நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 16
செவ்வாய்க்கிழமை
பயணத்தின்போது நடுத்தர வயதுடைய தம்பதியினர் அறிமுகம்..
" கோயிலுக்கும் பஸ் ஸ்டாப்பிற்கும் எவ்வளவு தூரம்?.. "
" கோயில் வாசல்.. லயே பஸ் நிற்கும்.. "
" நீங்களும் அங்கேதான் வருகின்றீர்களா?.. "
" நாங்கள் தேப்பெருமா நல்லூர் செல்கின்றோம்.. "
" அங்கே என்ன விசேஷம்?.. "
" மறுபிறவி நீக்கும் கோயில் ங்கறது தலபுராணம்.. "
" ரொம்ப தூரமா?.. "
" கொஞ்ச தூரம் தான்.. மினி பஸ் இருக்கின்றது.. "
திருநாகேஸ்வரத்திற்கு வந்தாயிற்று..
இறங்கி விசாரித்த பிறகு தான் தெரிந்தது - மினி பஸ் இயங்கவில்லை என்பது..
நாங்கள் தேப்பெருமா நல்லூரை நோக்கி நடக்க முற்பட்டபோது - அந்த தம்பதியர் தேப்பெருமா நல்லூருக்கு ஆட்டோ பேசி முடித்து - எங்களையும் வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டனர்..
பத்து நிமிடத்தில் கோயிலைச் சென்றடைந்ததும் ஆட்டோ பயணத்திற்கான தொகையை நாங்கள் கொடுக்க - அவர்கள் வாங்கிக் கொள்ள மறுத்தனர்.. முழுத் தொகையையும் கொடுப்பதில் அவர்கள் முனைப்பாக இருந்தனர்..
யாருக்கும் சிரமம் தரக் கூடாது என்ற எண்ணத்தில் - அன்புடன் ஒரு பங்கைக் கொடுத்து, நன்றி சொல்லி விட்டு நாங்கள் கோயிலுக்குள் சென்றோம்..
தமது செலவில் யாரையாவது கோயிலுக்கு ஆற்றுப்படுத்த வேண்டும் என்பது அவர்களுடைய விருப்பம்.. எவருக்கும் சிரமம் தரலாகாது என்பது எங்களுடைய இலக்கு..
அதன்பின்
அரை மணி நேரம் கழிந்த நிலையில் அவர் மட்டும் எதிர்ப்பட்டார்..
" ஸ்வாமி தரிசனம் ஆயிற்றா.. "
" அபிஷேகம் முடிந்த பிறகு தான் நடை திறக்கப்படுமாம்.. "
ஒரு புன்னகை..
அதன்பிறகு அவர்களைப் பார்க்கவே இல்லை..
உண்மையில், நாங்கள் அவர்களோடு சேர்ந்து பயணிக்காமல் நடந்திருந்தால் அரை மணி நேரம் ஆகியிருக்கும்.. அந்த அளவுக்கு உடல் பலவீனம் இல்லை என்றாலும் - காலில் வலி மிகுந்திருக்கும்..
ஏன் நீங்கள் ஆட்டோ ஏறிச் செல்ல மாட்டீர்களா?.. என்று நீங்கள் யாரும் கேட்டால் -
சொற்ப தூரம்.. இதற்கெல்லாமா ஆட்டோ!?.. - என்ற பதில் தான்..
திருநாகேஸ்வரத்திற்கு - என்று வந்தவர்கள் முன் அறிமுகம் இல்லாத எங்களுடன் தேப்பெருமாநல்லூர் தரிசனத்திற்கு வந்ததையும் எங்களுக்கான பயணச் செலவை ஏற்றுக் கொள்ள முனைந்த அன்பினையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள இயலவில்லை..
தலத்தை எடுத்துச் சொல்லியதற்காக - எங்களுடன் கோயிலுக்குத் துணையாய் வந்த அன்பினை என்ன என்று சொல்வது!..
ஸ்ரீ அகத்தியர் லோபாமுத்ரை பாபநாசம் நெல்லை |
கோயிலில் கூடியிருப்பவர்களுள் யார் யார் தேவ ரூபம்.. யார் யார் ரிஷி ரூபம்.. - என்பதை யாரறிவார்?..
எல்லாம் சிவன் என நின்றாய் போற்றி!..
திருநாவுக்கரசு ஸ்வாமிகளது திருவாக்கு தான் நினைவுக்கு வருகின்றது..
இக்கோயிலில் சொல்லப்படுகின்ற தலபுராணத்தில் முக்கியமான விஷயம் - அகத்திய மாமுனிவர் இங்கே வந்தும் அவரால் இறைவனை தரிசிக்க இயலவில்லை.. என்பது..
