வெள்ளி, ஏப்ரல் 07, 2023

தரிசனம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 17
வெள்ளிக்கிழமை

இன்று 
ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் 
தரிசித்த திருத்தல தரிசனம்..

 நன்றி
பன்னிரு திருமுறை
(படங்கள் : விக்கி)


திருவெண்ணெய் நல்லூர்
(நடுநாட்டுத் திருத்தலம்)

சுந்தரருக்கு ஈசன் 
தன்னைத் தான் உணர்த்திய தலம்


இறைவன் 
ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர்


அம்பிகை
ஸ்ரீ வேற்கண்ணியம்மை

தலவிருட்சம் மூங்கில்
தீர்த்தம் தண்ட தீர்த்தம்

பித்தாபிறை சூடீபெருமானே அரு ளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத் துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்
நல்லூர் அருட் துறையுள்
அத்தாஉனக் காளாய் இனிஅல்லேன் எனலாமே.. 7/1/1

நாயேன்பல நாளும் நினைப்பின்றி மனத் துன்னைப்
பேயாய்த்திரிந் தெய்த்தேன் பெறலாகா அருள் பெற்றேன்
வேயார்பெண்ணைத் தென்பால் வெண்ணெய்
நல்லூர் அருட் துறையுள்
ஆயாஉனக் காளாய் இனி அல்லேன் எனலாமே.. 7/1/2


 திருப்பூவணம்
(பாண்டிய நாட்டுத் திருத்தலம்)


இறைவன்
ஸ்ரீ புஷ்பவனேசர்
அம்பிகை
ஸ்ரீ சௌந்தரநாயகி

தலவிருட்சம் பலா
தீர்த்தம் வைகை

திருவுடையார் திருமால் அய னாலும்
உருவுடை யார்உமை யாளையோர் பாகம்
பரிவுடை யார்அடை வார்வினை தீர்க்கும்
புரிவுடை யார்உறை பூவணம் ஈதோ.. 7/11/1

எண்ணி யிருந்து கிடந்தும் நடந்தும்
அண்ண லெனாநினை வார்வினை தீர்ப்பார்
பண்ணிசை யார்மொழி யார்பலர் பாடப்
புண்ணிய னார்உறை பூவணம் ஈதோ.. 7/11/2


 திருக்கழிப்பாலை
(காவிரி வடகரைத் தலம்)


இறைவன்
ஸ்ரீபால்வண்ண நாதர்
அம்பிகை
ஸ்ரீ வேதநாயகி

தலவிருட்சம் வில்வம்
தீர்த்தம் கொள்ளிடம்

செடியேன் தீவினையில் தடுமாறக் கண்டாலும்
அடியான் ஆவஎனாது ஒழிதல் தகவாமே
முடிமேல் மாமதியும் அரவும் உடன்துயிலும்
வடிவே தாம் உடையார் மகிழுங் கழிப் பாலையதே.. 7/23/1

எங்கே னும் இருந்துன் னடியேன்உ னைநினைந்தால்
அங்கே வந்தென்னொடும் உடனாகி நின்றருளி
இங்கே என்வினையை யறுத்திட்டு எனையாளுங்
கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே.. 7/23/2


திருமழபாடி
(காவிரி வடகரைத் தலம்)
நந்தி கல்யாணத் தலம்


இறைவன்
ஸ்ரீ வைத்ய நாதர்
அம்பிகை
ஸ்ரீ சுந்தராம்பிகை

தலவிருட்சம் பனை
தீர்த்தம் கொள்ளிடம், லக்ஷ்மி தீர்த்தம்


பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.. 7/24/1


கண்ணாய் ஏழுலகுங் கருத்தாய அருத்தமுமாய்ப்
பண்ணார் இன் தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே
மண்ணார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அண்ணா நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.. 
7/24/5


திருக்கற்குடி
( உய்யக்கொண்டான்)
(காவிரி தென்கரைத் தலம்)
சிறிய குன்றின் மீது கோயில்..

இறைவன் 
ஸ்ரீ உஜ்ஜீவநாதர்
அம்பிகை 
ஸ்ரீ அஞ்சனாட்சி

தலவிருட்சம் வில்வம்
தீர்த்தம் ஞானவாவி


விடையாருங் கொடியாய் வெறியார் மலர்க் கொன்றையினாய்
படையார் வெண்மழுவா பரமாய பரம்பரனே
கடியார் பூம்பொழில் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற
அடிகேள் எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே.. 7/27/1

மறையோர் வானவரும் தொழுதேத்தி வணங்க நின்ற
இறைவா எம் பெருமான் எனக்கு இன்னமு தாயவனே
கறையார் சோலைகள் சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
அறவா அங்கணனே அடியேனையும் அஞ்சலென்னே.. 7/24/2


சுந்தரர் திருவடிகள் போற்றி

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. புனித வெள்ளியில் புண்ணிய க்ஷேத்திரங்களில் தரிசனம் அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      ஓம் நம சிவாய..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. எல்லா கோவில்களின் கோபுர தரிசனங்களும் பெற்றுக் கொண்டேன். ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறைவனை தரிசித்து மெய்யுருகி பாக்கள் பாடிய திருத்தலங்களை நானும் அவரின் பாடல்களை பாடி, தரிசித்து வணங்கிக் கொண்டேன். தாயும், தந்தையுமான எம்பெருமான் சர்வேஷ்வரனும், உமையவள் அன்னையும் அனைவரையும் நோய் நொடிகளின்றி நலமாக காத்தருள வேண்டி, மனதாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. // அனைவரையும் நோய் நொடிகளின்றி நலமாக காத்தருள வேண்டி, மனதாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்..//

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      ஓம் நம சிவாய..

      நீக்கு
  3. இன்றைய தரிசனம் நன்று வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      ஓம் நம சிவாய..

      நீக்கு
  4. ின்றுதான் திருக்கற்குடி தலம் கேள்விப்படறேன். திருபூலணம் தற்போதைய திருபுவனமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருகற்குடி இன்றைக்கு திருச்சிக்கு அருகிலுள்ள உய்யகொண்டான்..

      திருபூவணம் மதுரைக்கு அருகில் உள்ளது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி நெல்லை..

      ஓம் நம சிவாய..

      நீக்கு
  5. சிவத்தலங்களுக்கு என்று யாத்திரை வசதி இருக்கிறதா? யார் நடத்துகிறார்கள்? நல்ல குழுவாக அமையுமா? முனைவர் ஜம்புலிங்கம் சாருக்கும் தெரிந்திருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்கள் ஒரு கட்டமைப்புடன் சிவ தலங்களுக்கு சுற்றுலா சொல்கின்றார்..

      அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொள்க..

      மகிழ்ச்சி.. நன்றி..
      ஓம் நம சிவாய..

      நீக்கு
  6. வெள்ளி நாளில் பாடல் பெற்ற சிவதலங்களை தரிசனம் செய்து கொண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      ஓம் நம சிவாய..

      நீக்கு
  7. மிக அருமையான சிவத்தலங்கள் தரிசனம்.
    சுந்தரர் தேவாரம் பாடி தரிசனம் செய்து கொண்டேன்.
    படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      ஓம் நம சிவாய..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..