நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 21
ஞாயிற்றுக்கிழமை
ரயிலடி - என்றால் தான் உள்ளூர் மக்களுக்கு திருப்தி..
சந்திப்பு என்றோ ஜங்ஷன் என்றோ யாரும் சொல்வதில்லை..
நான் முதன்முதலில் தஞ்சாவூர் ஜங்ஷ்னைப் பார்த்த போது 1960 ஆக இருக்கலாம்..
அறுபதுகளுக்கு முன் எப்படி இருந்ததோ..
அறுபதுகளுக்குப் பிறகும் அதற்குப் பிறகும் பற்பல மாற்றங்கள்..
இன்னும் சில ஆண்டுகளில் இப்போதிருக்கும் தோற்றமும் மாறிவிடும் என்பது மட்டும் தெளிவு..
பிரிட்டிஷ் ஆட்சியின் போது 1861 ல் கிரேட் சதர்ன் இந்தியன் இரயில்வே (GSIR) நாகப்பட்டினம் -
திருச்சிராப்பள்ளி இடையே 78 மைல் தொலைவுக்கு இருப்புப் பாதை
அமைக்கும் பணியை மேற்கொண்டது.
அகலப் பாதையான
இந்தத் தடத்தில் 1864 டிசம்பர் 2 அன்று தஞ்சாவூர் ஸ்டேஷன் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது..
1874 ல் தென் இந்திய ரயில்வே கம்பெனி - கிரேட் தென்னிந்திய இரயில்வேயை (GSIR) கையகப்படுத்திய பின்னர், நாகப்பட்டினம் - திருச்சிராப்பள்ளி தடம் 1875 ல் மீட்டர் பாதை என மாற்றப்பட்டது..
1880 - ல் சென்னை (தூத்துக்குடி) வழித்தடம்
அமைக்கப்பட்டது..
பழைய போட் மெயிலின்
கால அட்டவணையும் கீழே உள்ளது..
பயன்படுத்திக் கொள்க..
அந்த வகையில் தஞ்சை ரயில் நிலையத்திற்கு 162 ஆண்டுகள் ஆகின்றன..
1970 வரை இங்கொரு நடுத்தர பணிமனை இருந்தது..
நீராவி இஞ்ஜின்களை திசை திருப்பி நிறுத்துவதற்கான சுழல் தண்டவாளங்களும் இருந்தன.. காலத்தின் ஓட்டத்தில் அவை எல்லாம் மாற்றப்பட்டு விட்டன..
ஸ்வாமி விவேகானந்தர்
சிகாகோ நகரில் இருந்து நாட்டுக்குத் திரும்பி - 1897 பிப்ரவரி மூன்றாம் நாள் - சென்னைக்குப் பயணித்த வேளையில் இங்கே திரண்டிருந்த மக்களுடன் சிறிது நேரம் உரையாடினார்..
அந்நாளை நினைவு கூர்ந்து தகவல் பலகை ஒன்றும் இங்கு ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தினரால் நிறுவப்பட்டுள்ளது..
தஞ்சை திருச்சி இடையே கூடுதல் வழித்தடம் அமைக்கப்பட்டு 2018 மார்ச் 28 முதல் இரட்டை வழிகளில் ரயில்கள் இயங்கின..
2019 மார்ச் 23 மற்றும் செப்டம்பர் 26 ல் சோதனை ஓட்ட ங்களுடன் தஞ்சை திருச்சி மின் வழித் தடம் இயக்கப்பட்டது..
2020 நவம்பர் 14 ல் தஞ்சை விழுப்புரம் வழித் தடமும் அதையடுத்து திருவாரூர் வழித் தடமும் மின்மயம் ஆகின..
தற்போது ஜங்ஷன் பிரதான வாயிலும் திருச்சி சாலையில் மற்றுமொரு வாயிலும்
உள்ளன..
நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகளை ஏற்றவும் இறக்கவும் என்று வேறொரு வழியும் உள்ளது..
ஐந்து நடை மேடைகளுடன் ஏழு தடங்களைக் கொண்டிருக்கின்றது தஞ்சை ஜங்ஷன்..
ஐந்து நடை மேடைகளுக்கும் செல்லும்படியாக மேல் நடைவழியுடன் இணைக்கப்பட்ட நகரும் படிக்கட்டுகள் மற்றும் கீழ்தள நடை வழியும் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் திருச்சிராப்பள்ளி ஜங்ஷனுக்கு அடுத்து அதிக அளவு வருவாய் ஈட்டித் தருவது தஞ்சாவூர் ஜங்ஷன்..
நாட்டின் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ள அம்ருத் பாரத் - திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் ரயில் நிலையமும் சீரமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது..
தற்போது ரயில் நிலையத்தின் எதிரே - வெயிலோ மழையோ - பேருந்திற்கு செல்லும் பயணியர்களுக்கு என்று எவ்வித நிழற்கூரையும் இல்லை.. ஆனால் இரண்டு வரிசைகளாக நிழல் மரங்கள் இருக்கின்றன..
புதிய விரிவாக்கத்தில் அவைகளுக்கு என்ன நேரிடும் என்பது தெரியவில்லை..
புதிய விரிவாக்கம் குறித்து கிடைத்துள்ள படங்கள்..
நன்றி
தஞ்சாவூர் Fb
தஞ்சாவூர் சந்திப்பு Fb
தஞ்சாவூர் ஜங்ஷன்
நன்றி : விக்கி
வரலாற்று
செய்தித் தொகுப்பு
தஞ்சையம்பதி
நலம் வாழ்க
வாழ்க நலம்
***
தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் ஒரு காட்சியில் தஞ்சாவூர் சந்திப்பு வரும். மகாத்மா காந்தியின் பொருட்கள் அடங்கிய ரயில் வந்து நின்று நாங்கள் எல்லாம் எரிப்பு பார்த்திருக்கிறோம். முன்பு இருந்த ரயில்வே உள்ளே போகும் வழி சாந்தி ஸ்வீட்ஸ் அருகே. இப்போது மேரிஸ் கார்னரில்!
பதிலளிநீக்கு/// தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் ஒரு காட்சியில் தஞ்சாவூர் சந்திப்பு வரும்.. ///
நீக்குஆம்.. நினைவில் இருக்கின்றது.. ராஜ சில்பி எனும் மலையாள படத்திலும் காட்டப்பட்டிருப்பதாக நினைவு..
ஒன்றரை மாதங்களுக்கு தொகுத்து அடுத்தடுத்து தேதி மாற்றி இந்தத் தேதியை நிச்சயித்தேன்.. இன்று தான் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படுகின்றது..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்...
இவ்வளவு சொன்னீங்க. மாலை தஞ்சை ரயில் நிலையத்துக்குச் சென்றால் அங்கிருக்கும் மரத்தில் பறவைகள் வந்து சேர்ந்து அதன் கலகல சப்தம் காதைத் துளைக்கும் எனக் குறிப்பிடவில்லை. விரிவாக்கத்திற்குப் பிறகு அந்த மரமும் பறவைகளும் என்னாகுமோ.
பதிலளிநீக்குஜங்ஷனில் வெளிப்புறத்தில் பாரம்பர்ய சிலோன் பேக்கரி, வெளிப்புறக் கடைகள் (முந்திரி போன்றவை விற்கும் கடைகள் மற்றும் இனிப்பு கடைகள்) இவைகளும் பாதிக்கப்படுமான்னு தெரியலை
@ அன்பின் நெல்லை..
