திங்கள், ஜூலை 31, 2023

ஆடித் தவம்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 15
திங்கட்கிழமை


இன்று
திருநெல்வேலி - 
சங்கரன்கோயிலில்  
ஸ்ரீ கோமதி அம்மன் 
ஆடித் தவத் திருக்கோலம்..

ஸ்ரீ சங்கர நாராயணர்  
- என, எம்பெருமான்
திருக்காட்சி 
நல்கிய திருநாள்..

அருளாளர் திருநோக்கில் 
சங்கர நாராயணர் 
திருக்கோலம் பற்றிய 
திருப்பாடல்கள்..


அரன் நாரணன் நாமம்  ஆன்விடை புள்ஊர்தி
உரைநூல் மறை உறையும் கோயில் வரைநீர்
கருமம் அழிப்புஅளிப்பு  கையதுவேல் நேமி
உருவம்எரி கார்மேனி ஒன்று.. 2086
-: பொய்கையாழ்வார் :-

தாழ்சடையும் நீள்முடியும்  ஒண்மழுவும் சக்கரமும்
சூழ்அரவும் பொன்நாணும் தோன்றுமால் சூழும்
திரண்டு அருவி பாயும்  திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து.. 2344
-: பேயாழ்வார் :-


இடம் மால் வலம் தான் இடப்பால் துழாய் வலப்பால் ஒண்கொன்றை வடமால் 
இடம் துகில் தோல் வலம் ஆழி இடம் வலம் மான் இடமால் கரிதால் வலம் சேது இவனுக்கெழில் நலஞ்சேர் குடமால் இடம் வலம் கொக்கரை யாம் எங்கள் கூத்தனுக்கே..
-: பொன்வண்ணத்து அந்தாதி :-
(சேரமான் பெருமாள் நாயனார்


மாதொரு பாலும் மாலொரு பாலும் மகிழ்கின்ற
நாதனென்று ஏத்தும் நம் பரன் வைகும் நகர் போலும்
மாதவி மேய வண்டிசை பாட மயில் ஆடப்
போதலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவம்மே.. 1/91/2

செய்யருகே புனல் பாய ஓங்கிச் செங்கயல் பாயச் சிலமலர்த் தேன்
கையருகே கனிவாழை ஈன்று கானல் எல்லாம் கமழ் காட்டுப் பள்ளி
பையருகே அழல் வாய ஐவாய்ப் பாம்பணை யான் பணைத் தோளி பாகம்
மெய்யருகே உடையானை உள்கி விண்டவர் ஏறுவர் மேலுலகே..

மண்ணுமோர் பாகம் உடையார் மாலுமோர் பாகம் உடையார்
விண்ணுமோர் பாகம் உடையார் வேதம் உடைய நிமலர்
கண்ணுமோர் பாகம் உடையார் கங்கை சடையில் கரந்தார்
பெண்ணுமோர் பாகம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே..
-: திருஞானசம்பந்தர் :-


ஆவியாய் அவியும் ஆகி அருக்கமாய்ப் பெருக்கம் ஆகிப்
பாவியர் பாவம் தீர்க்கும் பரமனாய்ப் பிரமன் ஆகிக்
காவியங் கண்ணளாகிக் கடல் வண்ணன் ஆகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற்றூரனாரே..


பையரவு அசைத்த அல்குல் பனிநிலா எறிக்கும் சென்னிச்
மையரிக் கண்ணியாளும் மாலும் ஓர் பாகம் ஆகிச்
செய்யரி தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே
கையெரி வீசி நின்று கனல் எரி ஆடுமாறே.. 4/22/4

எரியலாது உருவம் இல்லை ஏறு அலாது ஏறல் இல்லை
கரியலால் போர்வை இல்லை காண் தகு சோதியார்க்குப்
பிரிவிலா அமரர் கூடிப் பெருந்தகைப் பிரான் என்றேத்தும்
அரியலால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே.. 4/40/5
-: திருநாவுக்கரசர் :-


ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

  1. சங்கரநாராயணரை துதிப்போம்.  சங்கடங்கள் யாவையும் நீக்கிக் கொள்வோம்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான பாசுரங்களை எடுத்து எழுதியிருக்கிறீர்கள். ஆடித் தவசுத் திருக்கோலம் என்பார்கள்.

    பதிலளிநீக்கு
  3. ஆடித்தவம் - அரியும் அரனும் - பாசுரங்களுடன் பதிவு சிறப்பு

    கீதா

    பதிலளிநீக்கு
  4. சங்கரநாராயணர் திருக்கோலங்கள் கண்டு வணங்கினோம்.

    பதிலளிநீக்கு
  5. சங்கரநாரயணர், கோமதி அம்மா எல்லோரையும் நலமாக வைக்கட்டும். பாடல் பகிர்வு அருமை. பாடல்களிய பாடி வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அழகிய படங்களில் சங்கர நாராயணரை தரிசித்துக் கொண்டேன். அடியார்களின் பாடல்களைப் பாடி துதித்து வணங்கி கொண்டேன். சங்கர நாராயணயரும், அன்னை கோமதி அம்மனும் அனைவரையும் நலமாக வாழ வைத்திட பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..