வெள்ளி, ஆகஸ்ட் 04, 2023

ஆடி வெள்ளி 3

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 19
வெள்ளிக்கிழமை


நன்று என்று தீது என்று நவிலும் இவ் இரண்டனுள்
     நன்றதே உலகில் உள்ளோர் நாடுவார் ஆதலின்
     நானுமே அவ்விதம் நாடினேன் நாடினாலும்
இன்று என்று சொல்லாமல் நினது திரு உள்ளம் அது இரங்கி
      அருள் செய்குவாயேல் ஏழையேன் உய்குவேன்
      மெய்யான மொழி இஃது உன் இதயம் அறியாதது உண்டோ..
குன்றம் எல்லாம் உறைந்து என்றும் அன்பர்க்கு அருள்
      குமார தேவனை அளித்த குமரி மரகத வருணி
      விமலி வயிரவி கருணை குலவு கிரிராச புத்ரி
மன்றல் மிகு நந்தன வனங்கள் சிறை அளி முரல
     வளர் திருக் கடவூரில் வாழ் வாமி சுபநேமி புகழ் நாமி
      சிவசாமி மகிழ் வாமி அபிராமி உமையே!.. 4
அபிராமி திருப்பதிகம் -

முக்கனிகள்


பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற் றோர்தெய்வம் வந்திப்பதே?.. 13

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நற்றிசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க் கெளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே.. 14


தண்ணளிக் கென்று முன்னே பலகோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?
பண்ணளிக்கும் சொற் பரிமள யாமளைப் பைங்கிளியே.. 15
அபிராமி அந்தாதி -
-: அபிராமி பட்டர் :-
**
ஓம் சக்தி ஓம் சக்தி 
ஓம் சக்தி 
ஓம்
***

13 கருத்துகள்:

  1. அபிராமி அம்மனின் தாள் பணிவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. அம்மனின் தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  3. அபிராமி அம்மன் பாடலை பாடி வணங்கி கொண்டேன்.
    படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. ஆடி வெள்ளி அம்மன் தரிசனம் பெற்றுக் கொண்டேன். பாடல்கள் இனிமை. அனைவரையும் அன்னை நலமுற காக்க நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. ஆடிவெள்ளி அபிராமி பாடல்கள் சிறப்பு தரிசனம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..