நீக்கு/// தஞ்சை ரயில் நிலையத்துக்குச் சென்றால் அங்கிருக்கும் மரத்தில் பறவைகள் வந்து சேர்ந்து அதன் கலகல சப்தம் காதைத் துளைக்கும் என.. ///
/// பாரம்பர்ய சிலோன் பேக்கரி, வெளிப்புறக் கடைகள் முந்திரி போன்றவை விற்கும் கடைகள் மற்றும் இனிப்பு கடைகள்.. ///
உண்மை தான்.. இதையெல்லாம் குறித்த வேறொரு பதிவும் பட்டியலில் இருக்கின்றது..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. தஞ்சை ரயிலடி பற்றிய செய்திகளின் தொகுப்பு நன்றாக உள்ளது. அறியாத பல விஷயங்களை அறிந்து கொண்டேன். சுவாமி விவேகானந்தர் அங்கு வந்த நாளை நினைவு கூறும் வண்ணம் இன்றளவும் இருக்கும் செய்தியறிக்கையும் மனதை கவர்ந்தது.
ஒவ்வொரு ஊரின் ரயில், பேருந்து நிலைய மாற்றங்களும், மக்களுக்கு நன்மைகள் தருவதாக அமைந்தால் நல்லதுதான். ஆனால், பாரம்பரியங்களை பார்த்துப் பார்த்து பழகிய மக்களுக்கு அதன் சிறப்புக்கள் மனதை விட்டு அகலாது மனதிற்குள் தங்கி விடும். தாங்கள் தொகுத்த படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. பார்த்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
/// பாரம்பரியங்களை பார்த்துப் பார்த்து பழகிய மக்களுக்கு அதன் சிறப்புக்கள் மனதை விட்டு அகலாது மனதிற்குள் தங்கி விடும். ///
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
தஞ்சை ரயிலடி பற்றிய தகவல்கள் அருமை...
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..
படங்கள் அழகு...
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..
தஞ்சை ரயிலடி விவரங்கள் படங்கள் எல்லாம் அழகு.
பதிலளிநீக்குபழைய ரயில்கள், பழைய கால அட்டவணைகள், என்று மிக அருமையாக தொகுத்து வழங்க்கியதற்கு நன்றி.
ரயில் பயணங்கள் அருமையாக இருந்த காலம்.
என் கணவரின் அத்தை தென்காசியில் ரயிலடி பக்கத்தில் இருந்தார்கள், அந்த அத்தையை தென்காசி சொந்தங்கள் "ரயிலடி ஆச்சி "என்று அன்புடன் அழைப்பார்கள். அத்தை பேர் சொன்னால் தெரியாது ரயிலடி ஆச்சி வீடு என்றால் எல்லோருக்கும் தெரியும்.
என் கணவர் அவர்கள் இருந்த வீட்டை மனதில் கொண்டு வந்து அப்படியே ஓவியம் வரைந்து வைத்து இருக்கிறார்கள் மகன் வீட்டில் இருக்கிறது., முன்பு பதிவு செய்து இருக்கிறேன். ரயிலடி வரும் அந்த ஓவியத்தில்.
தஞ்சை ரயிலடி என்று இல்லை பல ஊர் ரயிலடிகளும் மாற்றங்களை அடைந்து இருப்பதை பார்த்து வருகிறேன்.
/// பழைய ரயில்கள், பழைய கால அட்டவணைகள், என்று மிக அருமையாக தொகுத்து வழங்கியதற்கு நன்றி.
பதிலளிநீக்குரயில் பயணங்கள் அருமையாக இருந்த காலம்.///
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி..
துரை அண்ணா, தஞ்ஜை ரயிலடி பற்றிய விவரங்கள் தொகுப்பு மிக மிகச் சிறப்பு. படங்கள் அட்டவணைகள் அதுவும் பழைய காலத்தவை அனைத்தும் மிக அருமை. தஞ்சை ரயில் நிலையம் சென்று இறங்கி என்று முன்பு நிறைய சென்றிருக்கிறேன்.