ஸ்வாமியின் திருமணத்தின் போது சகலரும் கயிலாயத்தில் கூடியதும் தென்முனை உயர்ந்து வடமுனை தாழ்ந்து விட்டது..
அந்த வேளையில் உலகை நிலைப் படுத்துவதற்காக
ஈசன் எம்பெருமான் - ஸ்ரீ அகத்திய முனிவரை கும்பத்தில் இருந்து தோற்றுவித்தார்.. அத்துடன் நினைக்கும் இடத்தில் தரிசனம் நல்குவோம்.. - என்ற வரத்தையும் வழங்கினார் - என்பது நாம் எல்லாம் அறிந்ததே..
அந்த வகையில் - அகத்தியர் பெருமான்
இத்தலத்தில் இறைவனை தியானிக்க, அப்போது
காட்சியளித்த அம்மையப்பனிடம் - இங்கே தரிசனம் செய்யும் மானிடருடைய பாவங்களைப் பொறுத்தருளி மறு பிறப்பில்லாத வரத்தினை நல்கிட வேண்டும்.. - என்று,
அகத்தியர் விண்ணப்பம் செய்து கொண்டிருப்பார் - என்றே என் மனதிற்குத் தோன்றுகின்றது...
அன்றைக்கு முருகன் கோயிலில் என் மனைவி சக பெண்களுடன் இந்த ஆலயம் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது - " எங்களையும் தேப்பெருமாநல்லூருக்கு அழைத்துச் செல்லுங்கள்.. " - என்று, சிலர் கேட்டுக் கொள்ள - அம்மையப்பனின் அன்பிற்காக காத்திருக்கின்றோம்..
முதல் முறையாக நாகத்திக்குச் சென்று வந்த பிறகு ஸ்ரீ அகத்தியர் பற்றிய சிந்தனை மனதில் எழுவதும் செய்திகள் கிடைப்பதுமாக இருந்த நிலையில் பிள்ளையார்பட்டி கோயிலில் ஸ்ரீ அகத்தியர் லோபாமுத்ரை தரிசனம் கிடைக்கப் பெற்றதும் அடுத்து ஸ்ரீ அகத்தியர் தொடர்புடைய தேப்பெருமாநல்லூர் சிவாலய தரிசனம் கிடைத்ததும் ஆச்சரியம் தான்..
அவனருளால் தான் அவன் தாளை
வணங்க வேண்டும்..
அதற்கும் ஒரு குருநாதர் வேண்டும்..
குருவே வருக வருக!..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
//தமது செலவில் யாரையாவது கோயிலுக்கு ஆற்றுப்படுத்த வேண்டும் என்பது அவர்களுடைய விருப்பம்.. எவருக்கும் சிரமம் தரலாகாது என்பது எங்களுடைய இலக்கு//
பதிலளிநீக்குஅருமை ஜி
வாழ்க வளமுடன்
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..
நீக்குஅருமை ஐயா...
பதிலளிநீக்குஓம் நம சிவாய...
ஓம் நம சிவாய..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..
அவர்களுடைய எண்ணமும் சிறந்தது உங்களுடைய எண்ணமும் சிறந்த எண்ணமே. பாதி பாதி ஆகிவிட்டதே நீங்களும் கொடுத்து...
பதிலளிநீக்குகோயில் பற்றியும் அகத்தியர் பற்றிய விஷயங்களும் சிறப்பு. சன்னதி விமானம் படம் அழகு.
கீதா
உண்மை தான்..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
'அவன் அருளால் அவன் தாள்...'உங்களுக்கு கிடைத்த தரிசனத்தால் நாங்களும் தரிசிக்கும் பாக்கியம் பெற்றோம்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குநாங்களும் தரிசிக்கும் பாக்கியம் பெற்றோம்
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
கோவிலைப் பார்க்கும் எண்ணம், ஆசை வருகிறது. எப்போது முடியுமோ?
பதிலளிநீக்குநிச்சயமாக தரிசனம் கிடைக்கும்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்....
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. அருமையான கோவில் தரிசனம் கிடைக்கப் பெற்றேன். இறைவனை முழு மனதில் துல்லியமாக காண்பதற்கு குருநாதர் துணை அவசியம். அகத்திய மாமுனிவர் தங்களுக்கு துணையாக இருப்பதை உணர்கிறேன். குருவே துணை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இதை இன்னொரு முறை படித்தபிறகு கருத்திடுகிறேன். இறை தரிசனம் அவன் கொடுக்கவேண்டியது.
பதிலளிநீக்கு