வியாழன், ஏப்ரல் 20, 2023

தரிசனம் 2

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 7
வியாழக்கிழமை

தஞ்சை பெரிய கோயிலில் 
எடுக்கப்பட்ட படங்கள் தொடர்கின்றன..

சோழர்களின் சிறப்பாக வானளாவித் திகழ்வது  ராஜராஜேச்சுரம் எனப்படும் தஞ்சை பெரிய கோயில்... 

ஸ்ரீ ராஜராஜ சோழ மாமன்னரின்  பத்தொன்பதாவது  ஆட்சியாண்டில் (1004) துவங்கிய திருப்பணி
 இருபத்தைந்தாவது (1010) ஆட்சியாண்டில் முடிவுற்றது..


நான் படித்த காலத்தில் 
நந்தி மண்டபம் நாயக்க மன்னர்களால் (பதினேழாம் நூற்றாண்டில்) அமைக்கப்பட்டதாக இருந்தது.. 
இப்போது நந்தியே நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது என்று சொல்லப்படுகின்றது..

ஸ்ரீமஹாலக்ஷ்மி

ஸ்ரீ அண்ணாமலையார

யாளி வரிசை






ஸ்ரீ க்ஷேத்ர விநாயகர்

இவரே ராஜராஜ சோழனால் அமைக்கப்பட்ட
விநாயகர்..

இவருக்கே வாழைப்பழக் கணக்கு


ஸ்ரீ கணபதிக்கு என்று ராஜராஜ சோழன் வழங்கிய வாழைப்பழ நிவேதனக் கணக்கின் கல்வெட்டு தான் மேலே உள்ளது..


இந்த லிங்கங்கள் சரபோஜி மன்னரால் அமைக்கப்பட்டவை..
திருச்சுற்றில் உள்ள லிங்கங்கள் 252.
நான்கு முறை வலம் வந்தால் நாம் தரிசிப்பவை 1008..

நவலிங்கங்கள் (நவகிரகங்கள்)

 நூற்றெட்டு லிங்கங்கள்


திருச்சுற்று மாளிகையில் காணப்படும் ஓவியங்கள் பிற்காலத்தில் தீட்டப்பட்டவை..



ஸ்ரீ தளிக்குளத்தார்

திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற தஞ்சை
தளிக்குளத்தார் இவரே..
சித்தர் வழிபாட்டில் உணரப்பட்ட செய்தி இது..

ஸ்ரீ லோகநாயகி




ஸ்ரீ மீனாட்சி திரு அவதாரம்



காணொளிக்கு நன்றி
ஸ்வாமி ஸ்டுடியோ



ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

16 கருத்துகள்:

  1. கோவிலுக்கு வந்து சென்ற உணர்வு. இந்த மாதம் இரண்டு நாட்கள் தஞ்சை வரலாம் என்று ஒன்றாம் தேதி வாக்கில் எண்ணம் இருந்தது. அடித்த வெயிலும், வீட்டின் விசேஷங்களும் அதை செயல்படுத்த முடியாமல் செய்து விட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெயில் மிகவும் அதிகம்.. சற்று தணிந்ததும் வரலாம்.. அது தான் நல்லது..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. கோயிலைப்பற்றிய விபரங்கள் சிறப்பு.

    படங்களும் அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. குலதெய்வ கோயில் திருப்பணியில் மும்முரமாக இருக்கின்றீர்கள்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. அனைத்து படங்களும் அருமை...

    ஓம் நம சிவாய...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

      நலம் வாழ்க..
      ஓம் நம சிவாய..

      நீக்கு
  4. படங்கள் எல்லாம் மிக அழகு, துரை அண்ணா. தஞ்சை கோயில் பற்றி சொல்லவும் வேண்டுமா!!

    காணொளியையும் ரசித்தேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. தஞ்சை கோவில் படங்களும், காணொளிகளும் மிக நன்றாக இருக்கிறது. தினம் ராஜ ராஜன் வணங்கியது தளிகுளத்தாரை என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. தளிக்குளம் கோயில் தான் தஞ்சைப் பெருங்கோயில் ஆயிற்று..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. பின்னூட்டம் வந்து விட்டதா?

    பதிலளிநீக்கு
  7. கோவில் வரலாறுகள் எப்படி இருந்தாலும் காலத்தை வென்று நிலைத்து நிற்கிறது. படங்கள் எல்லாம் நன்றாக எடுத்து இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. // கோயில் வரலாறுகள் எப்படி இருந்தாலும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றது..//

      சத்தியமான வார்த்தைகள்.

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  8. இப்படி ஒரு கட்டுமானத்தோடு கூடிய கோயிலை இனி படைக்க முடியுமா? சந்தேகம் தான்! ஏனெனில் அப்போதெல்லாம் மொழிப் பற்று என்னும் பெயரில் மொழி நிந்தனை இல்லை. எல்லோரும் எல்லா மொழிகளையும் கற்று வந்திருக்கிறார்கள் என்பது இத்தகைய கோயில்களின் மூலம் நிதரிசனமாகத் தெரிகிறது.வடமொழி படிக்காமலேயே கம்பனால் ராமாயணமும் வில்லிபுத்தூராரால் பாரதமும் எழுதி இருக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
  9. பெரிய கோவில் என்ற பெயருக்கு ஏற்ற விஸ்தாரம் சிற்பங்கள் ,ஓவியங்கள் , சிலைகள் என மனதை நிறைக்கும் இடம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..