பதிலளிநீக்குஆமாம் மரங்கள் இருக்கும் ஆனால் புது திட்டத்தில் மரங்கள் எதையும் காணமே. அடப் பாவிங்களா? அப்ப மரங்கள் எல்லாம் போய்டுமா? பறவைகள் எல்லாம் எங்கு செல்லும்? ஏன் இப்படித் திட்டம் போடறாங்கா? மரங்களை அகற்றாமல் ஏன் யாரும் யோசிக்க மாட்டேன்றாங்க? என்ன Planning படிக்கறாங்க? சரி படிக்கட்டும் அது டிகிரி வாங்க...ஆனால் சுயமா யோசிக்கலாமே! செயல்பாட்டில் எவ்வளவோ அடிப்படைப் படிப்பை வைத்துக் கொண்டு மாற்றி யோசிக்கலாமே! என்னவோ போங்க...அழகான படங்களைப் பார்த்துக் கொண்டே வந்துவிட்டு கடைசியில் திட்டம் என்று கொடுத்திருக்கும் படங்கள் மனதை என்னவோ செய்கின்றன.
கீதா
பெங்களூர் விமான நிலையம் விரிவாக்கம் என்று ஏதோ பாலைவன விமானநிலையம் போன்று இருக்கிறது போகும் வடி அதுவும் விமான நிலையம் வளாகத்துள் நுழைந்ததும் டெர்மினல் ஒன்றிற்கான சாலை இரண்டிற்கான சாலை என்று என்னென்னவோ பிரித்து போட்டிருக்கும் சாலைகள் அனைத்தும் பாலைவனத்தில் இருக்கும் சாலைகள் போல இருக்கின்றன. என்னவோ மனம் வெறிச். விரிவாக்கம், முன்னேற்றம் எல்லாம் மக்கள் வசதிக்குத்தான் அதைக் குறை சொல்ல மாட்டேன். ஆனால் அதில் உருவாக்கப்படும் திட்டங்கள்தான்...
பதிலளிநீக்குதஞ்சை ரயில் நிலையத்திற்குள் நகரும் படிக்கட்டுகள், சௌகரியம்தான் நடக்க முடியாதவர்கள் என்று ...உள்ளில் பல மாற்றங்களை வயதானவர்களுக்கு வசதிகள், நடக்கமுடியாதவர்களுக்கு வசதிகள் என்று கொண்டு வர வேண்டும்தான்..நடை மேடைகள், விரிவாக்கங்கள் பல ரயில்கள் வந்து செல்லும் வசதி என்று...ஆனால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பல விஷயங்களை மனதில்கொள்ள வேண்டும்.
கீதா
துரை அண்ணா உங்க்ள் தளத்தி என் கருத்துகள் வருவதில்லையா? பாருங்க எங்கேயாவது உட்கார்ந்து கொண்டிருக்கான்னு...நேத்து இதுக்கு ரெண்டு கொஞ்சம் பெரிய கருத்துகள் போட்டேனே...
பதிலளிநீக்குதொடர்ந்து பதிவுகள் வாசிக்கிறேனே சில சமயம் மாலை ஆகிவிடுது கருத்து போட
கீதா
வந்திருக்கு பார்த்துவிட்டேன் துரை அண்ணா
பதிலளிநீக்குகீதா
தஞ்சை ரயிலடி காட்சிகள் கண்டு கொண்டோம்.
பதிலளிநீக்குவிரிவாக்கத்தினால் பழமையும் மரங்களும் அழிவது உண்மையே.
இந்த விரிவாக்கத்தினால் பிள்ளையாருக்கு ஆபத்து ஏதும் உண்டோ? தெரியலை. ரொம்பப் பிடிச்ச பிள்ளையார். ஒரு முறை அவசரத்துக்கு அங்கே ரயில்வே ரிடைரிங் ரூமில் தங்கினோம். கீழே டிஃபன் எல்லாம் ரொம்ப நன்றாக இருந்தது.
பதிலளிநீக்கு