சனி, ஆகஸ்ட் 05, 2023

திருநறையூர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 20 
சனிக்கிழமை
 
இன்றைய
 தரிசனம்

ஸ்ரீ கருடராஜன்

 திவ்யதேசம்

திருநறையூர்
{நாச்சியார் கோயில்}

ஸ்ரீநிவாசப் பெருமாள்
நறையூர் நம்பி
வஞ்சுளவல்லி நாச்சியார்
கல் கருடன் சிறப்பு

காணொளியாளருக்கு நன்றி


தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்  தயங்கொளி சேர் மூவுலகும் தானாய் வானாய்
தன்னாலே தன்னுருவின் மூர்த்தி மூன்றாய் தான் ஆயன் ஆயினான் சரண் என்றுய்வீர்
மின்னாடு வேலேந்து விளைந்த வேளை விண் ஏறத் தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட
தென்நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.. 1503

முருக்கிலங்கு கனித் துவர் வாய்ப் பின்னை கேள்வன் மன் எல்லாம் முன் அவியச் சென்று  வென்றிச் 
செருக்களத்துத் திறல் அழியச் செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்
இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட
திருக் குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.. 1505
-: திருமங்கையாழ்வார் :-
**

ஓம் ஹரி ஓம்
***

15 கருத்துகள்:

  1. தெளிவாய் உச்சரிக்கிறார். திருநறையூர் பெருமாள் நம்மை காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. காணொளி கேட்டேன் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  3. நேற்று வேறு ஒரு காரணத்திற்காக இந்தக் கோவில் பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். நாச்சியார் கோவில் எனப் பேர் பெற்ற இத்தலம் பற்றிய பதிவு மனதைக் கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
  4. இரண்டு முறை கல்கருட சேவையில் கலந்துகொண்டிருக்கிறேன். பலமுறை இத் தலத்திற்குச் சென்றிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் இத்தலத்திற்குச் செல்வதற்கு வாய்க்கவில்லை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. நாச்சியார் கோவில் காணொளி அருமை.
    திருமங்கையாழ்வார் பிரபந்த பாடல் பாடி வணங்கி கொண்டேன்.
    கருடராஜன் தரிசனம் செய்து கொண்டேன், நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. திருநறையூர் / நாச்சியார் கோயில் ஒரு முறை சென்றிருக்கிறேன். பெரிய கல்கருடன். சென்றதும் கூட ஒரு கல்யாணத்திற்குச் சென்ற போது அப்படியே

    பதிவு சிறப்பு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் இக்கோயிலுக்குச் செல்வதற்கு வாய்க்கவில்லை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  7. சில முறைகள் சென்ற ஊர். இதன் அருகேயே இன்னொரு திவ்ய தேசமும் உண்டு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..