நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 25
சனிக்கிழமை
பங்குனிச் சுவாதி
(பெரிய புராணத் திருப்பாடல்களுடன் பதிவு)
ஈசன் எம்பெருமானுக்கு
தயிர் அன்னத்துடன் மாங்கனியும் பரிமாறி -
காரைக்கால் அம்மையார் எனப் புகழப் பெற்ற புனிதவதியார் - ஈசன் எம்பெருமானின் திருவடிக் கீழ் இருக்கப் பெற்ற நாள்..
தாங்கிய வனப்பின் நின்ற தசைப் பொதி கழித்து உன்பால் ஆங்குநின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்குப் பாங்குற வேண்டும் என்று பரமனின் தாள் - பரவி நின்ற வண்ணமே,
ஊன் உடைய வனப்பை எல்லாம் உதறி விட்டு எலும்பு உடம்பேயாகி வானமும் மண்ணும் எல்லாம்
வணங்குகின்ற பேய் வடிவம் ஆகினார் அம்மையார்..
அந்நிலையில் - திருக்கயிலாய
மாமலைக்கு சென்று அங்கு கால் வைப்பதற்கு அஞ்சியவராக தலையால் நடந்து சென்று அம்மையப்பனைத் தரிசிக்கின்றார்..
அங்கே ஈசன் அருளியபடி,
துத்தம் கைக்கிளை விளரி தாரம் உழை இளி ஓசைபண் கெழுமப் பாடிச்
சச்சரி கொக்கரை தக்கை யோடு தகுணிதம் துந்துபி தாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்தோல்
தமருகம் குடமுழா மொந்தை வாசித்து அத்தனை விரவினோடு ஆடும் எங்கள் அப்பன் இடம்திரு ஆலங்காடே..
(காரைக்கால் அம்மையார்)
இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போது உன்
அடியின்கீழ் இருக்க என்றார்..
( பெரிய புராணம்)
காரைக்கால் அம்மையார்
திருவடிகள் போற்றி.. போற்றி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
போற்றி பாடுவோம் எம்பெருமானை. பற்றிக் கிடப்போம் அவர்தம் திருவடிகளை.
பதிலளிநீக்குஉண்மை. உண்மை..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
ஓம் நம சிவாய..
புனிதவதியார் கதை மிகச் சுருக்கமாக இருக்கிறது. நன்று
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி..
ஓம் நம சிவாய..
ஓம் நமசிவாய
பதிலளிநீக்குவாழ்க வையகம்
மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஜி..
ஓம் நம சிவாய..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை காரைக்கால் அம்மையாரின் கதை பகிர்வுக்கு நன்றி.
/பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் /
அருமையான வரிகள். சிவன் அடியார்களின் எண்ணங்கள்தான் நமக்கு உறுதுணை. அவர்களை நாளும் தொழுவதில் ஈசனே மகிழ்ந்து நமக்கருள் புரிவார் .
ஓம் நமசிவாய.. 🙏.. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நீக்கு///அடியார்களின் எண்ணங்கள்தான் நமக்கு உறுதுணை. அவர்களை நாளும் தொழுவதில் ஈசனே மகிழ்ந்து நமக்கருள் புரிவார் .///
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி..
ஓம் நம சிவாய..
அருமை...
பதிலளிநீக்குஓம் நம சிவாய...
ஓம் நம சிவாய..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..
பதிவு அருமை.
பதிலளிநீக்குகாரைக்காலம்மையார் பாடலை பாடி இறைவனிடம் வேண்டிக் கொண்டேன்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி..
ஓம் நம சிவாய..