோர்கள், மூத்தோர்கள் வந்து இந்த மகாளய அமாவாசை நாளில் நம்மை வாழ்த்தியருளட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னோர்கள், மூத்தோர்கள் வந்து இந்த மகாளய அமாவாசை நாளில் நம்மை வாழ்த்தியருளட்டும்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. அமாவாசை தினத்தின் அருமையான பதிவு.

    பெரியாழ்வார் திருமொழியில் எனக்குப் பிடித்த பாசுரங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. வேறு வேலை ஏதும் இல்லாததால் நாளொரு பதிவாகத் தந்து கொண்டு இருக்கின்றேன்..

      தேதி கிழமையை கவனித்துக் கொண்டு பதிவுகள் தயார் செய்தால் சிறப்புகள் தாமாக வந்து சேர்ந்து கொள்கின்றன..

      எல்லாம் அவன் செயல்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி நெல்லை அவர்களுக்கு..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. புரட்டாசி சனிக்கிழமையாகிய இன்று நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் பாடி, பெருமாளின் திவ்ய தரிசனம் கண்டு மகிழ்வடைந்தேன். படங்களின் வாயிலாக ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசன் தரிசனம் மனதிற்கு நிம்மதியை தருகிறது. ஸ்ரீ நாராயணர் அனைவருக்கும் நலன்களை தர வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொண்டேன்.
    ஓம் நமோ நாராயணா... பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// படங்களின் வாயிலாக ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசன் தரிசனம் மனதிற்கு நிம்மதியை தருகிறது. ஸ்ரீ நாராயணர் அனைவருக்கும் நலன்களை தர வேண்டும்..///

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. ஓம் ஹரி ஓம்
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  5. வெங்கடேசாய நமக. அவன் பாத கமலங்களை தொழுவோம்.

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவுக்கு வாழ்த்துகள். இன்னிக்கு அமாவாசை எனினும் கொலு நாளக்குத் தான் வைக்கப் போறேன். இன்னிக்குப் பூரா மரண யோகமாக இருக்கு. ஆகவே நாள முதல் கொலு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்தும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி அக்கா..

      நீக்கு
  7. மிக அருமையான பாசுரங்கள் பகிர்வு.
    இன்று திருமங்கை ஆழவார் பற்றிதான் தொலைக்காட்சியில் பேசினார்கள்.
    பாசுரங்களை படித்து பெருமாளை தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..